16 அடி மலைப்பாம்புடன் படுத்து உறங்கும் பெண்
ஒரு விலங்கு காதலர் தனது சிறிய லண்டன் வீட்டை 16 அடி பர்மிய மலைபாம்புடன் சேர்த்து இன்னும் சில பாம்புகளுக்காக ஒரு ஒதுக்கப்பட்ட புகலிடமாக மாற்றியுள்ளார்.
இது 21 வயதான ஜீயின் கதை, இவர் கால்நடை செவிலியர் பயிற்சி படித்துக் கொண்டிருக்கிறார். மற்றும் ஆறு வயதில் ஒரு பாம்பை முதன்முதலாக பார்த்து , அன்று முதல் பாம்புகளை நேசிக்கத் தொடங்கினார்.
இவருக்கு 14 வயது இருக்கும்போது, முதல் முறையாக ஒரு பாம்பை பராமரிக்க ஆகும் செலவை தனது இளைய சகோதரனுடன் பகிர்ந்து கொண்டார். பின்பு அதனை வீட்டிற்கு அழைத்து வந்தார். அன்று முதல் அவர் தாய் மற்றும் சகோதரன் இந்த ஊர்ந்து விலங்குகளோடு வாழத் தொடங்கினர்.
தற்போது ஜீயிடம் 16 பாம்புகள் உள்ளன, அதில் 16அடி பர்மீஸ் இன மலைப்பாம்பும் ஒன்று. ஒரு குருதி மலைப்பாம்பு, சிறப்பு மிக்க மலைப்பாம்பு மற்றும் இந்த 16அடி நீல பர்மீஸ் மலைப்பாம்பு போன்றவற்றுடன் அவர்கள் வீட்டின் அறையில் தவழ்ந்து விளையாடுவது ஜீக்கு மிகவும் பிடித்தமான செயலாகும்.
ஒரு நேர்காணலின் போது, அவர் இவ்வாறு வெளிப்படுத்தினார்: "எண்ணற்ற முறை இவைகள் என்னைக் கடித்துள்ளன. ஒப்பீட்டளவில் தொடர்ச்சியாக என்னை அவைகள் விடுவிக்காமல் கூட இருந்திருகின்றன. இத்தகைய சூழ்நிலைகளை நான் சந்தித்திருக்கிறேன், இது நிதானத்தையும், அதன் தீவிரத்தையும் சார்ந்துள்ளது. பாம்புகள் உங்களைப் பிடித்துக் கொண்டு, விடாமல் இருக்கும் நேரத்தில் மதுபானத்தை பயன்படுத்தும்போது உடனடியாக அதற்குள் தலையை மூழ்கிக் கொள்ளும் தன்மை அவற்றிற்கு உண்டு.
உங்களை கொலை செய்யும் நோக்கம் பாம்புகளுக்கு இல்லை. ஆனால் உங்களை விடுவிக்கும் எண்ணமும் அவைகளுக்கு இல்லை. அவைகள் ஒரு ஆர்வமுள்ள உயிரினங்கள்".
ஜீயின் பாம்பில் மிகப்பெரியதான பர்மீஸ் மலைப்பாம்பு தோராயமாக 28கிலோ எடையைக் கொண்டுள்ளது. பயிற்சி நேரத்தில் இந்த பாம்பை வெளியில் எடுத்து கொண்டு செல்ல இரண்டு நபர் தேவைப்படுகிறார்கள்.
மலைப்பாம்பிற்கு மாதத்திற்கு ஒரு முறை ஒரு மிகப் பெரிய , தோராயமாக 3-6கிலோ கொண்ட முயல் உணவாகக் கொடுக்கப்படுகிறது. சிறிய வகை பாம்புகளுக்கு எலி அல்லது கோழிக் குஞ்சுகள் உணவாகக் கொடுக்கப்படுகின்றன.
16 அடி மலைப்பாம்புடன் உறங்குவதால் ஜீக்கு மிக அதிக அளவு மன அமைதி கிடைப்பதாக கூறுகிறார்.
நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.