உங்களுக்கு 50 வயதா? உங்கள் எடை குறைக்க வேண்டுமா?
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என அறிய இங்கே படியுங்கள்.
முதுமை என்பது தவிர்க்க முடியாதது. நம் மன நலன் மற்றும் உடல் நலனில், இந்த முதுமை பல தாக்கங்களை ஏற்படுத்தலாம். தோல் சுருக்கம், எலும்பு மற்றும் தசை பலவீனம் போன்ற பொதுவான விஷயங்கள் தவிர, இந்த வயதில் உடல் எடை சார்ந்த சிக்கல்களும் ஏற்படலாம். உடல் எடையை குறைக்க, சில அடிப்படை விஷயங்கள் செய்ய வேண்டும், அவற்றில் சில:
* பிசிக்கல் ஆக்டிவிட்டி
* உடல்நிலை பராமரித்தல்
* உடல் செயல்பாடுகள்
உடல் எடையை ஒழுங்குபடுத்துவதில் மெட்டாபோலிசம் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் வயது கூட கூட மெட்டாபோலிசம் குறைகிறது. இதனால் எடை அதிகரிப்பு அல்லது எடை குறைவு ஏற்பட்டு , எலும்பு, இதயம் மற்றும் மூளை பிரச்சனைகள் ஏற்படுகிறது.
50 வயதிற்குப் பிறகு உடல் எடையை குறைக்க சில வழிகள் உள்ளன:
டையட்டிசியன் மற்றும் உடற்பயிற்சியாளரிடம் கலந்தாலோசியுங்கள்:
எந்த வயதாக இருந்தாலும் உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஆனாலும், 50 வயதுக்கு பிறகு உணவு பழக்கம் அல்லது செயல்பாடுகளில் ஏதேனும் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது சரியல்ல. எனவே உணவில் ஏதேனும் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு டையட்டிசியன் மற்றும் பயிற்சியாளரைக் கலந்தாலோசித்து, அவர்களின் மேற்பார்வையில் செயல்படுங்கள்.
ஹோட்டல் சாப்பாட்டை குறையுங்கள்:
தினமும் சமைப்பது எல்லாருக்கும் கஷ்டம் தான். உடம்பு டயர்டாக இருக்கும் போது, ஹோட்டலில் சாப்பிட்டால் நன்றாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் அது புத்திசாலித்தனமான முடிவா? உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கும் போது வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஆக்டிவ்வாக இருங்கள்:
பொதுவாகவே முதுமையில் நம் உடல் போதுமான சக்தியோடு இருக்காது. இருந்தாலும், உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, நாம் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்தால் அது பெரிய தவறு. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை நம் எலும்புகள், மூட்டுகள், தசைகள் மற்றும் உடலின் பிற பாகங்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தி விடும்
உடல் அமைப்பு முக்கியமானது:
மனித உடல் கொழுப்பு மற்றும் தசைகளால் ஆனது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, அதிக கொழுப்பை அகற்றுவதற்கும் தசைகளை வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஒரு ஆரோக்கியமான எடையை அடைவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.
போதுமான ஓய்வு பெறுங்கள்:
உங்களுக்கு போதுமான தூக்கம் வருகிறதா? இதற்கு பதில் இல்லை என்று சொன்னால், உங்கள் எடையும் ஒரு காரணம். மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ உடல் சரியாக செயல்பட போதுமான தூக்கம் அவசியம். எடை குறைக்கும் முயற்சியில் இருக்கும் போது, தினமும் 6-8 மணிநேரம் தூங்குவது முக்கியம்.