வாரிசா? துணிவா? எந்த படம் பார்க்க போறீங்க!
இதுவரை 12 முறை அஜித் மற்றும் விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதியுள்ளன. அதில் அதிக வெற்றி பெற்றது யார்? என அறிய தொடர்ந்து படியுங்கள்.
இதுவரை 12 முறை அஜித் மற்றும் விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதியுள்ளன. அதில் அதிக வெற்றி பெற்றது யார்? என அறிய தொடர்ந்து படியுங்கள்.
தல vs தளபதி, கோலிவுட் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் இந்த இருவரும். மிகப்பெரும் ரசிகர்களின் படையை கொண்டுள்ள இந்த இருவரின் படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூல் செய்கின்றன. படங்கள் மற்றும் ரிலீஸ் தேதிகள் விஷயத்தில் எப்போதும் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே ஒரு போட்டி நிலவுகிறது. இப்போது, 2023 பொங்கலுக்கு மீண்டும் ஒருமுறை பாக்ஸ் ஆபிஸில் துணிவு & வாரிசு ஒரே நேரத்தில் மோதுகிறது. துணிவு & வாரிசு இரண்டு படங்களுமே பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகுகிறது. அஜீத் , விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதுவது இது முதல் முறையல்ல; இருவரின் படங்களும் இதற்கு முன் 12 முறை மோதியுள்ளன.
இந்த கட்டுரையில், அஜித் Vs விஜய் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் மோதல்கள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
வான்மதி vs கோவை மாப்பிள்ளை – 1996
1996 ஆம் ஆண்டு பொங்கலின் போது தான் அஜித் & விஜய்யின் படங்கள் முதன் முதலில் மோதியது. இதில் அஜித் நடித்த வான்மதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, மேலும் விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளையும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
கல்லூரி வாசல் vs பூவே உனக்காக – 1996
அதே 1996 ஆண்டில், அஜித் மற்றும் விஜய் இருவரும் மீண்டும் ஒருமுறை தங்கள் படங்களை ஒரே தேதியில் வெளியிட்டனர், அதில் விஜய்யின் பூவே உனக்காக படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது மற்றும் தமிழ்நாட்டில் 250 நாட்களுக்கு மேல் ஓடியது. ஆனால் அஜித்தின் கல்லூரி வாசல் படம் சரியாக ஓடவில்லை.
காலமெல்லாம் காத்திருப்பேன் vs நேசம் – 1996
இது அஜித் மற்றும் விஜய்க்கு இடையேயான இரண்டாவது பொங்கல் மோதல் ஆகும். இதில் அஜித் நடித்த நேசம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆனால் விஜய் நடித்த காலமெல்லாம் காத்திருப்பேன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரியாக ஓடவில்லை.
ரெட்டை ஜடை வயசு vs காதலுக்கு மரியதை – 1997
1997 ல் மோதிக் கொண்ட இந்த படங்களில், அஜித்தின் ரெட்டை ஜடை வயசு, பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இன்னொரு பக்கம் விஜய்யின் காதலுக்கு மரியதை திரைப்படம் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
உன்னை தேடி vs துள்ளாத மனமும் துள்ளும் – 1999
இந்த முறை மோதிக் கொண்ட இந்த அஜித் மற்றும் விஜய்யின் படங்களில், இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆனது. ஒரு வார இடைவெளியில் வெளியான இரண்டு படங்களும் நன்றாக ஓடி 100+ நாட்களுக்கு மேல் ஓடியது.
உன்னை கொடு என்னை தருவேன் vs குஷி – 2000
அஜித் மற்றும் சிமரன் நடித்த உன்னை கொடு என்னைத் தருவேன் படமும், விஜய் மற்றும் ஜோதிகா நடித்த குஷி படம் பாக்ஸ் ஆபிஸில் ஓரே நேரத்தில் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது. இதில் விஜய் & ஜோதிகா நடித்த குஷி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அஜித் & சிம்ரன் நடித்த உன்னை கொடு என்னைத் தருவேன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.
தீனா vs ப்ரண்ட்ஸ் – 2001
அஜித், விஜய் படங்களின் மற்றொரு பொங்கல் மோதல் இது. 2001 ஆம் ஆண்டில், வெளிவந்த அஜித் நடித்த தீனா திரைப்படம், ஒரு பக்கா மாஸ் என்டர்டெய்னர், அதே போல் விஜய்யின் ஃப்ரெண்ட்ஸ் திரைப்படமும், காமெடியில் கலக்கி நல்ல பணம் சம்பாதித்தது. இரண்டு படங்களுமே நல்ல வெற்றியைப் பெற்றது.
வில்லன் vs பகவதி – 2002
2002 ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி, விஜய், அஜித் படங்களான வில்லன் மற்றும் பகவதி, ஒரே நாளில் வெளியாகி திரும்பவும் போட்டி போட்டன. இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றன.
ஆஞ்சநேயா vs திருமலை – 2003
2003 ஆம் ஆண்டு, அக்டோபர் 24 ஆம் தேதி, விஜய், அஜித் படங்களான ஆஞ்சநேயா மற்றும் திருமலை , மீண்டும் ஒரு முறை பாக்ஸ் ஆபிஸில் மோதிக் கொண்டன.
இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மற்றும் வசுலிலும் இந்த இரண்டு படங்கள் தோல்வியடைந்தன.
பரமசிவன் vs ஆதி – 2006
அஜித், விஜய் படங்களின் மற்றொரு பொங்கல் மோதல் இது. பரமசிவன் vs ஆதி என இந்த இரண்டு படங்களுமே விமர்சனத்திலும், வசுலிலும் தோற்றன.
ஆழ்வார் vs போக்கிரி – 2007
2007 இல் மற்றொரு பொங்கல் மோதல் இது, இதில் விஜய்யின் போக்கிரி படம், 200+ நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மறுபுறம் அஜித்தின் ஆழ்வார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சரியாக ஜெயிக்கவில்லை.
வீரம் vs ஜில்லா – 2014
அஜித் & விஜய் படங்கள் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 2014 இல் மீண்டும் ஒரே நாளில் வெளியாகி மோதின. இந்த முறை அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா படத்தை விட சிறப்பாக வசூல் செய்தது.
துணிவு Vs வாரிசு – 2023
2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஒரே நாளில் (ஜனவரி 11ஆம் தேதி) அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் வெளியாகிறது. மீண்டும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் போட்டிக்கான நேரம் வந்துவிட்டது. இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்ப்போம்…