கோவிட் -19 காலகட்டத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருப்பது எப்படி?
உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது பதின்வயதினர்களுக்கோ தொற்றுநோயை எவ்வாறு சிறந்த முறையில் விளக்குவது என்பது ஒவ்வொரு பெற்றோரும் சமாளிக்க வேண்டிய ஒன்று.
குழந்தைகள் தங்கள் பெற்றோரை உணர்ச்சிபூர்வமான ஆதரவாக பார்ப்பார்கள், மேலும் சூழ்நிலையிலிருந்து எவ்வாறு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை அறிய அவர்களின் நடத்தையிலிருந்து குறிப்புகளை எடுப்பார்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஆதரவு அளிக்கவும் அவர்களின் மன ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தவும் சில வழிகள் இங்கே.
- உங்கள் பிள்ளைகள் வழக்கமான செயல்பாடுகளை செய்வதில் மாற்றம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் அவர்கள் ஒழுக்கம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
- பள்ளிகளும் கல்லூரிகளும் வீட்டுக்கல்வி நுட்பங்களைக் கொண்டு வந்துள்ளன, எனவே அவர்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் மற்றும் கற்றல் வழக்கத்தை உருவாக்குங்கள். மேலும், அவ்வப்போது சில வேடிக்கை விளையாட்டுகளை அமைத்துக் கொடுக்கவும். இதனால் அவர்கள் அதிக அழுத்தம் அல்லது சலிப்பை உணராமல் இருக்கமுடியும்.
- உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் பகிர்ந்து கொள்வதில் நேர்மையாக இருங்கள், அதே நேரத்தில் சில சமயங்களில் சோகமாகவும் வருத்தமாகவும் உணருவது சரி என்று அவர்களிடம் சொல்லுங்கள். இது அவர்களின் உணர்வுகளுக்கு வெளிப்பாட்டைக் கொடுக்கும் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்க உதவும்.
- தொற்றுநோயைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள், அவர்களின் கேள்விகளுக்கு பதில்களைத் தாருங்கள். எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையைத் தாருங்கள். நேர்மறை வலுவூட்டல்கள் எப்போதும் உதவுகின்றன.
- செய்திகள் மற்றும் சமூக ஊடகத்தை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
- பிள்ளைகள் அவர்கள் நண்பர்களுடன் தவறாமல் பேச ஊக்குவிப்பதன் மூலம் தங்கள் நண்பர்களுடன் இணைந்திருப்பதை உணர அவர்களுக்கு உதவுங்கள்.
- சீரான உணவு, சரியான தூக்கம், உடற்பயிற்சி மற்றும் அவர்களின் ஆற்றலை எரிக்க அவர்களுக்கு உதவுங்கள். இது அவர்கள் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.
கடைசியாக, நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னணியில் போராடி வரும் உங்கள் சமூகத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை மதிக்க கற்றுக் கொடுங்கள். நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதில் அவர்களின் பங்கை அங்கீகரிப்பதே நாம் செய்யக்கூடியது.