திருவாதிரைக் களியை இப்படி செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
சிவனுக்கும் திருவாதிரை நாளன்று களியை படைத்து களியை (அருள் என்கின்ற பேரின்பத்தை)பெறுங்கள்.
திருவாதிரைக் களியை இப்படி செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
திருவாதிரை திருநாள் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது ஆருத்ரா தரிசனம் மற்றும் சிவனுக்கு பிடித்த திருவாதிரை களியும் தான். திருவாதிரை களியை எப்படி செய்வதென்று இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 100 கிராம் (1 பங்கு)
வெல்லம் – 75 கிராம் (3/4 பங்கு)
தேங்காய் துருவல் – (சிறிது)
தண்ணீர் – 2½ பங்கு
ஏலக்காய் பொடி - 1ஸ்பூன்
நெய்
முந்திரிப் பருப்பு
உப்பு
திருவாதிரைக் களி செய்முறை:
பச்சரிசியை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரிசி ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்திற்கு அரைத்து வைத்து கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து 2½ பங்கு தண்ணீரை ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும், வெல்லத்தையும் சேர்க்க வேண்டும். வெல்லம் தண்ணீரில் கரைந்து நன்கு கொதித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து அரைத்து வைத்துள்ள அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாதவாறு கிளறி நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். மூன்று நிமிடங்களில் களி வெந்து கெட்டியாகி விடும். மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரிப் பருப்பினைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெந்த களியில் நெய், தேங்காய் துருவல், ஏலப்பொடி மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கிளற வேண்டும். களி நன்கு திரண்டு வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும். இதை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு சுவையான திருவாதிரைக் களி தயார். இப்போது தான் புரிகிறது இந்த களி சிவனுக்கு ஏன் மிகவும் பிடித்திருக்கிறது என்பது. சிவனுக்கும் திருவாதிரை நாளன்று களியை படைத்து களியை (அருள் என்கின்ற பேரின்பத்தை)பெறுங்கள்.