க்ரீன் காபி என்னும் பச்சை காபி என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

க்ரீன் காபி கொட்டைகள் அதாவது பச்சை காபி கொட்டைகள் என்பது வறுக்காத காபி கொட்டைகள் ஆகும்.

க்ரீன் காபி என்னும் பச்சை காபி என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

காபி கொட்டைகளை வறுப்பதால் அதில் இருக்கும் க்லோரோஜெனிக் என்னும் கூறு குறைகிறது. அதாவது நாம் பொதுவாக பயன்படுத்தும் வறுத்த கொட்டைகளைக் கொண்டுத் தயாரிக்கும் காபியில் இந்த கூறு பச்சைக் காபியை விட குறைந்த அளவில் உள்ளது. பச்சைக் காபியில் இருக்கும் உயர் க்லோரோஜெனிக் அமிலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக கூறப்படுகிறது.

இந்த க்லோரோஜெனிக் அமிலம் என்ற கூறில் அன்டி ஆக்சிடென்ட் தன்மை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது, மேலும் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. உடல் கார்போ ஹைட்ரெட்டை உறிஞ்சுவதிலும் பயன்படுத்துவதிலும் இது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்த உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி நீரிழிவு மேலாண்மையில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது:
பச்சைக் காபியில் இருக்கும் க்லோரோஜெனிக் அமிலம் ஒரு சிறந்த வளர்சிதை மாற்ற ஊக்கியாக செயல்படுகிறது. இது அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் என்னும் BMR அளவை அதிகரிப்பதால் இரத்தத்தில் கல்லீரலில் இருந்து வெளியேற்றப்படும் க்ளுகோஸ் அளவு குறைக்கப்படுகிறது. குளுக்கோஸின் தேவைகளை பூர்த்தி செய்ய கொழுப்புச் செல்களில் சேமித்து வைத்திருக்கும் அதிக கொழுப்பை உடல் எரிக்கத் தொடங்குகிறது.


இதய ஆரோக்கியத்தை நிர்வகிக்கிறது :
கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிப்பதால் இதய நோய் பாதிப்பு அதிகமாகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக சேர்வதால் தமனிகளின் பாதைகள் குறுகி, தமனி தடிப்பு என்னும் அதேரோசெலேரோசிஸ் என்னும் பாதிப்பு உண்டாகிறது. இந்த பாதிப்பில் தமனிகளில் கெட்ட கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. ஆகவே இந்த பாதிப்பு ஏற்படமால் தடுக்க, பச்சை காபி பருகுவதால், அதில் இருக்கும் க்லோரோஜெனிக் அமிலத்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இதயத்திற்கு நன்மை கிடைக்கிறது.

உடலின் நச்சுகளைப் போக்குகிறது :
பச்சை காபி கொட்டைகள் பதப்படுத்தப்படாதவை என்பதால் இதில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இகவை உடலை தாக்கும் தீங்கு விளைவிக்கும் கூறுகளை தடுக்கின்றன. இவை கல்லீரலை சுத்தீகரிப்பதால் இயற்கை முறையில் உடலின் நச்சுகள் நீக்கப்படுகின்றன. மேலும் உடலின் தேவையற்ற கொழுப்புகள் வெளியாகின்றன.
 

பசியைக் குறைக்கிறது:
நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது உங்களுக்கு அடிக்கடி தோன்றும் சிறு சிறு பசியால் அதனை செய்ய முடியாமல் போகிறதா? இதற்கு பச்சை காபி நல்ல பலன் தருகிறது. உங்கள் பசியைப் போக்க, பச்சை காபி பருகுவதால், உங்கள் உணவுத் தேடலைக் குறைத்து நீங்கள் அதிகம் சாப்பிடமால் தடுக்க இது உங்களுக்கு உதவும். இதனால் எடை குறைப்பும் சாத்தியமாகிறது . பச்சை காபில் உள்ள கொலோரோஜெனிக் அமிலம் உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது:
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பச்சை காபி கொட்டைகள் உதவுவதாக அறியப்படுகிறது. ஆமாம், உங்களுக்கு  நீரிழிவு இருந்தால், பச்சை காபி குடிப்பதால், சர்க்கரை கிடைக்கும் அளவைக் குறைப்பதன் மூலம் உங்கள் சிறு குடலில் சர்க்கரை உறிஞ்சுவதை குறைக்க உதவுகிறது. மேலும் உடலின் அழற்சியைக் குறைப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

பச்சை காபி கொட்டையின் பக்க விளைவுகள் :
ஒவ்வொரு உணவிற்கும் அதற்கான நன்மைகள் இருப்பது போல் பக்க விளைவுகளும் இருக்கவே செய்கிறது. ஆகவே அவற்றை எடுத்துக் கொள்ளும் அளவு பற்றி ஒவ்வொருவருக்கும் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். ஆனால் பச்சை காபியில் நிறைய நன்மைகள் உள்ளன. இருந்தாலும், மற்ற காபியில் இருப்பது போல் காபின் உள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது.

பலருக்கு இதில் இருக்கும் அதிக காபினால் பதட்டம், அமைதியின்மை, தலைவலி, மற்றும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகியவை உண்டாகலாம். க்லோரோஜெனிக் அமிலம் அதிக அளவு உட்கொள்வதால் இதய நோய்க்குறியுடன் தொடர்புடைய பிளாஸ்மா ஹோமோசைஸ்டீன் அளவு அதிகரிக்கப்படுகிறது.

பச்சைக் காபியை அருந்துவதற்கு சிறந்த நேரம் எது?
பச்சை காபியை அருந்துவதற்கு சிறந்த நேரம் என்பது உணவருந்திய பிறகான நேரம் ஆகும். நீங்கள் உணவருந்திய பின் கார்போ மற்றும் புரத உட்கொள்ளளால் உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. இந்த இரத்த சர்க்கரையின் திடீர் அதிகரிப்பை கட்டுப்படுத்த இந்த நேரத்தில் பச்சை காபியை பருகலாம். இதனால் நாள் முழுதும் நீங்கள் சக்தியோடும் உற்சாகத்தோடும் இருக்கலாம்.