சோயா பாலின் நன்மைகள்
சோயா பீன்ஸ் பல சோயா பொருட்கள் செய்ய ஆதாரமாக இருக்கின்றது. அவைகள் அனைத்துமே நமது அன்றாட உணவில் பயன் படுத்தப்படுகின்றன.
சோயாவின் தொடக்கம் சீனாவில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தற்பொழுது உலகில் எல்லா இடங்களிலும் சோயா பொருட்கள் கிடைக்கின்றன. சைவ உணவை விரும்பி உண்ணுகிறவர்களுக்கு , சோயா உணவுகள் புரத சத்துக்கு ஒரு சிறந்த மாற்று. சோயா பால் ஆசிய உணவுகளில் அதிகமாக பயன் படுத்தப்படுகின்றது. சோயா பால், சீஸுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் டோஃபுவில் (Tofu) பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பல விதமான நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
பாலுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருப்பதால் அனைவரும் சோயா பாலை விரும்பி பயன்படுத்துகின்றனர். இது வெனிலா, சாக்லேட் என்று பலவிதமான பிளேவரில் கிடைக்கின்றன. உப்பு சுவையுடன் கூடிய சோயா பால் சீனா மற்றும் இந்தியாவில் விற்கப்படுகின்றன.
பால் பொருட்கள் மற்றும் இறைச்சியை சாப்பிடாதவர்களுக்கு சோயா பால் ஒரு ஊட்டச்சத்தான மாற்று. விலை மலிவாக கிடைப்பதாலும், எல்லா இடங்களிலும் கிடைக்கும் ஒரு பொருளாக இருப்பத்தாலும், இந்த பொருளின் இன்னும் அதிகமான பலன்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சோயா பாலின் ஊட்டச்சத்துகள்:
சோயா பால் சிறந்த ஆற்றல் பெற உதவுகிறது. புரதசத்து, நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்புசத்து போன்றவை அதிகமாக இருக்கிறது. தாது பொருட்களில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம்,பாஸ்போரோஸ் , பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்றவை உள்ளன. வைட்டமின்களில் போலேட், தியாமின் ,ரிபோபிளவின், நியாசின், வைட்டமின் பி12 , வைட்டமின் டி , வைட்டமின் கே , வைட்டமின் ஈ போன்றவை சோயா பாலில் காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் நிறைந்த சோயா பால் உடல் நலத்தை அதிகரிக்கிறது.
வலுவூட்டப்பட்ட சோயா பாலின் ஊட்டச்சத்துகள்:
பசுவின் பாலும் சோயா பாலும் புரத சத்தில் ஒரே அளவை தான் கொண்டிருக்கின்றன. மற்ற ஊட்டச்சத்துகள் பசுவின் பாலை விட குறைந்தே காணப்படுகிறது. ஆகையால் அதனை அதிகரிப்பதற்கு சோயா பால் வலுவூட்டப்படுகிறது . இதனால், இந்த பால் பசுவின் பாலை ஓத்த ஊட்டச்சத்தை அடைகிறது. மற்ற வகை பால் பொருட்களில் அலர்ஜி உள்ளவர்கள் சோயா பாலை அருந்தலாம்.
ஆரோக்கிய பலன்கள்:
இப்போது சோயா பாலின் ஆரோக்கிய பலன்களை பார்க்கலாம்.
1. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது:
சோயா பாலில் உள்ள புரத சத்து மனித உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். புரத சத்தில் உள்ள அமினோ அமிலங்கள் உடல் நலக் கோளாறு ஏற்படும் போது அதனை சீரமைக்க பல நன்மைகளை செய்கின்றது . அமினோ அமிலங்கள் மற்றும் ஐசோபிளவோன்ஸ் ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றன . இது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது .டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.
2. மெனோபாஸ் காலகட்டம்:
மெனோபாஸுக்கு பிறகு பெண்களுக்கு , ஈஸ்ட்ரோஜென் சுரப்பது குறைகிறது. அதனால் ஏற்படும் உடல் உபாதைகளை சோயா உணவுகளின் உட்கொள்ளல் தடுக்கிறது. சோயா உட்கொள்வதன் மூலம் எலும்பு பலத்தை அதிகரித்து எலும்பு முறிவு அபாயத்தை குறைக்க, சோயா பாலில் உள்ள , சோயா ஐசோபிளவோன்ஸ் உதவுகிறது.
3. புற்று நோயைத் தடுக்கிறது:
சோயா பாலை அதிகம் உட்கொள்வதன் மூலம் ஆண்மை சுரப்பி புற்று நோய் தடுக்கப்படுகிறது. சோயா பாலை அதிகம் உட்கொள்ளும் ஆண்களுக்கு இந்த நோயின் பாதிப்புகள் தடுக்க படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மார்பக புற்று நோய் பெண்களை பரவலாக தாக்குகின்றது. மெனோபாஸ் கால கட்டத்திற்கு பிறகு, அதிகமான சோயா பாலை எடுத்து கொள்வதால், சோயா பால் ஈஸ்ட்ரோஜனுக்கு ஒரு மாற்றாக இருப்பதால் மார்பக புற்று நோய் தவிர்க்கப் படுகிறது.
4. ஆன்டிஆக்ஸிடண்ட்டாக செயல்படுகிறது:
சோயா பாலில் உள்ள சோயா ஐசோபிளவோன்ஸ் சிறந்த ஆன்டிஆக்சிடண்டாக செயல்படுகிறது. ஆகையால் நாட்பட்ட வியாதிகள் குணமாகிறது. Tofu வை உண்பதால் ஆக்ஸிஜனேற்ற மன அழுத்தம் குறைகிறது. இந்த ஆக்ஸிஜென்ட்ற்ற மன அழுத்தத்தால் கல்லீரல் சேதமடையும் வாய்ப்புகள் ஏற்படும். Tofu வில் இருக்கு கல்லீரல் சேதத்தை தடுக்கும் தன்மையால் இந்த நோய் தவிர்க்க படுகிறது .
5. உடல் பருமனை கட்டுப்படுத்தி கொலஸ்ட்ராலை குறைக்கிறது:
வளர்சிதை மாற்றத்தால் ஆண்களுக்கும் , மெனோபாஸ் காலத்திற்கு பிறகு பெண்களுக்கு இயல்பாகவே உடல் பருமன் ஏற்படுகிறது. சோயா உணவை எடுத்துக் கொள்வதால் இந்த தொல்லை தீர்க்கப்படுகிறது. சோயாவில் உள்ள ஐசோபிளவோன்ஸ் கொழுப்பிணியாக்கத்தை தடை செய்து, கொழுப்பு திசுக்கள் வளர்ச்சியை குறைக்கிறது. ஆகவே சோயா பால் மற்றும் சோயா உணவுகளை உண்பதால் கொலஸ்ட்ரால் கட்டுப்பட்டு, உடல் பருமன் சீராகி, சீரான இதய ஆரோக்கியத்தை கொடுக்கிறது. உடல் பருமனால் , இடுப்பின் அளவு அதிகரித்து காணப்படுபவர்கள் சோயா பாலை அருந்தி இடுப்பின் அளவை குறைக்கலாம்.
சோயாவில் உள்ள தாவர ஊட்டச்சத்துகள் , பலவிதமான நன்மைகளை உடலுக்கு செய்கின்றன. சோயா பாலை உட்கொண்டு நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவோம்.