மாலிக் அமிலத்தின் நன்மைகள்

மாலிக் அமிலம் என்பது வயது முதிர்ச்சியை தடுக்கும் கிரீம்களில், ஷாம்புவில், லோஷனில் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருளாகும். இது சருமத்திற்கு நீர்ச்சத்தை கொடுத்து பொலிவாக இருக்க வைக்கும்.

மாலிக் அமிலத்தின் நன்மைகள்

மாலிக் அமிலம், ஆல்பா ஹைடிராக்சி அமிலம் எனப்படும் AHA குழுவில் இருக்கும் ஒருவகை அமிலமாகும். மாலிக் அமிலம்  இருக்கு ஒரு சரும பாதுகாப்பு தயாரிப்பில் கீழ் வரும் நன்மைகள் சருமத்திற்கு கிடைக்கும்.
* சருமத்திற்கு நீர்சத்து அதிகரிக்கும்.
* இறந்த செல்கள் நீக்கப்படும்.
* சருமத்தின் மென்மை அதிகரிக்கும் 
* சுருக்கங்கள் குறையும்.
கார்போஹைடிரேட்டை ஆற்றலாக மாற்றும்போது நமது உடல் இயற்கையான முறையில் மாலிக் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. மாலிக் ஆசிட் இல்லாமல் உடல் இயக்கத்தில் சிரமம் ஏற்படும். மாலிக் அமிலத்தில்  உடல் நன்மைகள் பல உள்ளன.

சருமத்தை புதுப்பிக்கிறது:
சரும பாதுகாப்பு சாதனங்களில் மாலிக் அமிலத்தை சேர்ப்பதால் சருமம் பிரகாசிக்கிறது ; சரும  மேற்பரப்பை மென்மையாக்குகிறது. 
ஆகவே வயது முதிர்ச்சியை தடுக்கும் கிரீம்களில் இது ஒரு முக்கிய மூலப்பொருளாக  இருக்கிறது.

நீர்சத்து:
மாலிக் அமிலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இதன்மூலம் சருமம் நீர்ச்சத்தோடு  இருக்கிறது. சருமம் சிறிதளவு அமிலத்தன்மையோடு இருப்பது தான் ஆரோக்கியமான pH அளவாகும். சருமத்தின் pH அளவு 4.5 முதல் 5.5 வரை இருக்க வேண்டும். இந்த pH தன்மையை சமன் படுத்த ஒப்பனை பொருட்களில்  மாலிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. இந்த pH அளவின் சம நிலை குறையும் போது சருமம் வறண்டு . பருக்கள் அல்லது கட்டிகள் வர வாய்ப்பை ஏற்படுத்தும்.

தழும்புகளை குறைக்கிறது:
சருமத்தில் உள்ள அணுக்கள் விரைந்து புதுப்பிக்கப்படுகின்றன. இதனால் சுருக்கங்கள் , கோடுகள் போன்றவை குறைகின்றன. சரும மேல் பரப்பு சமமாக இருக்கிறது. மென்மையான சருமம் கிடைக்கிறது. கட்டிகள் மற்றும் கொப்பளங்கள் குறைகின்றன.

கொலாஜென் உற்பத்தி :
அடர்த்தியான மாலிக் அமிலம் சருமத்திற்குள் ஊடுருவி கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. கொலாஜென் சருமத்தில் அணுக்களை உற்பத்தியை செய்ய உதவும் புரதமாகும். இது சருமம் மற்றும் உடல் திசுக்களின் வலிமைக்கும், நெகிழ்வு தன்மைக்கும் உதவுகிறது. கொலாஜென், வயது முதிர்வை தாமதப்படுத்துகிறது. மாலிக் அமிலம் உள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் கொலாஜென் உற்பத்தி அதிகரித்து வயது முதிர்வு தடுக்கப்படுகிறது.

பருக்களை போக்குகிறது:
லோஷன், க்ளென்சர் அல்லது மற்ற பொருட்களில் சேர்க்கப்படும்  மாலிக் அமிலம் இறந்த அணுக்களை வெளியேற்றுகிறது. சருமத்தின் துளைகள் இறந்த அணுக்களால் அடைக்கப்படும்போது கரும்புள்ளிகள் தோன்றும். பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பருக்கள் தோன்றும். மாலிக் அமிலம், சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த அணுக்களில் உள்ள பசை போன்ற தன்மையை உடைக்கிறது. இறந்த செல்கள் உடைந்து வெளியேறும்போது சரும துளைகளின்  அடைப்பு நீக்கப்பட்டு பொலிவடைகிறது. மறுமுறை பருக்கள் ஏற்படுவது குறைகிறது.

பைப்ரோம்யால்கியா:
பைப்ரோம்யால்கியா என்ற வகை கோளாறு தசைகளில்  வலி மற்றும் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்த வகை கோளாறு உடையவர்கள் மாலிக் அமில உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்படும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாலிக் அமிலத்தை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ள கூடாது. நாம் உண்ணும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான மாலிக் அமிலம் கிடைக்கப்படுகிறது.

பயன்படுத்துவதில் கவனம் தேவை:
மற்ற AHA களை விட , மாலிக் அமிலம் சருமத்தில் குறைந்தளவு எரிச்சலை ஏற்படுத்தும். இருந்தாலும் இதனை கவனமாக பயன்படுத்துவது நல்லது. அதிகமான பயன்பாடு சருமத்தில், சிவப்புதன்மை, அரிப்பு , எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக கண்களை சுற்றியுள்ள இடங்கள் பாதிக்க படக்கூடும்.
மாலிக் அமிலத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கு முன், சிறிதளவு எடுத்து, மணிக்கட்டில்  தடவி சோதித்து பார்க்கவும். 1 நாள் முழுதும் எந்த ஒரு எரிச்சலும் இல்லாமல் இருந்தால் பயன்பாட்டை தொடரலாம். எரிச்சல் ஏற்பட்டால் பயன்பாட்டை தொடராமல் இருப்பது நல்லது. 

மாலிக் அமிலத்தை நுகர்வது  ஆபத்தை விளைவிக்கக்கூடியது.