கேட்டோ டயட்டில் உட்கொள்ள வேண்டிய உணவு பட்டியல்
கேட்டோ டயட் என்பது இப்போது பிரபலமாக பின்பற்றப்படும் ஒரு டயட் ஆகும். குறைந்த கார்போ , அதிக கொழுப்பு டயட் ஆகிய இந்த கேட்டோ டயட் சிறந்த ஒரு டயட்டாக பல ஆய்வுகளில் குறிப்பிடப்படுகிறது .
எடை குறைப்பு, நீரிழவு மற்றும் எபிலெப்சி போன்ற குறைபாடுகளுக்கு இந்த டயட் நல்ல தீர்வை தருகின்றது. சில வகை புற்று நோய்க்கும் , அல்சைமர் மற்றும் வேறு நோய்களுக்கும் இந்த டயட் நல்ல நன்மையை தருவதாக ஆதாரங்கள் உள்ளது. இந்த டயட்டில் , ஒரு நாளில் கார்போ உட்கொள்ளல் அளவு 20-50கிராம் மட்டுமே . பல ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகள் இந்த டயட்டிற்குள் எளிதாக அடங்குகின்றன. கீழே 15 வகையான உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை கேட்டோ டயட்டில் அடங்கும் உணவுகள் ஆகும்.
கடல் உணவுகள் :
கடல் உணவுகள் பெரும்பாலும் கார்போ சத்து இல்லாத உணாவுகள் தான். அப்படியே இருந்தாலும் மிக குறைந்த அளவு கார்போ தான் இருக்கும். மீன் உணவுகள் வைட்டமின், மினரல் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவற்றின் ஆதாரமாக உள்ளன.
குறைந்த கார்போ காய்கறிகள் :
ஒரு கப் குறைந்த கார்போ காய்கறிகளில் 1-8 கிராம் கார்போ சத்துகளே உள்ளன. காய்கறிகள் ஊட்டச்சதுகள் அதிகம் உள்ளவை. மேலும் நோய்கள் வருவதை இவை தடுக்கின்றன.
சீஸ் :
சீஸில் புரதம், கால்சியம், மற்றும் நன்மை தரும் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளன. இருந்தாலும் இதில் கார்போ சத்து குறைவாகவே காணப்படுகின்றன.
அவகாடோ :
அவகாடோவின் தினசரி அளவு உட்கொள்ளளில் வெறும் 2 கிராம் அளவு கார்போ சத்து மட்டுமே உள்ளது. ஆனால் இதில் நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளது. பொட்டசியம் அதிகமாக உள்ளது. அவகாடோ இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி :
ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியில் கார்போ சத்து முற்றிலும் இல்லை. ஆனால் புரதம் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன. புற்களை உணவாக கொண்ட ஆடுகளின் இறைச்சிகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
முட்டை :
முட்டையில் 1 கிராமை விட குறைந்த அளவு கார்போ சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிற்றை பசிக்காமல் வைத்துக் கொள்ளும். முட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் இருக்கும்.கண்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முட்டை உதவும்.
தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் கேடொன் உற்பத்தி செய்யும் கூறு அதிகமாக உள்ளது. தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடையை குறைக்கிறது. மேலும் வயிற்றில் உண்டாகும் கொழுப்பை குறைக்கிறது.
க்ரீக் யோகர்ட் மற்றும் சீஸ் :
யோகர்ட் மற்றும் சீஸின் தினசரி உட்கொள்ளல் அளவில் 5 கிராம் கார்போ சத்து மட்டுமே உள்ளது. இந்த உணவுகள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வை தருவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
ஆலிவ் எண்ணெய் :
சுத்தமான ஆலிவ் எண்ணியில் அன்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது. சாலட் , மயோனிஸ் போன்றவற்றில் இதனை பயன்படுத்துவதும் சமைத்த உணவில் இதனை பயன்படுத்தவும் மிகவும் ஏற்றது.
நட்ஸ் :
இதய ஆரோக்கியத்திற்கு நட்ஸ் மிகவும் ஏற்றது. வயது முதிர்விலும் இவை ஆரோக்கியத்தை தருகின்றன. ஒரு அவுன்சில் 0-8 கிராம் அளவு கார்போ சத்து மட்டுமே உள்ளது.
பெர்ரி :
பெர்ரி ஊட்டச்சத்துகள் நிறைந்தது. மேலும் நோய்கள் வராமல் தடுக்க இவை பெரிதும் உதவுகின்றன. 3.5அவுன்ஸ் பெர்ரி உட்கொள்வதால் வெறும் 5-12 கிராம் அளவு கார்போ உடலுக்கு கிடைக்கிறது.
பட்டர் மற்றும் க்ரீம் :
பட்டர் மற்றும் க்ரீமில் கார்போ சத்து முழுவதுமாக இல்லை. மேலும் இவற்றை மிதமான அளவு உட்கொள்ளும்போது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனை தருபவை ஆகும்.
ஆலிவ் :
ஆலிவ் , இதயம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. 1 அவுன்ஸ் ஆலிவில் 1 கிராம் அளவ கார்போ சத்து மட்டுமே உள்ளது.
இனிப்பில்லாத டீ மற்றும் காபி :
இனிப்பில்லாத டீ மற்றும் காபியில் கார்போ சத்து முற்றிலும் இல்லை. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. இதனால் உடல் மற்றும் மனது புத்துணர்ச்சி அடைகிறது. இனிப்பு சேர்க்கப்படாததால் நீரிழிவிற்கான பயமும் இல்லை.
டார்க் சாக்லேட் :
ஒரு அவுன்ஸ் டார்க் சாக்லேட்டில் 3-10 கிராம் அளவு கார்போ சத்து உள்ளது. டார்க் சாக்லெட்டில் அன்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதால் இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது