தமிழ் சினிமா பற்றிய சில வாவ் தகவல்கள் இதோ!
தமிழ் சினிமா பற்றிய உங்களுக்கு தெரியாத சில ஆச்சர்ய தகவல்கள் இங்கே தந்துள்ளோம். படித்து என்ஜாய் பண்ணுங்க!
ரோஜா:
ரோஜாவின் கிளைமாக்ஸ் காட்சி காஷ்மீரில் எடுக்கப்படவில்லை. ஊட்டி பைகாராவில் தான் படமாக்கப்பட்டது.
ரஜினிகாந்த்:
ரஜினிகாந்துக்கு ஜோடியாக, அம்மாவாக, மாமியாராக, சகோதரியாக நடித்த ஒரே நடிகை ஸ்ரீவித்யா.
கமல்ஹாசன்:
இந்தியன் படத்திற்கு பிறகு, கமல்ஹாசன் ஃபிலிம்ஃபேர் கமிட்டியிடம் தனக்கு இனி எந்த விருதுகளையும் வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார், மேலும் இந்த விருதுகளை புதிய நடிகர்களுக்கு கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஜெயலலிதா:
வெண்ணிற ஆடை படத்தின் ஆடிஷனுக்கு இரண்டு அழகான பெண்கள் வந்தனர். ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றொரு பெண் நிராகரிக்கப்பட்டார். நிராகரிக்கப்பட்டவர் வேறு யாருமல்ல, ஹேமமாலினிதான், தேர்ந்தெடுக்கப்பட்டவர் நமது முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதா.
சுயம்வரம்:
சுயம்வரம் திரைப்படம் 23 மணி 58 நிமிடங்களில் படமாக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.