தீயா வேலை செய்யனும் குமாரு !
சில சிறு சிறு பழக்கங்களை நாம் ஏற்படுத்தி கொண்டால், அது வியக்கத்தக்க பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
கஷ்டப்பட்டு வேலை செய்வதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக வேலை செய்யலாம். அப்படிப்பட்ட சில பழக்க வழக்கங்களை இங்கே பார்க்கலாம்.
1. முன்னுரிமை:
ஒவ்வொரு நாளும் காலை 9-10 மணி மிக முக்கியமானது. இந்த நேரத்தில், மிகவும் சவாலான மற்றும் மிக முக்கியமான வேலைகளை முதலில் முடிக்க வேண்டும்.
2. திட்டமிடுதல்:
ஒவ்வொரு இரவிலும்,, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள் அடங்கிய பட்டியலை உருவாக்கி கொள்ளுங்கள். காலையில் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க இது உதவுகிறது.
3. முக்கியமான முடிவுகள்:
ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும், மூன்று முக்கியமான வேலைகளை பட்டியலிடுங்கள். இது எல்லா நாட்களை திட்டமிடவும், அதிக கவனம் செலுத்தவும் உதவும்.
4. சிந்தனை:
எண்ணங்களில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட நம்மை சிறப்பாக செயல்பட வைக்கும். உதாரணமக, "இன்று செய்ய வேண்டிய வேலைகள் அதிகம்!" என்று நினைப்பதற்கு பதிலாக, "இன்று நான் கவனம் செலுத்த வேண்டிய இரண்டு விஷயங்கள் இவை தான்”, என உங்களுக்குள்ளே நேர்த்தியாக சிந்தியுங்கள்.
5. நேரம் :
மளிகைக் கடை, வங்கி, லிஃப்ட் போன்றவற்றில் வரிசையில் காத்திருந்து நேரம் போகிறதா? அந்த மாதிரி இடங்களில் புத்தகத்தைக் கொண்டு போய் படிக்கலாம். அல்லது நீங்கள் படிக்க வேண்டிய, சில மின்னஞ்சல்களை அங்கே படிக்கலாம். இது எதுவுமே முடியவில்லை என்றால், உங்களை சுற்றியுள்ள சுற்றுபுறத்தை, உலகத்தை உன்னிப்பாக கவனியுங்கள். அது பல பாடம் சொல்லி தரும்.