பணம் சேமிக்க உதவும் சில எளிமையான டிப்ஸ்!!!

பணம் சேமிக்க உதவும் சில எளிமையான டிப்ஸ் பற்றி அறிய இங்கே படியுங்கள்.

பணம் சேமிக்க உதவும் சில எளிமையான டிப்ஸ்!!!

சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல்,சிறுக சிறுக பணம் சேமித்தாலே, அது முடிவில் கணிசமான ஒரு தொகையாக நமக்கு கிடைக்கும். மிக எளிய, பழக்க வழக்கங்களில் கொண்டு வரும் சில மாற்றங்கள், பண சேமிப்பில் நமக்கு எவ்வளவு நன்மையை தரும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

டிப்ஸ்கள்:

உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்டில் பணத்தை குறைவாக செலவிடுங்கள். அதற்குப் பதிலாக உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட , ஆரோக்கிய விஷயங்களில் ஈடுபடலாம்.

வங்கிகளிலும் சரி, நண்பர்களிடமும் சரி, தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். 

கார்கள், போன்கள் போன்றவற்றை அடிக்கடி மாற்றாதீர்கள். சிலர், தேவையில்லாவிட்டாலும் ஆசைக்காக ஒவ்வொரு போன் மாடலாக மாற்றி கொண்டு இருப்பார்கள். இது ஒரு வீண் செலவு தான்.

சுற்றிபார்க்க வேகேஷனுக்கு என்று செல்வது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்ற கணக்கில் வைத்து கொள்ளுங்கள். அதுவும் 3 நாட்களுக்கு மிகாமல் பார்த்து கொள்ளுங்கள். நீண்ட தூரம் பயணம் செய்து  புதிய இடங்களை பார்த்து தான் விடுமுறைகளை கழிக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாம் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே கவனிக்கப்படாமல் பல அழகிய இடங்கள் இருக்கும். குடும்பத்துடன் அங்கே சென்று வந்தால் மனமும் இலேசாகும், பர்சும் குறையாது.

கிரெடிட் கார்ட் அதிகமாக பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டிற்கு செலுத்த வேண்டிய பணத்தை முழுமையாக செலுத்தி விடுங்கள். அதுமட்டுமல்லாமல் நிறைய கிரெடிட் கார்ட் வைத்து கொள்ளாதீர்கள். ஒரு கார்ட் போதும்.

உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை தேரந்தெடுத்து, முதலீடு செய்யுங்கள்.

உங்கள் செலவுகளை எப்போதும் கணக்கில் வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு என்று செலவு செய்ய வரம்புகளை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள்.

உங்கள் எல்லா பில்களையும் சரியான நேரத்தில் செலுத்துங்கள். 

பட்ஜெட் போட்டு, எவ்வளவு, எங்கு செலவிடுகிறீர்கள் என்பதைப் பார்க்கவும். 

ஆஃபர் மற்றும் ஷாப்பிங் என தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.