ராசி அதிபதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

ராசி அதிபதியை பொருத்தே ஒருவருடைய குணநலன்கள் இருக்கும்.

ராசி அதிபதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்!

ராசி அதிபதிகள் :

ஒருவர் ஜாதகத்தில் உள்ள ராசி அதிபதி வைத்து தான் ஒருவரின் குணநலன்கள் அறியப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் அதன் சொந்த வீட்டில் இருக்கும் போது அதன் பலம் அதிகமாக இருக்கும். ஒருவர் எந்த ராசியில் பிறக்கிறாரோ அவருடைய குணம் அந்த ராசிக்குரிய கிரகத்தை பிரதிபலிக்கும். எந்த ராசிக்கு எந்த அதிபதி என்று இப்போது பார்க்கலாம். 

12 ராசிக்கான அதிபதிகள்

              

    ராசி            அதிபதி

மேஷம்          செவ்வாய்

ரிஷபம்           சுக்கிரன்

மிதுனம்           புதன்

கடகம்               சந்திரன்

சிம்மம்              சூரியன்

கன்னி              புதன்

துலாம்              சுக்கிரன்

விருச்சிகம்     செவ்வாய்

தனுசு                  குரு

மகரம்                  சனி

கும்பம்                 சனி

மீனம்                    குரு

ராசி அதிபதியின் நிலை மற்றும் அதற்கு உரிய தெய்வங்கள் :

சூரியன்- இவர் உடல், திறமை, தொழில், எண்ணம் மற்றும் ஆற்றலுக்குக்  காரணகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் சிவன் மற்றும் சூரியன்.

சந்திரன்- இவர் சமயோஜிதபுத்தி, கற்பனாசக்தி, உடல், எண்ணம் மற்றும்  மனோகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் அம்பிகை.

செவ்வாய்- இவர் சுறுசுறுப்பு, ஆற்றல் மற்றும் திறமைகளுக்குக் காரணகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் முருகப்பெருமான்.

புதன்- இவர் கலைகள்,  கற்பனாசக்தி மற்றும் புத்திகாரகன் ஆவார். இவருக்குரிய தெய்வம் மகாவிஷ்ணு.

குரு - இவர் கலைகள், ஆற்றல் மற்றும் புத்திகாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் தட்சிணாமூர்த்தி. 

சுக்கிரன்- இவர் ஞானம், செல்வம், திறமை மற்றும்  சுகபோககாரகன் ஆவார். இவருக்கு உரிய தெய்வம் மகாலட்சுமி.

சனி - இவர் நேர்மை மற்றும் மந்தகாரகன் ஆவார். இவருக்குரிய தெய்வம் விநாயகர்.

நாமும் நம் ராசிக்கான அதிபதிக்குரிய தெய்வத்தை வழிபட்டு வந்தால் நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தை குறைத்து அருள் புரிவார்.