உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள்
உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள் சில இதோ உங்களுக்காக..
உடற்பயிற்சி :
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் மூளை ஆரோக்கியமாக செயல்பட முடியும்.
சீரான உணவு முறை :
புரதம், நிறைவுறா கொழுப்பு உள்ள உணவுகள் , பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும்.
ஊக்குவிப்பு :
புதிர் போட்டிகள், விளையாட்டு, புதிய முயற்சி போன்றவற்றின் மூலம் உங்கள் மூளைக்கு சில சவால்களைக் கொடுங்கள்.
பாதுகாப்பு :
தலைக்கவசம் , சீட் பெல்ட் போன்றவற்றை அணிவதன் மூலம் தலைக்கு உண்டாகும் பாதிப்பை தவிர்த்து கொள்ளலாம்.
உறக்கம் :
மூளை தன்னை புதுப்பித்துக் கொள்ளவும் சீராக செயல்படவும் 6-8 மணி நேர உறக்கம் மிகவும் அவசியம்.
கற்றுக் கொள்ளுதல் :
புதிய மொழி அல்லது புது விஷயங்களைக் கற்றுக் கொள்வதால் உங்கள் மூளையை இளமையாக வைத்துக் கொள்ள முடியும்.
உங்கள் வழக்கத்தை மாற்றுங்கள் :
தினசரி ஒரே விதமான பழக்கத்தை கையாளுவதை விட அதில் அவ்வப்போது சிறு மாற்றம் செய்து கொண்டால் மூளைக்கு ஒரு புது மாற்றம் கிடைக்கும்.
சகஜமாக பழகுவது :
மற்றவர்களிடம் சகஜமாக பழகுவதால் மூளையின் செயல்முறை மேம்பட்டு, மனஅழுத்தம் குறையலாம்.
மனஅழுத்தத்தை நிர்வகிக்கவும் :
மனஅழுத்தம் காரணமாக பல தீங்கு உண்டாக்கும் ஹார்மோன்கள் வெளியேறக்கூடும் என்பதால் அடிக்கடி உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
புத்தகங்கள் படிக்கலாம் :
கதைகள் அல்லது புத்தகங்கள் வாசிப்பதால் அறிவாற்றல் வீழ்ச்சி உண்டாகும் அபாயத்தைக் குறைக்க முடியும்.
புகை மற்றும் போதை பழக்கத்தைத் தடுக்கலாம் :
புகை, மது, போதை போன்ற பழக்கங்கள் மூளையின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்குவதால் அவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
டிஜிட்டல் அழிவு :
அதிக நேரம் மொபைல், கணினி போன்றவற்றின் திரையை காண்பதால் மூளைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே திரை நேரத்தைக் குறைத்துக் கொள்வதால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.