குழந்தையின் ஆரோக்கியத்திற்கு வெள்ளரிக்காய் எப்படி நன்மை அளிக்கிறது
வெள்ளரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற வகையில் வெள்ளரிக்காய் உதவுகிறது. கார்போஹைட்ரேட், புரதம், ரிபோப்லேவின், தைமின், வைட்டமின், போலேட் என்று பல்வேறு மினரல்கள் வெள்ளரிக்காயில் உள்ளது. இது 5-6 மாத குழந்தைக்கு கூட ஊட்டச்சத்துகளை தந்து உடல் வளர்ச்சி அடையச் செய்கிறது. இதைத் தவிர, வெயில் காலங்களில் வெள்ளரிக்காயை சாப்பிடக் கொடுப்பதால் குழந்தைகள் புத்துணர்ச்சி அடைகின்றனர். ஆறு மாதம் முதல் குழந்தைக்கு திட உணவுகளை கொடுக்கத் தொடங்குவோம். இந்த தருணத்தில் எந்த உணவு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்பது குறித்து தாய்க்கு சந்தேகம் தோன்றும். ஆகவே இந்த தருணத்தில் இந்த வெள்ளரிக்காயை கொடுப்பது சரியான முடிவாகும். குழந்தையின் ஆரோக்கியத்திற்கு வெள்ளரிக்காய் எண்ணற்ற விதங்களில் உதவுகிறது. இதில் உள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
குழந்தையை நீர்ச்சத்தோடு வைக்கிறது.
குழந்தைக்கு தேவையான அளவு மினரல்கள் உள்ளன.
குழந்தையின் பற்களுக்கு நன்மை செய்கிறது.
குழந்தையின் செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது.
குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தையை நீர்ச்சத்தோடு வைக்கிறது:
வெள்ளரிக்காயில் 96% நீர்சத்து உள்ளது. ஆகவே குழந்தைகள் நாள் முழுவதும் நீர்ச்சத்தோடு இருக்க இது உதவுகிறது.
இது தவிர, உடலில் உள்ள நச்சுகளைப் போக்க வெள்ளரிக்காய் உதவுகிறது மற்றும் உடலுக்கு தேவையான தண்ணீர் அளவையும் பூர்த்தி செய்கிறது.
குழந்தைக்கு தேவையான அளவு மினரல்கள் உள்ளன:
வெள்ளரிக்காயில் கல்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்கள் உள்ளன. மெக்னீசியம் மற்றும் கால்சியம், குழந்தையின் எலும்பு மற்றும் தசைகளை வலுவாக்குகிறது.மேலும், உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
குழந்தையின் பற்களுக்கு நன்மை செய்கிறது:
வெள்ளரிக்காயில் சிலிக்கா உள்ளது. இது குழந்தையின் பற்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை புரிகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகளை களைந்து , பற்களை வலுவாக்குகிறது.
குழந்தையின் செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது:
வெள்ளரிக்காயில் பொட்டாசியம், ரிபோப்லேவின், தைமின் மற்றும் புரதம் உள்ளது. இது செரிமான பாதையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் வயிறு தொடர்பான தொந்தரவுகளைப் போக்க உதவுகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகளைப் போக்குகிறது. குழந்தையின் பசியின்மையைப் போக்கவும் வெள்ளரிக்காய் உதவுகிறது.
குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது:
வெள்ளரிக்காயில் பொட்டாசியம், கார்போஹைட்ரெட், போலேட் போன்றவை உள்ளன. இவை குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். மேலும், வெள்ளரிக்காயில் உள்ள புரதம், குழந்தையின் மன மற்றும் உடல் வளர்ச்சியில் உதவுகிறது. குழந்தைகளுக்கு வெள்ளரிக்காயை சாப்பிடக் கொடுப்பதில் நிறைய மினரல்கள் குழந்தைக்கு கிடைக்கும் என்பதால் கட்டாயம் இதனை அவர்களுக்கு கொடுத்து அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.