நெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து 

வீட்டில் இருக்கும் பொருட்கள் கொன்டே நெருப்பு காயத்தை ஆற்றவும்,  விரைவான நிவாரணத்திற்கும்  இவைகள் பயன்படுகின்றன.

நெருப்பினால் உண்டான காயத்திற்கு மருந்து 

சூடாக எதாவது ஒரு பொருள் நம் உடலில் பட்டால் உடனடியாக அதனை குணப்படுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மேலும் காயம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இங்கே சில குறிப்புகள் கொடுக்க பட்டுள்ளன.  

பற்பசை :
சமைக்கும்போது சூடான பாத்திரத்தை தொட்டு விடுவதால் அல்லது, சமைக்கும் போது உணவு பொருள் நம் மீது கொட்டி விடுவதால் தீ காயங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும்போது உடனடியாக சேதப்பட்ட இடத்தை குழாய்  தண்ணீரில் நேரடியாக காண்பிக்க வேண்டும் . தொடர்ச்சியாக சில நிமிடங்கள் தண்ணீரில் காண்பித்து பின்பு துணியால் ஒத்தி எடுக்கவும். பின்பு காயத்தின் மேல் பல் தேய்க்க பயன்படுத்தும் பேஸ்டை தடவவும். 

வெனிலா சாறு :
சிறிய வகை தீக்காயங்களுக்கு வெனிலா சாறை  பஞ்சில் நனைத்து காயத்தின் மேல் தடவுவதால் எரிச்சல் தீரும். வெனிலா சாறில் உள்ள ஆல்கஹால் ஆவியாகும், காயம் குளிர்ச்சியடையும். வலியும் குறையும்.

டீ பை: 
ஈரமான டீ பையை காயத்தின் மீது வைத்து ஒரு துணியை கொண்டு கட்டி விடுவதனால் பைகள் கீழே விழாமல் இருக்கும். பிளாக்  டீயில் டானிக் அமிலம் உள்ளது. அது காயத்தில் உள்ள சூட்டை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் எரிச்சல் குறையும். (இந்த தன்மை இருப்பதால் தான் சில நேரங்களில் பல் வலி ஏற்படும்போது டீ  குடித்தால் வலிக்கு ஒரு நிவாரணம் கிடைப்பதை உணர்ந்திருப்பீர்கள்.) 

வினிகர்:
அசிட்டிக் அமிலம்  ஆஸ்பிரினில் இருக்கும் ஒரு கூறாகும் .இது வலி, அரிப்பு மற்றும் வீக்கத்தை குறைகின்றது. அது ஒரு ஆன்டிசெப்டிக்க்காக வேலை செய்கிறது. இதனால் நோய்  தோற்று ஏற்படாமல் காக்கப்படுகிறது. வினிகர்,  காயத்தில் இருக்கும் சூட்டை இழுத்து கொள்வதால், விரைவில் காயங்கள் குணமாகும். பஞ்சில் வினிகரை ஊற்றி காயத்தின் மேல் தடவலாம் 

தேன்:
தேன் எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த மருந்து. இது இயற்கையான பிஹெச்(pH) சமநிலையைக் கொண்டது, தேனை காயத்தின் மேல் தடவுவதால் தொ ற்று ஏற்படாமல் தடுக்க படுகிறது. காயத்தில் இருக்கும் நுண் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு சருமத்தை பழைய நிலைக்கு மாற்றுகிறது. காயத்தை குளிர்ச்சியடைய செய்து, விரைவில் ஆற்றுகிறது.

பால்:
பாலில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பு சத்து காயத்தை ஆற்றுவதில் வினை புரிகிறது . காயம் ஏற்பட்ட இடத்தை பாலின் ஒரு 10 நிமிடங்கள் வைப்பதால் விரைவான குணம் தெரியும். கொழுப்பு அதிகமுள்ள தயிர் கூட காயத்திற்கு மருந்தாகும்.

தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணி. சரும பிரச்சனைகளுக்கு தீர்வான வைட்டமின் ஈ, தேங்காய் எண்ணெய்யில் அதிகம் உள்ளது. கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டுள்ளதால், காயத்தில் இருக்கும் கிருமிகளை எதிர்த்து போராடி, காயத்தை ஆற்றும் தன்மை இந்த எண்ணெய்க்கு உண்டு. தீ  காயத்தினால் ஏற்பட்ட வடு மறைய, எலுமிச்சை சாறுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து அந்த வடுவில்  தினமும் மசாஜ் செய்ய வேண்டும். எலுமிச்சை சாறில் உள்ள அசிட்டிக் அமிலம்,வடுவை லேசாக்கி மறைய உதவும்.

செய்ய கூடாதது:
தீ காயங்கள் ஏற்படும்போது காயத்தின் மேல் ஐஸ் கட்டியை வைத்து  தடவ கூடாது. இது இரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது. இதனால் திசுக்கள் மேலும் சேதமடைகின்றன. இதற்கு பதிலாக, காயப்பட்ட இடத்தை ஓடும் தண்ணீரில் வைக்கலாம். குழாய் அடியில் காயப்பட்ட இடத்தை காண்பிப்பதால் மேலும் காயம் பரவாமல் தடுக்க படுகிறது. 

தீ காயங்களுக்கு மருந்தை தெரிந்து கொண்டோம். இதனை  பின்பற்றி காயங்களை உடனடியாக ஆற்றுங்கள். இதை விட சிறந்தது, கவனமாக சமயலறையில் வேலை செய்யும்போது இத்தகைய காயங்கள் ஏற்படாமல் இருப்பது தான்.