முட்டையின் வெள்ளை கரு சரும இறுக்கத்திற்கு எப்படி பயன்படுகிறது ?

தொங்கும் சதை என்பது ஒரு அழகு சார்ந்த பிரச்சனை தான். தற்போது இந்த பிரச்சனை அதிகமாகி வருகிறது. ஆனால் இதனை கட்டுபடுத்த ஒரு வழி உள்ளது. முட்டையின் வெள்ளை கருவை மற்ற இயற்கை பொருட்களாகிய எலுமிச்சை, ஓட்ஸ், போன்றவற்றுடன் சேர்த்து பயன்படுத்துவதால் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடக்கிறது. அதுவும் இயற்கையாகவே ..

முட்டையின் வெள்ளை கரு சரும இறுக்கத்திற்கு எப்படி பயன்படுகிறது ?

வயது அதிகரிக்கும் போது சதையில் சுருக்கம் தோன்றும். சில நாட்களில் சதை தொங்கும் நிலை உண்டாகும். ஆனால் தற்போது இளம் வயதிலேயே சதை தொங்கும் பிரச்சனை உண்டாகிறது. திடீர் எடை குறைப்பு, கொலோஜென் இழப்பு, சருமத்தில் எலஸ்டின்  இழப்பு, வயது முதிர்வு போன்றவை இதன் காரணமாக அறியபடுகின்றன. 

தொங்கும் சதையை சரிபடுத்தி சரும இறுக்கத்தை உண்டாக்க பல்வேறு சரும பாதுகாப்பு சாதனங்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றால் நிரந்தர தீர்வை அளிக்க முடிவதில்லை. இந்த நவீன உலகில் சில வகை ஒப்பனை சிகிச்சை மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வுகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவை நம் பர்சை காலி செய்யும் விதத்தில் விலை உயர்வான சிகிச்சையாக உள்ளன. பெண்களும் ஆண்களும் இந்த பிரச்சனையில் அவதி படும்போது, இதற்கான நிரந்தர தீர்வை, இயற்கை முறையில் வழங்கலாம். 

இந்த பதிவில், பல்வேறு இயற்கை முறைகளில் முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தி சரும தளர்ச்சிக்கு விடை தருகிறது. வாருங்கள் , பார்த்து அறிந்து கொள்வோம்.

முட்டையின் வெள்ளை கருவில், சக்தி மிகுந்த அன்டி ஆக்ஸ்சிடென்ட், புரதம், வைட்டமின் பி6, போன்றவை சரும தளர்ச்சியை குறைக்க உதவுகின்றன. தொங்கும் சதையை போக்க முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தி விரைவில் நல்ல தீர்வை காணலாம்.
 
முட்டை மற்றும் எலுமிச்சை சாறு :
முட்டையின் வெள்ளை கருவை ஒரு கிண்ணத்தில் ;போடவும். அதில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்து கலக்கவும். இந்த மாஸ்கை உங்கள் முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து இந்த மாஸ்க் காய்ந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இப்படி வீட்டில் தயார் செய்த மாஸ்கை வாரத்தில் 2 முறை முகத்திற்கு பயன்படுத்தினால், இளமையான மற்றும் இறுக்கமான சருமம் கிடைக்கும்.

முட்டை மற்றும் ஓட்ஸ் :
முட்டையின் வெள்ளை கருவை ஒரு கிண்ணத்தில் போடவும். அதில் 2 ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை  முகத்தில் தடவி 20 நிமிடம் காய விடவும். காய்ந்தவுடன் ஒரு ஈர துணியால் முகத்தை துடைக்கவும். இந்த ஸ்க்ரபை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்துவதால் சருமம் இறுக்கமாகிறது.

முட்டை மற்றும் பன்னீர் :
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை போட்டு, அதில் 1/2 ஸ்பூன் சோள மாவை சேர்க்கவும். 1 ஸ்பூன் பன்னீரை சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக கலக்கவும். 10 நிமிடம் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவவும். வாரம் ஒரு முறை இதனை பயன்படுத்துவதால் விரைவில் சரும தளர்ச்சி நீங்கி, சருமம் இறுக்கமாகிறது.

முட்டை மற்றும் தேன் :
ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து, 1 ஸ்பூன் தேனை அதனுடன் கலக்கவும். நன்றாக கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து நன்றாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும் . வாரம் ஒரு முறை இதனை பயன்படுத்துவதால் சருமம் இறுக்கமாகி, தொங்கும் சதை குறைகிறது.

முட்டை மற்றும் அரிசி மாவு :
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அதில் ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து நீரால் முகத்தை கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதனை செய்து வந்தால், விரைவில் நல்ல பலனை பெறலாம்.

முட்டை மற்றும் தயிர் :
2 ஸ்பூன் யோகர்டுடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவை ஒரு கிண்ணத்தில் போட்டு கலக்கவும். இந்த கலவையை, முகத்தில் தடவி 10 நிமிடம் காய விடவும். நன்றாக காய்ந்த பிறகு , வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்தினால், சரும தளர்ச்சி நீங்கும்.

முட்டை மற்றும் ஆப்பிள் விழுது :

ஆப்பிள் விழுது 2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவவும். 20 நிமிடம் இந்த கலவையை  முகத்தில் வைத்திருந்து காய விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். மாதத்திற்கு 2 முறை இதனை செய்து வருவதால் தொங்கும் சதை நீங்கி முகம் வசீகரமாகும்.

முட்டை மற்றும் க்ளிசெரின்:
1 ஸ்பூன் க்ளிசெரினுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த  நீரால் முகத்தை கழுவவும். மாதம் ஒரு முறை இதனை பயன்படுத்தி சரும இறுக்கத்தை அதிக படுத்தலாம்.,