மண்புழு உரம்
மண்ணையும், மனிதனையும் காக்கும் ஆற்றல் உள்ள மண்புழு உரத்தை தயாரிக்கும் முறையை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
மண்புழு உரம்
உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை உரமான மண்புழு உரத்தை தயாரிக்கும் முறையை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
- மண்
- மட்கும் கழிவுகள்
- மண்ப்புழுக்கள்
- நெல் உமி(அ) தென்னை நார் கழிவுகள்(அ) கரும்பு தோகை.
மண்புழுக்களை தேர்வு செய்தல்:
- கழிவுகளில் அதிக எண்ணிக்கையில் வளரும் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும்.
- எல்லாச் சூழ்நிலையிலும் வளரும் இரகமாக இருக்க வேண்டும்.
- அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் இரகமாக இருக்க வேண்டும்.
- அதிக அளவில் உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும் தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும்.
மண்புழு இரகங்கள்:
- மேற்பரப்பு - எப்பிஜிக் (எ.கா) லும்பிரிக்கஸ், யூட்ரில்லஸ், எஹ்சீனியா.
- நடுப்பரப்பு - என்டோஜியிக் (எ.கா) (30செ.மீ.ஆழம்) அபரேக்டிபா.
- கீழ்ப்பரப்பு- அனிசிக் (எ.கா) (3மீ.ஆழம்) லும்பிரிக்கஸ் டெரஸ்டிரில், அபரேக்டிபா லாங்கா.
ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை.
உற்பத்திக்கான இடம்:
அதிக அளவு ஈரப்பதம் மற்றும் நிழலுடன் கூடிய இடமாக இருக்க வேண்டும்.
மண்புழு உரத்தொட்டி அமைப்பு:
மண்புழு உரத் தொட்டியை 5 பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்.
- முதல் பாகத்தில் கூழாங்கல்,
- அடுத்த பாகத்தில் மணல்,
- மூன்றாவது பாகத்தில் பாதி மக்கிய குப்பை,
- நான்காவது பாகத்தில் மண்புழுக்கள்,
- ஐந்தாவது பாகத்தில் சமையலறை கழிவுகள்.
பின் சணல் சாக்கால் இந்த தொட்டியை முடி வைக்கவும்.
உரக்குழி கட்டமைப்பு:
- உயரம் - 2 அடி
- அகலம் - 3 அடி
- நீளம் - தேவைக்கேற்ப
தொட்டியின் அடிப்பகுதி சேமிப்பு குழியுடன் சாய்வான வடிவில் இருக்க வேண்டும்.
மண்புழு படுக்கை:
- நெல் உமி- 3 சென்டிமீட்டர் உயரம்,
- ஆற்று மணல் 3 சென்டிமீட்டர் உயரம்,
- தோட்ட மண் 3 சென்டிமீட்டர் உயரம்.
இதற்கு மேல் தண்ணீரை தெளிக்க வேண்டும்.
கழிவுகளை படுக்கையில் போடும் முறை:
- பாதி மட்கிய கழிவுகள் உடன் 30% கால்நடைக் கழிவை கலந்துக் கொள்ளவும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பில் விளிம்பு வரை நிரப்பும்.
- அதன் பிறகு ஈரப்பதம் 60% இருக்க வேண்டும்.
- தேர்வு செய்த மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். (1 மீட்டர் நீளம் × 1 மீட்டர் அகலம் × 0.5 மீட்டர் உயரம் - 2 கிலோ மண்புழு).
குறிப்பு:
அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.
அறுவடை செய்தல்: 40-60 நாட்களிலே கழிவுகள் மட்கி உரமாக மாறிவிடும். அதன் பிறகு
மண்புழு படுக்கையின் மேல் உள்ள கழிவினை மட்டும் வாரத்திற்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.
மண்புழு சேகரிப்பு:
- தயாரான மண்புழு உரத்தினை ஒரு குவியலாக குவிக்க வேண்டும்.
- 2 அல்லது 3 மணி நேரத்தில் புழுக்களானது கீழே போய்விடும்.
- பின்பு உரத்தினை நிழலில் உலர்த்தி சல்லடையால் சலிக்க வேண்டும்.
- சலித்த உரத்தை பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தலாம்.
- சலித்த பிறகு மேல் தங்கும் புழு முட்டைகளையும், குட்டி புழுக்களையும் புதிய உரத்தினை தயாரிக்க பயன்படுத்தலாம்.
மண்ணையும், மனிதனையும் காக்க மண்புழு உரத்தை பயன்படுத்துவோம்.