பர்டாக் வேரின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்
பர்டாக் செடி அஸ்டெரேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவர பெயர் ஆர்க்டியம் லாப்பா. இது சூரியகாந்தி மற்றும் டெய்சி செடிகளை ஒத்தது. வடக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இந்த தாவரம் வளர்க்கப்படுகிறது
மேற்கத்திய மூலிகை மருந்துகள் மற்றும் சீன மருத்துவத்தில் பல்வேறு உடல் உபாதைகளைப் போக்க இந்த தாவரம் பயன்படுத்தப்படுகிறது
பர்டாக் வேர்களில் எண்ணெய்கள் மற்றும் டானின்கள், தாவர ஸ்டெரோல்கள், குவெர்செட்டின், பினோலிக் அமிலங்கள் மற்றும் லுடோலின் எனப்படும் முக்கியமான சேர்மங்கள் உள்ளன. இந்த வேர்களின் ஆரோக்கிய நன்மைகளுக்கு இவை அனைத்தின் இருப்பும் ஒரு முக்கிய காரணமாகும்.
பாரம்பரியமாக, பர்டாக் வேர்கள் சிறுநீர் பிரிப்பதற்கு மற்றும் செரிமானத்திற்கு உதவுவதற்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது, ஆராய்ச்சியாளர்கள் அதன் பிற சுகாதார நன்மைகளை கண்டுபிடித்துள்ளனர், இந்த கட்டுரையில் நாம் அவற்றைப் பற்றி காணவிருக்கிறோம்.
பர்டாக் வேர்களின் ஆரோக்கிய நன்மைகள்:
1. புற்றுநோயைத் தடுக்கிறது:
பர்டாக் வேர்களில் உள்ள ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக புற்றுநோயைத் தடுக்கும் சிறந்த திறனைக் கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆய்வில், மார்பக புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை பர்டாக் ரூட் குறைக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2. இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது:
அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு அல்லது க்ளுகோஸ் அளவு நீரிழிவு நோயை உண்டாக்குகிறது. பர்டாக் வேர்களுக்கு நீரிழிவு எதிர்ப்பு தன்மை இருப்பதால், இன்சுலின்அளவு அதிகரிக்காமல் தடுக்க பர்டாக் வேர்கள் உதவுகிறது.
3. இரத்தத்தை சுத்தம் செய்கிறது:
பாரம்பரிய மருத்துவத்தில் இரத்தத்தை சுத்தீகரிக்க பர்டாக் வேர்கள் பயன்படுத்தப்பட்டன. 2011 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வில், பர்டாக் வேர்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும், இதனால் இரத்தம் தூய்மையாக்கப்பட்டு மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
4. அழற்சியைக் குறைக்கிறது:
பர்டாக் வேர்கள் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடெண்ட்களைக் கொண்டுள்ளது, அவை செல்களை தீங்கு உண்டாக்கும் ப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. ருமேடிக் நோய்களின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கீல்வாதம் நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள அழற்சி குறிப்பான்களை பர்டாக் ரூட் குறைக்கிறது என்று கூறப்படுகிறது.
5. சரும பாதிப்புகளை நிர்வகிக்கிறது:
பர்டாக் வேர்கள். நீண்ட காலமாக எக்சிமா, கட்டிகள், சோரியாசிஸ் போன்ற சரும நிலைகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது. இதனை சருமத்தில் மேற்புறம் தடவுவதால், இந்த வேரில் காணப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உண்டாகும் பாதிப்பைப் போக்க உதவுகிறது. பர்ன் கேர் & ரிசர்ச் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பர்டாக் வேர்கள் மேற்பூச்சு தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவக்கூடும் என்று கண்டறியப்பட்டது.
பர்டாக் வேரின் பக்க விளைவுகள்:
- உங்களுக்கு கிரிஸான்தமம் அல்லது டெய்சி போன்ற பூக்களுக்கு ஒவ்வாமை இருந்தால், பர்டாக் வேர் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும்.
- இந்த வேர் இயற்கையில் டையூரிடிக் என்னும் சிறுநீர் பிரிப்பு தன்மையை கொண்டதாகும், எனவே உங்கள் உடல் நீர்ச்சத்து குறைந்து இருந்தால் இதனை எடுக்கக்கூடாது.
- கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மையை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் பர்டாக் வேர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- நீங்கள் டையூரிடிக்ஸ், ரத்த மெலிவு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இருந்தால் பர்டாக் வேர் உட்கொள்ள வேண்டாம்.
பர்டாக் வேர்களை எவ்வாறு பயன்படுத்துவது?
- பர்டாக் வேர்கள் தேநீர், மூலிகை டின்ச்சர் மற்றும் மாத்திரை வடிவங்களில் கிடைக்கப்படுகிறது
குறிப்பு:
பர்டாக் வேர்களை உட்கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.