தியானம் பற்றியத் தொகுப்பு
கடைசியாக நீங்கள் எப்போது அமைதியாக உங்களைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி தனியாக ஒரு அமைதியான இடத்தில அமர்ந்தீர்கள் ? உங்களுக்கு நினைவில்லையா?
பலர் தங்கள் வாழ்வின் ஓட்டத்தில் தங்களை மறந்து ஓடி கொண்டு இருக்கிறார்கள். மல்டி டாஸ்கிங் என்ற பெயரில் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து கொண்டு எண்ணற்ற எண்ணங்களில் முழ்கி வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். அலுவலக வேலைகளை விடுமுறை நாட்களில் வீடுகளுக்கு எடுத்துச் சென்று செய்வதும், வேலை நேரத்தில் விடுப்பை பற்றி எண்ணுவதும் நமது வாழ்க்கையாய் மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கைக்கு காரணம் யார்? நம்மை தவிர வேறு யாரும் இல்லை.
இதற்கு என்ன தீர்வு இருக்கிறது ? நிச்சயமாக இதற்கு தீர்வு இருக்கிறது. அதுதான் தியானம். தியானம் என்பது எண்ணிலடங்கா நன்மைகள் கொண்ட ஒரு விலைமதிப்பில்லாத ஒரு கருவி. இந்த நன்மைகளை நாம் அடைவதற்கு நாம் செய்ய வேண்டியது அமைதியாகவும் நிதானமாகவும் இருத்தல். சில தடவை முயற்சித்து விட்டு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் மனதிற்கு ஓய்வு கிடைக்காமலே பொய் விடும். தொடர்ந்து முயற்சித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
தியானம் என்றால் என்ன?
மெடிடேஷன் என்ற வார்த்தை லத்தின் மொழியின் மெடிட்டெட்டும் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் சிந்திப்பது என்பதாகும் . தியானம் என்பது மனதை அமைதி படுத்துதல் என்றும் கூறலாம். "எண்ணங்களற்ற விழிப்புணர்வு" என்றும் சிலர் இதை கூறுகின்றனர். இந்த நிலையில் மனதில் எந்த ஒரு எண்ண ஓட்டமும் இல்லாமல் இருப்பதால் இப்படி கூறுகின்றனர்.
தியானத்தின் வரலாறு:
வேதங்களில் தியானத்தை பற்றிய குறிப்புகள் உள்ளன. பழம் பெரும் இந்தியாவில் தியான முறை பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 5வது மற்றும் 6வது நூற்றாண்டுகளில் தியானத்தின் வேறு வடிவங்கள் சீனாவிலும் பிறகு ஜப்பானிலும் உருவானது. சென்ற நூற்றாண்டில் தியானத்தில் பல்வேறு தனித்தன்மைகளும் யுத்திகளும் கையாளப்பட்டன.
தியானம் எப்படி வேலை செய்கிறது?
தன்னியக்க நரம்பு மண்டலம், மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இவை இதய துடிப்பு, செரிமானம் மற்றும் சுவாச செயல்பாடுகளை சீராக்குகிறது . தன்னியக்க நரம்பு மண்டலம் 2 பிரிவாக பிரிக்கப்படுகிறது.உணர்ச்சி செலுத்தும் நரம்பு மண்டலம்{Sympathetic Nervous System (SNS)} மற்றும் துணை பிரிவு நரம்பு மண்டலம்{Parasympathetic Nervous System}
என்பன இதன் பிரிவுகளாகும்.கோபம், சோர்வு, பயம், மனஅழுத்தம் போன்ற உயிர் வாழ்வதற்கான அச்சுறுத்தல் இருக்கும் தருணங்களில் இந்த SNS இல் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. இந்த நேரத்தில் தியானம் இந்த நரம்பு மண்டலத்தை அமைதி படுத்துகிறது. அதனுடன் Parasympathetic Nervous System அல்லது நல்ல நரம்பு மண்டலத்தை செயல்படுத்த வைக்கிறது.இதன் மூலம் சில காலங்களுக்கு பிறகு சீரான இதய துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற பலன்கள் கிடைக்கின்றன .
தியானத்தின் பலன்கள்:
ஆயிரக்கணக்கான ஆய்வுகள் தியானத்தின் நன்மைகளை பற்றி எடுத்துரைக்கின்றன. இவை எல்லாமே ஒன்றை உறுதிப்படுத்துகின்றன. அது என்னவென்றால் இந்தியர்கள் புனிதமான வழியில் மனதையும் உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரு அணுகுமுறை தான் தியானம் என்று குறிப்பிடுகின்றனர்.
1. ஆரோக்கியமான உடல்
2. சுவாசம் மேம்படுத்தப்பட்டது
3. ஆற்றல் மட்டங்களை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது
4. இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் உதவுகிறது.
5. கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியை குறைப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கிறது.
6. கவனத்தை அதிகரிக்கிறது.
7. கவலை மற்றும் பதற்றத்தை குறைக்கிறது
8. கடுமையான சூழ்நிலைகளை சந்திக்க அதிக திறன் உண்டாகிறது.
தியானம் செய்ய எளிய வழி:
தியானம் செய்வதற்குதேர்ந்தெடுத்தால் ஆரம்பித்தவுடன் உங்களுக்கு பிடித்த உணவுகளை விட்டுவிடவோ அல்லது உங்கள் அன்பானவர்களிடமிருந்து விலகி இருக்கவோ வேண்டாம். தியானம் செய்ய ஆரம்பித்த முதல்நாட்களில் பல மணி நேரம் உட்காருவது சிரமமாக இருக்கலாம். தியானம் என்பது ஆரம்ப கட்டத்தில் மூச்சைமட்டும் கவனிப்பது தான். சில நாட்களுக்கு பிறகு அதன் நேரத்தை அதிகப்படுத்தலாம்.
தியானம் எங்கு செய்ய வேண்டும்?
வீட்டின் எந்த பகுதியிலும் செய்யலாம். எந்த இடம் அமைதியாகவும் காற்றோட்டமாகவும் இருக்கிறதோ அந்த இடத்தை தேர்வு செய்து அங்கு தொடங்கலாம்.
தியானத்திற்கு எந்த நேரம் சிறந்தது?
காலை பொழுதே சிறந்தது. காலை பொழுது நண்டாக அமைய தியானம் ஒரு சிறந்தன செயல். ஒரு நாளின் எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம். ஆனால் அந்த நேரத்தில் தொடர்ந்து தினமும் செய்வது சிறந்த பலனை தரும். தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வதால் நீங்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவீர்கள்.
உணவிற்குப்பிறகு தியானம் வேண்டாம்:
உணவு வேலையின் முன்னும் பின்னும் தியானஹே தவிர்க்கவும். மற்றபடி எந்த நேரத்தில் நீங்கள் ரிலாக்ஸாக உணர்கிறீர்களா எந்த ஒரு சலனமும் இல்லாத எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம்.
கண்களை மூடுங்கள்:
உங்கள் சிந்தனைகளை ஒருங்கிணைத்து அவற்றை சிறிது நேரம் தள்ளி வையுங்கள். நீங்கள் இந்த சில நிமிடங்களுக்கு எதை பற்றியும் யோசிக்கப்போவது இல்லை என்று உங்களுக்குள்ளேயே கூறி கொள்ளுங்கள். சில நிமிடங்கள் நன்றாக மூச்சை இழுத்து வெளியில் விடுங்கள். பிறகு அமைதியாக இருங்கள்.
உங்கள் மூச்சை கவனியுங்கள்:
சில நிமிடங்கள் நன்றாக சுவாசியுங்கள். உங்கள் மூச்சை எண்ணத் தொடங்குங்கள். தியானம் என்பது நமது எண்ணங்களை அலை பாய விடாமல் கவனத்தை ஒன்று சேர்ப்பது தான். எண்ணங்களை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால்,சில நாட்களில் எண்ணங்கள் இல்லாத உலகில் நீண்ட நேரம் பயணிக்க அனுபவம்வந்து விடும். மீண்டும் உங்கள் எண்ணம் வேறு திசைக்கு போகும்போது அதை இழுத்து உங்கள் மூச்சை கவனிக்க பழக வேண்டும்.