உங்கள் உடலில் கொலோஜென் குறைபாடு

கொலோஜென் என்ற வார்த்தையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

உங்கள் உடலில் கொலோஜென் குறைபாடு

மனித உடலின் சருமம், எலும்புகள் , தசைகள் மற்றும் தசை னார்கள் ஆகியவற்றில் காணப்படும் ஒரு புரதம் கொலோஜென் ஆகும். உடலைச் சேர்த்துப் பிடிக்கும் ஒரு பொருள் இந்த கொலோஜென். காலப்போக்கில் இந்த கொலோஜென் சீர்கெட்டு, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். அணுக்களில் 30% கொலோஜெனால் ஆனது என்பதால் கொலோஜென் குறைபாடு காரணமாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றலாம். உங்கள் உடலில் கொலோஜென் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அடையாளங்கள் தோன்றும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும். 

1. இரத்த அழுத்தம் :
வயது அதிகரிக்கும்போது, உடலில் கொலோஜென் சேதமாகக் கூடும். இதனால் உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். உடலில் கொலோஜென் குறைவதால் இரத்த அழுத்தம் குறையக்கூடும் என்று  அமெரிக்கன் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகிறது. இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய நெஞ்சு வலி, மயக்கம், சோர்வு மற்றும் நாட்பட்ட தலைவலி ஆகியவற்றை நீங்கள் உணர முடியும்.

2. மூட்டு வலி :
மூட்டுகளின் உட்புறம் இருக்கும் மெல்லிய திசுக்களான குருத்தெலும்பு  கொலோஜனால் செய்யப்பட்டது. இதன் காரணமாகவே, எலும்புகளுக்கு புரதம் மிகவும் அவசியம் என்று கூறப்படுகிறது. இந்த தொடர்பின் காரணமாக, கொலாஜன் குறைபாடு ஏற்படுவதால், மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் இறுக்கம் ஆகியவை உண்டாகும் வாய்ப்பு உண்டு. கொலாஜன் மாத்திரைகள் பயன்படுத்துவதால் நன்மை ஏற்படலாம் என்றாலும் மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் இதனை எடுத்துக் கொள்வது கூடாது.

3. சுருக்கம்:
உங்கள் சருமத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும் பொறுப்பு கொலோஜனிடம் உள்ளது. கொலாஜன் குறைபாடு காரணமாக , சருமம் இயற்கையாக இருக்கும் தரத்தை இழப்பதால் பல்வேறு சரும பிரச்சனைகள் , தோல் சுருக்கம் மற்றும் கோடுகள் உண்டாகிறது. இந்த நிலையை மாற்ற கொலாஜன் மாத்திரைகளை பயன்படுத்தலாம்.

4. கூந்தல் பிரச்சனைகள்:
உங்கள் உடலில் கொலாஜன் குறைபாடு இருப்பதை உங்கள் கூந்தல் தெரிவிக்கிறது. கூந்தலின் வேர்க்கால்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை கொலோஜென் பூர்த்தி செய்கிறது . ஆகவே, இந்த கொலாஜன் குறைப்பாடு தோன்றுவதால், கூந்தலுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் கூந்தல் அதிகமாக உதிரக்கூடும். குறைந்த கொலாஜன் அளவு காரணமாக உங்கள் கூந்தலின் தன்மை மாறி, கூந்தல் வளார்ச்சி பாதிக்கப்படும்.

5. பல் பிரச்சனை:
பல் ஈறுகளுக்கு கொலாஜன் மிகவும் அவசியம். கொலாஜன் ஈறுகளின் வலிமைக்கு உதவுகின்றன. கொலாஜன் குறைபாடு காரணமாக, பல் ஈறுகள் பலமிழந்து, பற்கள் தளர்ச்சி அடையலாம். பற்கூச்சம் , பல்வலி, பல் இழப்பு ஆகிய பாதிப்புகள் கொலாஜன் குறைபாட்டால் உண்டாகலாம்.

6. தசை வலி :
கொலாஜன், தசை நார்கள்  மற்றும் தசைகளை எலும்பு மண்டலத்துடன் இணைக்கிறது. கொலாஜன் குறைபாடு காரணமாக , இந்த இணைப்பு வலிமை இழக்கலாம். இதனால் தசை வலி உண்டாகலாம்.


முடிவுரை:
உடலை சேர்த்து பிடிக்கும் தன்மை கொலோஜனுக்கு உள்ளது. உடலின் எலாஸ்டிக் தன்மையை இது பாதுகாக்கிறது. அடிப்படையில் கொலாஜன் திசுக்களின் ஆதரவாக செயல்படுகிறது. கொலாஜன் குறைப்பாடு உடலில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. முடக்குவாதம், சிஸ்டமிக் செலேரோசிஸ் , லூபஸ் போன்ற பாதிப்புகள் இதனால் உண்டாகலாம். நம் உடல் கொலாஜன் குறைபாட்டிற்கான அறிகுறிகளை நமக்கு உணர்த்த தவறுவதில்லை. நாம் நம் உடலை கவனித்தால் நம்மால் இந்த அறிகுறிகளை உணர்ந்து கொள்ள முடியும். புகை பிடிப்பதை கைவிடுதல், சூரிய வெப்பதில் அதிகம் வெளியில் செல்லாமல் இருத்தல், கொலாஜன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை பின்பற்றுவதால் கொலாஜன் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். கொலாஜன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது. தேவையற்ற சிக்கலைத் தடுக்க, ஒவ்வாமை குறித்த சோதனைகளை செய்து கொள்ளவும்.