லைசினின் ஆரோக்கிய நன்மைகள்:
நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருக்கும் அத்தியாவசிய அமினோ அமிலங்களில் லைசின் ஒன்றாகும்.
மனித உடலால் லைசின் தயாரிக்க முடியாது என்பதால், இந்த அமினோ அமிலத்தை உணவின் மூலம் பெறுவது மிக முக்கியம். லைசின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது, இரத்த அழுத்தம் குறைகிறது, ஹெர்பெஸ் வைரஸ் என்னும் ஒரு வகை தோல் அழற்சி மற்றும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுகிறது. சருமத்தின் முக்கிய கட்டமைப்பு புரதமான கொலாஜனை உருவாக்க உடல் லைசினைப் பயன்படுத்துகிறது.
லைசினின் ஆரோக்கிய நன்மைகள்:
- நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது:
தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், லைசின் சாப்பிட்ட பிறகு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த தலைப்பில் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
- பதட்டத்தை குறைக்கிறது:
மன அழுத்த எதிர்வினையில் ஈடுபடும் ஏற்பிகளைத் தடுப்பதன் மூலம் லைசின் பதட்டத்தைக் குறைக்கும். 50 ஆரோக்கியமான மக்கள் மீது நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 2.64 கிராம் லைசின் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் அர்ஜினைன் போன்றவை , மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் தூண்டப்பட்ட கவலையைக் குறைத்தது என்று குறிப்பிடுகின்றது.
- இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:
லைசின் குறைபாடு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள 50 பெரியவர்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், லைசின் சப்ளிமெண்ட்ஸ் இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைப்பதைக் காண முடிந்தது.
- சளி புண்களுக்கு சிகிச்சையளிக்கிறது:
சளி புண்கள் என்பது திரவத்தால் நிரப்பப்பட்ட கொப்புளங்கள் ஆகும், அவை வலி மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்துகின்றன. அவை ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 1 (HSV-1) காரணமாக ஏற்படுகின்றன. லைசின் சப்ளிமெண்ட்ஸ் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் சளி புண்களின் காலத்தைக் குறைக்கிறது
- காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது:
காயம் விரைவாக குணமாக லைசின் உதவும். இந்த அமினோ அமிலம் கொலாஜன் என்ற புரதத்தை உருவாக்க உதவுகிறது, இது தோல் மற்றும் எலும்புகளுக்கு கட்டமைப்பை அளிக்கிறது, மேலும் காயத்தில் புதிய உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது, இதனால் காயம் சரிசெய்யும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
- கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது:
லைசின் உங்கள் குடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உடல் உதவுகிறது மற்றும் சிறுநீரகங்களை தாதுப்பொருளைத் தக்கவைக்க அனுமதிக்கிறது. லைசின் எலும்பு இழப்பைத் தடுக்கவும், கால்சியத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
லைசினின் பிற நன்மைகள்:
. அக்கி பாதிப்பிற்குச் சிகிச்சை அளிக்கிறது
. வயதானவர்களுக்கு மெல்லிய தசைகள் இழப்பு மற்றும் இயக்க சிக்கல்கள் போன்றவற்றைத் தடுக்கிறது
. புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது
. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
. சருமத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை மேம்படுத்துகிறது
. முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது
. தமனிகளில் பிளேக் கட்டமைப்பதைத் தடுக்கிறது
. தசைகளை உருவாக்குகிறது
லைசின் அதிகமுள்ள உணவுகள்:
உணவு ஆதாரங்கள் ( 100கிராம்) லைசின்அளவு (மிகி)
காட்டேஜ் சீஸ் 934 மிகி
மாட்டிறைச்சி 329 மி.கி.
கோழி 1509 மி.கி.
முட்டை 951 மி.கி.
அட்லாண்டிக் சால்மன் 1870 மி.கி.
ஆடு பால் 290 மி.கி.
ராஜ்மா 1618 மி.கி.
கொண்டைக்கடலை 1291 மி.கி.
லைசின் நுகர்வு - பக்க விளைவுகள் மற்றும் அபாயங்கள்:
தினசரி 3 கிராம் அளவு லைசின் உடலுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது மற்றும் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் வரை அளவை அதிகரிப்பது வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் லைசின் சப்ளிமெண்ட்ஸைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்களும் லைசின் சப்ளிமெண்ட்ஸைத் தவிர்க்க வேண்டும்.