ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் iCloud ஐ பயன்படுத்துவது எப்படி ?
ஆப்பிள் போனின் முக்கிய அம்சமான, iCloud ஐ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் எவ்வாறு பயன்படுத்துவது என அறிய இந்த கட்டூரையை படியங்கள்.
நீங்கள் எப்போதாவது ஒரு ஆப்பிள் சாதனத்தைப் பயன்படுத்தியிருந்தால், iCloud எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். ஆப்பிள் நிறுவனம் அதன் அனைத்து டேட்டாக்கள், போட்டோக்கள், வீடியோக்கள், ரிமைன்டர்கள், நோட்ஸ்கள் மேலும் பலவற்றை iCloud இல் தான் சேமிக்கும். ஆப்பிள் அப்ளிகேஷன்கள் மற்றும் ஆண்ட்ராய்டின் வரலாற்றைப் பார்க்கும்போது, ஆண்ட்ராய்டுக்காக ஆப்பிள் உருவாக்கிய ஒரே ஒரு அப்ளிகேஷன் ஆப்பிள் மியூசிக் தான். பொதுவான கருத்துப்படி, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான iCloud அப்ளிகேஷனை பெறுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் iCloud ன் பல சேவைகளைப் பயன்படுத்த ஒரு வழி உள்ளது. எப்படி என்று யோசிக்கிறீர்களா? இந்த கட்டூரையை தொடர்ந்து படியுங்கள்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் iCloud ஐ பயன்படுத்த ஒரே வழி ப்ரவுசரை பயன்படுத்துவது தான். இவ்வாறு பயன்படுத்துவது iCloud அப்ளிகேஷனை பயன்படுத்துவது போல இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட அதற்கு சமமான ஒன்றாகிவிடுகிறது. ப்ரவுசரை பயன்படுத்தி, நாம் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவேற்றலாம், டவுண்லோட் செய்யலாம், ஸ்டோரேஜை சரிபார்க்கலாம் மேலும் பலவற்றை செய்யலாம். Find My iPhone ஐ பயன்படுத்தி உங்களது ஆப்பிள் சாதனத்தை கூட கண்டுபிடிக்கலாம்.
1. ஆண்ட்ராய்டு போனில் iCloud ஐ பயன்படுத்த, ஏதாவது ஒரு ப்ரவுசரை திறந்து, அதில் icloud.com என டைப் செய்யுங்கள்.
2. இப்போது ஆப்பிள் அக்கவுண்ட்டுக்கான ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உங்கள் அக்கவுண்ட்டை ஓபன் செய்யுங்கள்.
3. பின்னர், அதில் காட்டும் சேவைகளை உங்களுக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
ஆட்டோமெடிக் சிங்க், ரிமைன்டர்ஸ், நோட்ஸ் போன்ற iCloud இல் உள்ள அனைத்து அம்சங்களும், ஆண்ட்ராய்டு போனில் செயல்படாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஆனால் இதில் எனது Find My iPhone சிறப்பாக இயங்குகிறது.
மேலும், நீங்கள் கூகிள் குரோம் போன்ற ப்ரவுசர்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் iCloud.com ஐ ஒரு அப்ளிகேஷனாக மாற்றலாம். இதைச் செய்ய, icloud.com ஐ திறந்து, மேல்-வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் செலக்ட் செய்து, ‘Add to Home screen’ என்பதைத் தேர்வு செய்யுங்கள். இப்போது இது போனின் ஹோம் ஸ்கீரினில் ஐகானாக வந்துவிடும்.