உங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்க வேண்டுமா?
கோலம் போடும் பழக்கத்தை நம் முன்னோர் அழகுக்காக மட்டும் செய்யவில்லை ஆரோக்கியத்திற்காகவும், நல்ல பழக்கத்திற்காகவும் ஏற்படுத்தினார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள், ஆனால் இந்த (கோலம்) சித்திரத்தை வரைந்தாலே சுவர் (உடல்) நன்றாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்கும் ஆற்றல் கோலத்திற்கு உண்டு
கோலத்தை அழகிற்காக நம் வீட்டின் வாசலிலும், வீட்டில் உள்ள பூஜை அறையிலும், கோயில்களிலும், எந்த ஒரு விசேஷம் நடக்கும் இடங்களிலும் கோலத்தை போட்டு அலங்கரிப்பது நம் முன்னோர்களிடம் இருந்து நமக்கு கிடைத்த ஒரு அற்புதமான பழக்கமாகும். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள், ஆனால் இந்த (கோலம்) சித்திரத்தை வரைந்தாலே சுவர் (உடல்) நன்றாக இருக்கும்.கோலத்தை வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு சொல்லுவார்கள்.ஆனால் நம் தமிழ்நாட்டில் போடும் கோலம் தனித்துவம் மிக்கவை. கோலத்தை மூன்று வகையாகப் பிரிப்பார்கள்: நெளி கோலம், கம்பி கோலம், சிக்கு கோலம்.
தமிழ்நாட்டில் போடும் கோலத்தை மட்டும் தான் புள்ளி வைத்த போடுவார்கள் அந்த புள்ளி கோலம் போடுவது மிகவும் துல்லியமானதாகவும், சிக்கலானதாகவும் இருப்பதே அதனுடைய சிறப்பு ஆகும். கோலம் போடும் பழக்கத்தை நம் முன்னோர் அழகுக்காக மட்டும் செய்யவில்லை ஆரோக்கியத்திற்காகவும், நல்ல பழக்கத்திற்காக செய்தார்கள் என்று உங்களுக்கு இக்கட்டுரையின் மூலம் தெரியப்படுத்துகிறோம்.
கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்:
- அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்,
- அதிகாலையில் எழுந்து கோலம் போடும்போது சுத்தமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் நன்றாக வேலை செய்யும்,
- வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது,
- பெண்கள் குனிந்து நிமிர்ந்து கோலம் போடும்போது அவர்களின் கர்ப்பப்பை பலப்படுகிறது,
- அறிவாற்றலை அதிகரிக்கிறது,
- கோலம் போடும்போது முதுகு தண்டுவடம் பலம் பெறும், இதனால் மற்றஉறுப்புக்களையும் ஆரோக்கியமாக இருக்க செய்கிறது,
- கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது,
- மூளையையும், உடலையும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது,
- படைப்பாற்றல் திறனை அதிகரிக்க செய்கிறது,
- எந்த சிக்கலான பிரச்சனையும் எளிதாக சமாளிக்கும் ஆற்றலை கொடுக்கிறது,
- அரிசி மாவினால் கோலம் போடுவதால் பிற உயிரினங்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்துகிறது.
- கோலம் போடுபவர்களுக்கு மட்டுமில்லாமல் அதை கடந்து செல்பவர்களுக்கும் நேர்மறை எண்ணங்களை கொடுக்கிறது,
- கோலம் இருக்குமிடத்தில் தெய்வங்கள் வீற்றிருக்கும் என்பார்கள், அதனால் தான் வீட்டில் உள்ள பூஜை அறையிலும், கோயில்களிலும், விசேஷம் நடக்கும் இடங்களிலும் கோலம் இட்டு தெய்வங்களை வீற்றிருக்க செய்கிறார்கள்.
நல்ல பழக்கத்தை மாற்றவே கூடாது, நம் முன்னோர் ஏற்படுத்திய இந்த பழக்கத்தை நாம் செய்வதோடு மட்டும் நின்று விடாமல், நம் அடுத்த தலைமுறையினருக்கும் இதை கற்றுக் கொடுத்து நாமும் ஆரோக்கியமாக வாழ்வோம், அவர்களையும் ஆரோக்கியமாக வாழவைப்போம்.எந்த ஒரு சிக்கலான பிரச்சனைக்கும் முடிவு உள்ளது என்பதை உணர்த்தும் சிக்கல் கோலம். கோலத்தைப் போல அனைவரின் வாழ்க்கையும் வண்ணமயமாகட்டும்.