பளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலுக்கு ஜெலட்டின் ஹேர் மாஸ்க்
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தல் போன்றவற்றை பாதுகாப்பது என்பது கடினமான செயலாக இருந்து வருகிறது.
கடும்வெயில், மாசு, தூசு போன்றவை சரும ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கூந்தல் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறது. இவற்றை மீட்டெடுப்பது என்பது சற்று சவாலான காரியம் தான். ஆனால் முயன்றால் முடியாது ஒன்றும் இல்லை. இதற்கான நேரத்தை ஒதுக்கினால் நம்மால் நமது கூந்தல் அழகை மீண்டும் இயல்பிற்கு கொண்டு வர முடியும். ஏன் இயல்பை விட இன்னும் அழகாக வலிமையாக மாற்ற முடியும். வீட்டில் இருந்தபடியே உங்கள் கூந்தலை வலிமையாக்கி , கண்டிஷன் செய்து கொள்ள முடியும். அதற்கான முக்கிய மூலபொருள் ஜெலட்டின் பவுடர்.
இந்த பதிவில் ஜெலட்டின் பவுடர் பயன்படுத்தி தலை முடியை வலிமையாக்குவது எப்படி என்பது பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
வீட்டிலேயே ஹேர் லேமினேஷன் செய்வது எப்படி?
இந்த செயல்முறைக்கு ஹேர் லேமினேஷன் என்ற பெயராகும். இந்த வகை சிகிச்சைக்கு அழகு நிலையங்களில் மிக அதிக ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் இந்த வழிமுறையை நீங்கள் அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் சேமிப்பைக் கரைக்காமல் சுலபமான வழியில் உங்கள் கூந்தலை வலிமையாகவும் பளபளப்பாகவும் மாற்ற முடியும்.
ஜெலட்டின் - பளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலின் ரகசியம்:
தலை முடி அமினோ அமிலம் மற்றும் கேரட்டின் என்ற புரதம் ஆகியவற்றால் செய்யப்பட்டது. கேரட்டின் புரதம் மிக அதிகமாகக் காணப்படும் ஒரு பொருள் ஜெலட்டின். இந்த ஜெலட்டின் தலைமுடியை ஒருங்கிணைக்க உதவி, உச்சந்தலையின் மேற்புறத்தை மிருதுவாக்கி , முடி இழைகளை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. தலை முடி பளபளப்பாகவும் அழகாகவும் தோன்ற உச்சந்தலையின் மேற்புறத் தோல் மென்மையாக இருப்பது அவசியம். புரதம் அதிகம் இருந்தாலும் முட்டையின் மஞ்சள் கரு, ஜெலட்டின் போல் சேதமடைந்த முடிகளை சரி செய்வதில்லை.
ஜெலட்டின் பவுடரில் இரண்டு அமினோ அமிலங்கள் உள்ளன. அவை ப்ரோளின் மற்றும் க்ளைசின் போன்றவை ஆகும். விலங்குகளின் உறுப்புகள், இழைம திசு, அல்லது எலும்பு போன்றவற்றை பலர் போதுமான அளவு தங்கள் உணவில் எடுத்துக் கொள்வதில்லை. அதனால் இந்த முக்கிய அமினோ அமிலங்கள்உடலுக்குப் போதிய அளவு கிடைப்பதில்லை. இந்த அமினோ அமிலங்கள் எடை நிர்வகிப்பு மற்றும் மேம்பட்ட நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடு போன்றவற்றிற்கு மிகவும் தேவையாக உள்ளன.
ஜெலட்டின் என்பது என்ன?
ஜெலட்டின் என்பது பல விலங்குகளின் கட்டமைப்பு புரத கொலோஜனிலிருந்து காணப்படுவதாகும். இந்த கொலாஜன் என்பது ஒரு இழைம புரதம் ஆகும். இது உடலின் இணைப்பு திசுக்களை வலிமையாக்குகிறது. இது உடலின் மூன்றில் ஒரு பகுதியை உருவாக்குகிறது.
ஜெலட்டின் என்பது முக்கிய அமினோ அமிலங்கள் க்ளைசின் மற்றும் ப்ரோளின் போன்றவற்றால் உருவாக்கப்படுவதால், நமது உணவில் ஜெலட்டின் சேர்த்துக் கொள்வதால் நமது உடல் பல வழிகளில் நன்மை அடைகிறது. தினமும் எதாவது ஒரு வடிவத்தில் ஜெலட்டினை நமது உணவில் இணைத்துக் கொள்வதால் பல்வேறு அற்புத நன்மைகள் நமது உடலுக்குக் கிடைக்கிறது.
இது எப்படி வேலை புரிகிறது?
விலங்குகளின் எலும்பு, குருத்தெலும்பு , தோல் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் கொலாஜன் புரதம் ஜெலட்டின் ஆகும். தலைமுடியை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க உதவும் ஒரு கட்டமைப்பு பொருளாகும் இந்த ஜெலட்டின்.
மாலிக்யுள் என்னும் மூலக்கூறுகள் தலைமுடிக்கு உறையாக இருந்து, தலைமுடி வடிவம் சீராகவும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது. இதன் விளைவாக பளபளப்பான, வலிமையான , மென்மையான, மிருதுவான கூந்தல் கிடைக்கிறது. இதன் சிறப்பான விளைவுகள் பெற, வாரத்திற்கு ஒரு நாள் இந்த செய்முறையைப் பின்பற்ற வேண்டும். தலைமுடி அழகாக மாறியவுடன், மாதத்திற்கு ஒரு நாள் இதனைப் பயன்படுத்தி சீராக வளரும் தலைமுடியை நிர்வகிக்க வேண்டும்.
ஜெலட்டின் பயன்படுத்துவதால் கூந்தலுக்கு உண்டாகும் நன்மைகள் :
ஜெலட்டின் பல்வேறு சிறப்பான நன்மைகளைத் தருவதாக வெஸ்டன் ஏ. ப்ரைஸ் பவுண்டேஷன் குறிப்பிடுகிறது. அவற்றுள் சில நன்மைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன..
. தளர்ந்து இருக்கும் சருமத்தை இறுக்கமாக்க உதவுகிறது.
. நகம், கூந்தல் மற்றும் சரும வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது.
. இது ஒரு புரத ஆதாரமாகும். தசை கட்டமைப்பிற்கு உதவும் அமினோ அமிலங்கள் இவற்றோடு இணைந்திருக்கும்.
. செரிமானத்திற்கு உதவுகிறது. தண்ணீர் அளவைக் கட்டுப்படுத்தி, உணவு செரிமான பாதை வழியை எளிதாகக் கடந்து செல்ல உதவுகிறது.
. மூட்டு ஆரோக்கியத்தை அதிகரித்து, எளிதில் குணமடைய வைக்கிறது.
ஜெலட்டின் ஹேர் மாஸ்க் ரெசிபி செய்முறை:
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தல் போன்றவற்றை பாதுகாப்பது என்பது கடினமான செயலாக இருந்து வருகிறது. கடும்வெயில், மாசு, தூசு போன்றவை சரும ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
. ஒரு ஸ்பூன் தூள் செய்யப்பட்ட ஜெலட்டின் - பொதுவாக ஹெல்த் ஸ்டோர் போன்ற இடங்களில் கிடைக்கும் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
. 1/2 கப் பால் அல்லது தண்ணீர்
. 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
. 1 முட்டை(வெள்ளை மற்றும் மஞ்சள் கரு)
. 2 ஸ்பூன் உங்களுக்கு விருப்பமான ஹேர் கண்டிஷனர் (அல்லது 2-3 ஸ்பூன் அவகாடோ ப்யுரீ - அதிக ஈரப்பதத்திற்கு)
. 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர்(தேவைப்பட்டால்)
குறிப்பு:
அதிக நீளமான அல்லது அதிக அடர்த்தியான தலை முடி உங்களுக்கு இருந்தால், இந்த ரெசிபி அளவை இரண்டு மடங்காக மாற்றிக் கொள்ளலாம்.
செய்முறை:
முதல் படி :
பால் அல்லது தண்ணீரை வெதுவெதுப்பாக சூடாக்கி, அதில் ஜெலட்டின் பவுடர் சேர்த்து ஒரே சீராக கலந்து கொள்ளவும்.
இரண்டாம் படி:
பிறகு அந்தக் கலவையில் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் , ஒரு முட்டை , உங்கள் ஹேர் கண்டிஷனர் அல்லது அவகாடோ விழுது ஆகியவற்றைக் கலந்து மீண்டும் நன்றாகக் கலக்கவும். தேவைபட்டால் ஏதாவது ஒரு அத்தியாவசிய எண்ணெய் சில துளிகள் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த மாஸ்க் தயார்.
மூன்றாம் படி:
நன்றாக அலசிய கூந்தலில் இந்த மாஸ்கை தடவவும். தடவுவதற்கு முன் தலைமுடியை நான்கு பாகங்களாக பிரித்துக் கொண்டு ஸ்டைலிங் ஜெல் தடவும் முறையில் தடவவும். இந்த கலவையை எல்லா இடங்களிலும் படும்படி நன்றாகத் தடவவும்.
நான்காம் படி:
ஒவ்வொரு பாகத்திலும் தடவும்போது விரைவாகத் தடவ வேண்டும். இல்லையேல் இந்த ஜெல் எளிதில் கடினமாக மாறிவிடக் கூடும். தடவியபின், தலை முடியை மென்மையாக சீவிவிடுங்கள். ஒரு முறை ஒரு பாகம் முழுவதும் ஜெல் தடவி சீவி முடித்தவுடன் மீண்டு அதில் கை வைக்க வேண்டாம். அடுத்த பாகத்திற்கு சென்று அதே முறையைப் பின்பற்றவும்.
ஐந்தாம் படி :
முழுவதும் தடவி முடித்தவுடன் இருபது நிமிடங்கள் அப்படியே விடவும். சிறிது நேரத்தில் அந்த ஜெல் சற்று காய்ந்து, கடினமாகி விடக்கூடும். காத்திருக்க நேரமில்லை என்றால் ப்லோயர் அல்லது ட்ரையர் பயன்படுத்தி காய வைத்துக் கொள்ளலாம். ஆனால் வெப்பம் முழுவதும் சீராக எல்லா இடங்களிலும் பரவும்படி பார்த்துக் கொள்ளவும். தேவைபட்டால் டிப்யுசர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆறாம் படி:
ஓரளவிற்கு தலைமுடி காய்ந்தவுடன் , வெதுவெதுப்பான நீர் கொண்டு தலையை அலசவும். விரல்களைக் கொண்டு தலையில் தேய்க்க வேண்டாம். தண்ணீர் நேரடியாக தலையில் படும்படி ஊற்றவும்.. இப்படி செய்வதால் நீங்கள் தொடுவதற்கு முன்பு தானாகவே உங்கள் கூந்தல் மிருதுவாகும்.
ஏழாம் படி:
உங்கள் தலைமுடி மிருதுவாக மாறியவுடன், தலையை மென்மையாக மசாஜ் செய்து, பிறகு கண்டிஷனர் பயன்படுத்தலாம். பிறகு வழக்கம் போல் உங்கள் கூந்தலை ஸ்டைல் செய்து கொள்ளலாம்.
மிக முக்கிய குறிப்பு:
புரத சிகிச்சைக்கு பின் தலை முடியை ஆழமாக கண்டிஷன் செய்வதால் நல்ல தீர்வுகள் கிடைக்கும்.
இதனை எத்தனை முறை செய்ய வேண்டும்?
இந்த ஜெலட்டின் மாஸ்க் சிகிச்சை தற்காலிக நிவாரணத்தை வழங்குவதால் உங்கள் கூந்தல் பராமரிப்பு சிகிச்சையுடன் சேர்த்து இதனைப் பின்பற்றலாம். ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையைப் பின்பற்றுவதால் உங்கள் தலை முடி பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறுகிறது. மேலும் தலைமுடிக்கு எண்ணெய் சிகிச்சை மேற்கொள்வதால் அடர்த்தியான மற்றும் மென்மையான தலைமுடி கிடைக்கும்.