சிறுநீரக கற்கள்  உருவாகாமல் இருக்க தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்

இன்றைய நாட்களில் பலரும் சிறுநீரக கற்களை பற்றி  பேசுகிறோம். இது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனை உங்களுக்கு இருந்தால் அதனை போக்குவதற்கான உணவு முறையை அறிந்து கொள்ளுங்கள்.

சிறுநீரக கற்கள்  உருவாகாமல் இருக்க தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்

சிறுநீரக கற்கள் பல வகையாக பிரிக்கப்படுகின்றன. அவை, கால்சியம் பாஸ்பேட், சிஸ்டின் , கால்சியம் ஆக்ஸலேட், யூரிக் அமிலம் போன்றவையாகும். இவற்றுள் கால்சியம் ஆக்ஸலேட் மனிதர்களிடையில் பொதுவாக காணப்படும் வகையாகும். ஆகவே, இதற்கு முன், நீங்கள் சிறுநீரக கற்களால் அவதி பட்டவரா? அல்லது தற்போது, உங்களுக்கு இருக்கும் சிறுநீரக தொடர்பான வேறு உபாதைகள் சிறுநீரக கற்களை உருவாக்கும் என்ற எண்ணம் கொண்டவரா? உங்களுக்கான பதிவு தான் இது. உங்களுக்காகவே சில உணவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன . இவற்றை நீங்கள் உங்கள் உணவில் இணைக்காமல் இருப்பதால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க முடியும்.
மேலும் நீங்கள் உண்ணும் உணவில் சோடியம் மற்றும் சர்க்கரை அளவு குறைவாக இருத்தல் வேண்டும். 

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வேறு என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் இப்போது காணலாம்.

காபின் / சோடா :
சிறுநீரக கற்களால் அவதி படுவோர், திரவ பொருட்களை அதிகம் பருகுவது முக்கியம். ஆனால், அதில் காபின் கலந்திருப்பது தீமையை விளைவிக்கும். ஒரு நாளில் 2 கப் காபி, டீ மற்றும் குளிர்பானங்களுக்கு மேல் பருகக் கூடாது. அதன் அளவு 250-500 மிலி வரை இருக்கலாம். அதிக அளவு காபின் பருகுவது, சிறுநீரகத்தை சீரழிக்கும். மேலும் நீங்கள் நீர்சத்தை இழக்க நேரும்.

சோடியம் அதிகம் உள்ள உணவுகள் :
பதப்படுத்தப்பட்ட மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட உணவு அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் அவற்றை கெடாமல் வைப்பதற்காக அதிக அளவு உப்பு சேர்க்கப்படுகிறது. மேலும், உண்ணும் எந்த உணவிலும் குறைந்த அளவு உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.

புரதம் அதிகம் உள்ள உணவுகள்:
புரதம் அதிகம் உள்ள உணவுகளான, இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை மிதமான அளவு எடுத்துக் கொள்வது நல்ல பலனை தரும். இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது, இறைச்சி  உண்ணும் போது, மெல்லிய இறைச்சியை உண்ணுவது அவசியம். அதுவும் குறைந்த எண்ணெய் பயன்படுத்தி சமைக்க வேண்டும் அல்லது எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்து உண்ணலாம். அதிகமான காரம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் :
கொழுப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவு வகைகளான சீஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குறைந்த கொழுப்பு பால் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். காலை உணவில் ஆடை நீக்கப்பட்ட பாலை பருகலாம். அதிக கொழுப்பு உணவை தவிர்க்க வேண்டும். இல்லையேல், அவை உடலில் தங்க நேரிடும். 

கால்சியம் உணவுகள் :
உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருக்குமானால், கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருக்கும் உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். அன்டசிட்களில் அதிக அளவு கால்சியம் உள்ளது. ஆகவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இருந்தாலும், கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை மிக குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு சிரமும் இல்லை.  மீன் எண்ணெய் அல்லது வைட்டமின் டி மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது. ஏனென்றால், சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு இவை பாதிப்பை ஏற்படுத்தலாம்.
     
ஆக்ஸலேட் அதிகம் உள்ள உணவுகள்:
கால்சியம் ஆக்சலேடால் உங்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகியுள்ளது என்றால், நிச்சயமாக ஆக்ஸலேட் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்க்க  வேண்டும். டீ, காபி, பீட் ரூட், ஸ்குவாஷ், சர்க்கரை வள்ளி கிழங்கு, பசலை கீரை, தக்காளி சூப், கேனில் அடைக்கப்பட்ட பழங்கள், சாலட், ஸ்ட்ராபெர்ரி, போன்றவை இவ்வகை உணவுகளாகும். இது தவிர, சாக்லெட், டோபு , நட்ஸ் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். 

அல்கஹால் :
மதுவிற்கு, சிறுநீரக கற்கள் உருவாக்கத்தில் எந்த ஒரு நேரடி தொடர்பும் இல்லை. ஆனால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும் தன்மை மதுவிற்கு உண்டு. அல்கஹாலில் இருக்கும் ப்யுரின் என்ற கூறு, யூரிக் அமில கற்கள் உருவாக காரணமாக இருக்கலாம். இது தவிர, மது அருந்துவதால் சிறுநீரக செயல்பாடு சேதமடையும் வாய்ப்புகள் உண்டு.

அன்கோவி :
அன்கோவி என்ற கொழுப்பு மீன் வகை, உண்பதற்கு மிக சுவையானதாக இருந்தாலும், இவற்றால் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆகவே, சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இந்த மீனை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

அஸ்பரகஸ் :
அஸ்பரகஸ் பொதுவாக சிறுநீர் பிரிப்பிற்கு பயன்படுத்தப்படும். ஆகவே சிறுநீரக கற்கள் இருக்கும்போது அதனை தவிர்ப்பது நல்லது.

பேக்கிங் ஈஸ்ட் :
யூரிக் அமில கற்களால் அவதிப்படும்போது பேக்கிங் ஈஸ்டை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இதில் அதிக அளவு ப்யுரின் உள்ளது. ஈஸ்டை தவிர, காலி பிளவர் , கல்லீரல் இறைச்சி, சிறுநீரக இறைச்சி, காளான், ஆலிவ் எண்ணெய் மற்றும் சரடின் என்ற மீன் போன்றவற்றை அதிக அளவு உட்கொள்ளகூடாது.

சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். அவை,
1. ஒவ்வொரு உணவிலும் 85கிராம் அளவிற்கு மிகாமல் இறைச்சியை உட்கொள்ள வேண்டும். 
2. ஐஸ் க்ரீம், பொறித்த உணவுகள், சாலட், போன்றவற்றை மிக குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. 
3. போதுமான அளவு தண்ணீர் பருகுவது நல்லது.
4. கர்போஹைட்ரெட் அதிகம் உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, லெமனேட் போன்றவற்றை போதுமான அளவு எடுத்துக் கொள்வதால், சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும். 
5. இறுதியாக, சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் தவறாமல், மருத்துவரிடம் பரிசோதித்து, மருந்துகளை  சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.