MIND டயட்
அறிவாற்றல் செயல்பாடுகளில் உண்டாகும் குறைகளைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், இன்னும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது MIND டயட். அவற்றுள் சில நன்மைகளை இப்போது காணலாம்.
மெடிடரேனியன்-டாஷ் இன்டர்வென்ஷன் ஃபார் ந்யுரோ டீஜெனரேடிவ் டிலே டயட் என்னும் டயட் பொதுவாக MIND(Mediterenean-Dash Intervention for Neurodegenerative Delay Diet) டயட் என்று அழைக்கப்படுகிறது. இந்த டயட் டாஷ் டயட் மற்றும் மெடிடரேனியன் டயட் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும். இந்த புத்தம் புதிய டயட் மூளை ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தும் உணவு வகைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கபட்டது என்பது வலியுறுத்தப்படுகிறது. மெடிட்டரேனியன் மற்றும் டாஷ் டயட்டில் உள்ள இலைகளையுடைய காய்கறிகள், மற்றும் இதர காய்கறிகள், பெர்ரி, கொட்டைகள் மற்றும் விதைகள், முழு தானியங்கள், மீன், கோழி இறைச்சி, ஆலிவ் எண்ணெய், ஒயின் போன்ற உணவுகள் இவற்றுள் அடங்குகிறது.
சிகாகோவில் உள்ள ரஷ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த மார்த்தா கிளாரா மோர்ரிஸ் மற்றும் அவரின் குழுவால் கண்டறியப்பட்ட இந்த MIND டயட். மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல் செயல்பாடுகள் மற்றும் குறைக்கபட்ட அல்சைமர் அபாயங்கள் போன்ற நேர்மறைத் தாக்கத்தின் காரணமாக மக்களிடையே நல்ல புகழைப் பெற்று வருகிறது.
மனிதர்களின் வயது அதிகரிக்கும்போது அவர்களை அதிகம் பாதிக்கும் டிமென்ஷியா மற்றும் மூளை ஆரோக்கியத்தில் குறைபாடு போன்றவற்றை குறைக்கும் நோக்கத்திலேயே இந்த டயட் உருவாக்கப்பட்டது. இரண்டு விதமான டயட்டின் ஒருங்கிணைப்பின் காரணமாக , MIND டயட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் பாதிப்பைக் தடுக்கவும் நல்ல முறையில் உதவுகின்றன. நீரிழிவு மற்றும் இதர பல்வேறு நோய்களுக்கான ஒரு தீர்வாகவும் MIND டயட் விளங்குகிறது. மெடிட்டரேனியன் மற்றும் டாஷ் ஆகிய இரண்டு டயட்டும் தனித்தனியாக மனித உடலுக்கு பல்வறு நன்மைகளைப் புரிந்தாலும், ஒரு நபரின் அறிவாற்றல் மற்றும் மூளை செயல்பாடுகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்படுவதில்லை. எனவே, மூளை செயல்பாடுகளை மேம்படுத்தவும், டிமேன்ஷயாவைத் தடுக்கவும் குறிப்பாக ஒரு டயட் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர். இந்த இரண்டு வகை டயட்களும் பொதுவாக முழு தானியங்கள், அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. ஆகவே MIND டயட் குறைந்த அளவு சோடியம், சர்க்கரை மற்றும் சுத்தீகரிக்கப்பட்ட தானியம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேலும் உயர் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், துரித உணவுகள் மற்றும் பொரித்த உணவுகளை மிகக் குறைந்த அளவில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
MIND டயட்டில் தினசரி கலோரி உட்கொள்ளல் அளவு அல்லது குறிக்கோள் என்று எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும், குறிப்பிட்ட நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும் என்ற விதி இல்லை. ஒரு தனி நபர் தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே நேரத்தில் அவர் தான் சாப்பிடும் உணவு குறித்த ஒரு சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த MIND டயட் உணர்த்துகிறது. மற்றுமொரு சந்தோஷமான செய்தி என்னவென்றால், இந்த டயட் பின்பற்றப்படும்போது, உங்களுக்கு மிகவும் விருப்பமான சிற்றுண்டிகளை உண்பது தவிர்க்கபடுவதில்லை. ஏனென்றால், இந்த டயட்டில் எல்லா வித உணவுகளும் பரிந்துரைக்கப்படுகிறது. மூளையின் செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகளை உட்கொள்ளும் அளவைக் குறைப்பது மற்றும் அறிவாற்றல் அளவை மேம்படுத்தும் உணவு வகைகளை அதிகரிப்பது போன்றவை இந்த டயட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது.
ஒரு நபர் அதிக அளவு இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளவும், ஆரோக்கியமற்ற கொழுப்பு உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும் இந்த ஆரோக்கியமான டயட்
ஊக்குவிக்கிறது. இந்த டயட்டை ஒரு பக்தி மார்க்கத்தைப் பின்பற்றும் அதே சிரத்தையோடு பின்பற்றுவதால் எளிமயான முறையில் உங்கள் மூளையை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும். இதனால் உங்கள் மூளை, வயது முதிர்வு மற்றும் இதர காரணிகளின் அறிகுறி மற்றும் அடையாளங்களால் பாதிக்கப்படுவதில்லை.
சாப்பிட வேண்டிய உணவுகள் :
MIND டயட் பரிந்துரைக்கும் உணவு பற்றிய தகவல்களை இப்போது பார்க்கலாம்
1. இலையுடைய பச்சைக் காய்கறிகள்:
பரட்டைக்கீரை, ப்ரோகோலி, பசலைக் கீரை, கொலார்ட் போன்றவற்றை ஒரு வாரத்தில் 6 அல்லது அதற்கு அதிகமான தடவை உட்கொள்ளலாம்.
2. மற்ற காய்கறிகள்:
அதிக ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் குறைந்த கலோரிகள் காரணமாக, மாவுச்சத்து அல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றை ஒரு நாளில் ஒரு முறை உட்கொள்ளலாம்.
3. பெர்ரி :
ஸ்ட்ரா பெர்ரி, ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளக் பெர்ரி (அன்டி ஆக்சிடென்ட்) போன்ற பழங்களை ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
4. நட்ஸ்:
குறிப்பிட்ட எந்த ஒரு வகை நட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த டயட் பரிந்துரைக்கவில்லை. எனவே, பல வகையான நட்ஸ் எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஒரு வாரத்தில் 5 அல்லது அதற்கு அதிகமான முறை இந்த நட்ஸை எடுத்துக் கொள்ளலாம்.
5. முழு தானியம்:
முழு தானியங்களான ஓட்ஸ், கம்பு, பழுப்பு அரிசி, முழு கோதுமை பாஸ்தா , 100% முழு கோதுமை பிரட் போன்றவற்றை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் மூன்று முறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.
6. பீன்ஸ்:
பயறு, சோயா பீன்ஸ், பச்சைப் பயறு போன்ற எல்லா வகையான பயறு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு முறை இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
7. கோழி இறைச்சி :
ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு முறை கோழி இறைச்சி எடுத்துக் கொள்ளலாம். வான்கோழியும் நீங்கள் விருப்பபட்டால் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பொரித்த கோழியை உட்கொள்வதை MIND டயட் பரிந்துரைக்கவில்லை.
8. மீன்:
சாலமன், சார்டின்,டூனா, திரௌட் , கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு மீன்களைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளலாம். இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மிக அதிக அளவு நிறைந்துள்ளது. ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு முறை மீன் சாப்பிடலாம்.
9. ஒயின்:
ரெட் ஒயின் பருகலாம். சிவப்பு ஒயினில் உள்ள ரிசர்வடால் என்னும் கூறு அல்சைமர் -பாதிப்பில் இருந்து மூளையைப் பாதுகாக்கிறது. ஆனால் ஒரு நாளில் ஒரு கிளாஸ் ரெட் ஒயின் மட்டுமே பருக வேண்டும்.
10. ஆலிவ் எண்ணெய் :
உங்கள் சமையலில் முக்கியமான எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்தவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் :
MIND டயட் பின்பற்றும்போது, சில குறிப்பிட்ட உணவு வகைகளைக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் விவரங்களை இப்போது காணலாம் ..
1. சீஸ்:
ஒரு மாதத்தில் மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே சீஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. வெண்ணெய் மற்றும் தாவர வெண்ணெய் :
சமையலில் வெண்ணெய்க்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்கு குறைவாக வெண்ணையை உட்கொள்ளலாம்.
3. பொரித்த உணவுகள் :
ஒரு மாதத்தில் மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. பாஸ்த்ரி மற்றும் இனிப்புகள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகள், மற்றும் இனிப்பு வகைகளான ஐஸ் க்ரீம், ப்ரௌனி , குக்கி, டோனட் , கேன்டி போன்றவற்றைத் தவிர்க்கவும். ஒரு வாரத்தில் நான்கு முறைகளுக்கு குறைவாக இவற்றை மிகக் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம்.
5. சிவப்பு இறைச்சி:
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, செம்மறி ஆட்டிறைச்சி ஆகியவை சிவப்பு இறைச்சி வகையைச் சேரும். ஒவ்வொரு வாரமும் மூன்று முறைக்கு மேல் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
MIND டயட்டின் நன்மைகள்:
2015ம் ஆண்டு இந்த டயட் கண்டறியப்பட்டது. அன்று முதல் இன்று வரை வயது முதிர்ந்தவர்களுக்கான அறிவாற்றல் செயலிழப்பில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் ஒரு வெற்றிகரமான டயட் திட்டமாக இந்த டயட் இருந்து வருகிறது. MIND டயட்டின் தாக்கம் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், இந்த டயட் பின்பற்றாதவர்களை ஒப்பிடும்போது, இந்த டயட்டை கடுமையாக பின்பற்றுகிறவர்கள் 7.5 வயது இளமையாக இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது.
1. அறிவாற்றல் குறைவதைத் தடுக்கிறது:
MIND டயட்டின் நன்மைகளைப் பற்றி பேசும்போது, அறிவாற்றல் செயலிழப்பைத் தடுப்பது , அல்சைமர் மற்றும் டிமென்ஷியா பாதிப்பைக் குறைப்பது போன்ற நன்மைகளைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஒரு நபரின் அறிவாற்றல் மேம்பாடு , மற்றும் மூளையின் செயல்பாடு மற்றும் செயலாற்றலில் முன்னேற்றம் போன்றவற்றைக் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2. அறிவாற்றல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது:
மேலே கூறியதுபோல், MIND டயட், அறிவாற்றல் குறைபாட்டை தடுப்பதோடு மட்டுமில்லாமல், ஒரு நபரின் அறிவாற்றல் செயல்பாடுகளை அதிகரிக்கவும் செய்கிறது. MIND டயட் பின்பற்றும் நபர்களை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நல்ல ஞாபக சக்தி இருப்பதாகவும், வேகமான புலனுணர்வு இருப்பதாகவும் பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. இந்த் டயட்டில் மிக அதிக அளவு இலையுடை பச்சைக் காய்கறிகள் இணைக்கப்ட்டுள்ளதால், அதிக அளவு வைட்டமின் ஈ, போலேட், கார்டினைடு, ப்லேவனைடு போன்றவை இவற்றுள் இருப்பதால் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றன. இதேபோல், இந்த டயட்டில் உள்ள பெர்ரி பழங்கள், ஞாபக சக்தியை அதிகரித்து, படிக்கும் திறனை மேம்படுத்துகிறது. இதற்குக் காரணம் இவற்றுள் உள்ள அன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஆகும்.
3. எடை இழப்பிற்கு உதவுகிறது:
MIND டயட்டின் பல்வேறு முக்கிய நன்மைகளுள் ஒன்று, ஆரோக்கியமான எடை இழப்பு மற்றும் எடை நிர்வாகம். இந்த டயட் முழுக்க முழுக்க, பதப்படுத்தப்படாத, புத்தம் புதிய , முழு உணவுகளாக முழு தானியம்,
பீன்ஸ், மீன், கீரை, காய்கறிகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உட்கொள்வதை ஊக்குவிப்பதால், தேவையற்ற கொழுப்பு உடலில் படிவத்தைப் போக்க உதவுகிறது. ஆரோக்கியமான டயட் முறையைப் பின்பற்றுவதால் கலோரி உட்கொள்ளல் கட்டுப்படுத்தப்படுவதால் , ஆரோக்கியமான எடை இழப்பை நோக்கி முன்னேற முடிகிறது. மேலும் MIND டயட் பின்பற்றுவதால், கொழுப்பு எரிவது அதிகரித்து, வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இது எடை இழைப்பிற்கு ஒரு முக்கிய காரணமாக அறியப்படுகிறது.
4. கொலஸ்ட்ராலை சமநிலை செய்கிறது:
ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உட்கொள்ளல் தடுக்கப்படுவதால் , குறைந்த அடர்த்தி லிப்போ ப்ரோட்டின் உடலில் படிகிறது. இந்த லிப்போ ப்ரோட்டின் உடலில் படிவதால், தமனிகளில் சேதம் ஏற்பட்டு, உடலின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு மாற்றாக அதாவது வெண்ணெய் போன்றவற்றிற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது.
5. புற்றுநோயுடன் போராடுகிறது:
மிக அதிக அளவு காய்கறிகள், பருப்பு, பெர்ரி, நிறைவுறாத கொழுப்புகளான ஆலிவ் எண்ணெய், கொழுப்பு மீன்கள், மிதமான அளவு இறைச்சி போன்றவற்றின் கலவையான MIND டயட் , குறிப்பிட்ட வகைப் புற்று நோயை எதிர்த்து போராட சிறந்த நன்மையைத் தருகிறது. புற்று நோய் தாக்கிய நபர்களுக்காக புற்றுநோய் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு அட்டவணை மற்றும் MIND டயட் அட்டவணை ஆகிய இரண்டிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
6. நீரிழிவைத் தடுக்கிறது:
மெடிடரேனியன் மற்றும் டாஷ் டயட் ஆகியவ இரண்டு டயட்டின் ஒருங்கிணைப்பான MIND டயட், நீரிழிவைத் தடுக்கும் ஒரு முக்கிய செயலாகப் பார்க்கப்படுகிறது. இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவி, நீரிழிவு வளர்ச்சி பெரும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
7. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
மனநிலையில் சமநிலை உண்டாக்கவும், ஆரோக்கியமாக இருக்கும் உணர்வை உறுதி படுத்தவும் உடலுக்கு போதிய ஊட்டச்சத்துகள் தேவை. ADHD, பதட்டம், மனச்சோர்வு, மனச்சிதைவு என்னும் ஷிசொபெர்னியா போன்ற பல்வேறு மனநிலைத் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கவும், நிர்வகிக்கவும் MIND டயட் உதவுகிறது.
8. இதயத்தைப் பாதுகாக்கிறது:
அதிக ஊட்டச்சத்து, குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு போன்றவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் MIND டயட், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி , இதய நோய்க்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இந்த டயட் பின்பற்றுவதால், தேவையற்ற கொழுப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் உடலில் படிவத்தை அனுமதிக்காமல் இருப்பதால், இதயம் சீராக செயல்பட்டு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் செயல்பட முடிகிறது.
9. அழற்சியைக் குறைக்கிறது:
MIND டயட்டில் பல்வேறு வகையான உணவுகள் இணைக்கப்பட்டிருப்பதால் , அழற்சியைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் அவை உதவுகின்றன. சுற்றுப்புறக் கழிவுகள், மனஅழுத்தம் , மோசமான குடல் இயக்கம் போன்றவற்றால் உண்டாகும் அழற்சியைப் போக்க அதிகரித்த கொழுப்பை எரித்தும், உடலுக்குத் தேவையற்ற கழிவுகளைப் போக்கியும், இந்த டயட் ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு உதவுகிறது.
10. வலி மேலாண்மையை ஊக்குவிக்கிறது:
MIND டயட் உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை புரிகிறது. அதில் முக்கியமான நன்மைகளில் ஒன்று ஆரோக்கியமான வலி மேலாண்மை. இந்த டயட்டின் செயல்பாடுகளில் ஒன்று, அழற்சியைக் குறைப்பது என்பதால், அழற்சியால் உண்டாகும் வலியும் நேரடியாகக் குறைகிறது. இதைத் தவிர்த்து, MIND டயட், செரோடொனினின் முக்கிய ஆதாரமாக விளங்குவதால் வலியைத் தாங்கும் சக்தியை கொடுக்கிறது.
வாரத்தின் ஏழு நாட்களுக்கான MIND டயட் உணவுத் திட்டம் - உதாரணம்
தற்போது வழக்கில் இருக்கும் பல்வேறு டயட் திட்டங்களை ஒப்பிடும்போது, ஒரு MIND டயட் திட்டத்தை உருவாக்குவது அவ்வளவு கடினமான காரியம் இல்லை. இனி, MIND டயட்டின் உதாரண உணவு திட்டத்தை பார்க்கலாம்.
முதல் நாள் - திங்கள்
காலை உணவு - நறுக்கிய பாதாம் துண்டுகள் அலங்கரிக்கபட்ட , ஸ்ட்ரா பெர்ரி சேர்க்கபட்ட கிரீக் யோகர்ட் .
மதிய உணவு - ஆலிவ் எண்ணெய் சேர்க்கப்பட்ட மெடிடரேனியன் சாலட் , கிரில் சிக்கன், முழு கோதுமை பிரட்
இரவு உணவு : காராமணி சேர்க்கபட்ட பழுப்பு அரிசி, வேகவைத்த காய்கறிகள் , க்ரில் சிக்கன்
இரண்டாம் நாள் - செவ்வாய்க்கிழமை
காலை உணவு - கோதுமை பிரட் டோஸ்ட் மற்றும் முட்டைப் பொரியல்
மதிய உணவு - க்ரில் சிக்கன் சான்ட்விச் மற்றும் வேகவைத்த கேரட்
இரவு உணவு - கிரில் சால்மன், ஆலிவ் எண்ணெய் சேர்க்கபட்ட சாலட், பழுப்பு அரிசி
மூன்றாம் நாள் - புதன் கிழமை
காலை உணவு - ஸ்ட்ராபெர்ரி சேர்க்கபட்ட ஓட்ஸ் மற்றும் வேக வைத்த முட்டை
மதிய உணவு - காராமணி சேர்க்கபட்ட காய்கறி சாலட் , சிவப்பு வெங்காயம், சோளம் மற்றும் க்ரில் சிக்கன்
இரவு உணவு - லேசாக வறுத்த சிக்கன் மற்றும் காய்கறி, மற்றும் பழுப்பு அரிசி
நான்காம் நாள் - வியாழக்கிழமை
காலை உணவு - வேர்க்கடலை வெண்ணெய், வாழைப்பழம் மற்றும் கோதுமை பிரட் டோஸ்ட்
மதிய உணவு - வேக வைத்த மீன் (உங்கள் விருப்பமான மீன்) மற்றும் வேக வைத்த காய்கறிகள்
இரவு உணவு - முழு கோதுமை பாஸ்தா , மீட் பால்ஸ் மற்றும் சாலட்
ஐந்தாம் நாள் - வெள்ளிக்கிழமை
காலை உணவு - கோதுமை டோஸ்ட் மற்றும் முட்டைப் பொரியல்
மதிய உணவு - வேக வைத்த சிக்கன் , காய்கறி சாலட் அல்லது மிதமாக பொரித்த காய்கறிகள்
இரவு உணவு - ஓவனின் பொரித்த அல்லது வேக வைத்த உருளைக் கிழங்கு மற்றும் மீன்
ஆறாம் நாள் - சனிக்கிழமை
காலை உணவு - பெர்ரி சேர்க்கபட்ட ஓட்ஸ்
மதிய உணவு - பழுப்பு அரிசியுடன் வேக வைத்த மீன் மற்றும் பீன்ஸ்
இரவு உணவு - சிக்கன் சேர்க்கபட்ட காய்கறி சாலட் மற்றும் முழு கோதுமை பாஸ்தா
ஏழாம் நாள் - ஞாயிற்றுக் கிழமை
காலை உணவு - வேர்க்கடலை வெண்ணெயுடன் நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மற்றும் முழு கோதுமை பிரட்
மதிய உணவு - டூனா மீன் சாலட் சான்ட்விச் மற்றும் கேரட்
இரவு உணவு - சிக்கன் கறி, பழுப்பு அரிசி மற்றும் பயறு
MIND டயட் ரெசிபி வகைகள்
1. சாக்லேட் ப்ளுபெர்ரி ஸ்மூதி :
தேவையான பொருட்கள் :
1 கப் ப்ளுபெர்ரி
2 ஸ்பூன் கொக்கோ பவுடர்
1 கப் பால்
1/4 ஸ்பூன் வெண்ணிலா சாறு
1 சிட்டிகை ஏலக்காய்
1 சிட்டிகை ஜாதிக்காய்
2 ஸ்பூன் மப்பில் சிரப்
செய்முறை:
. எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
. ஒரு வடிகட்டியில் வடிகட்டி ஒரு கிளாசில் ஊற்றிக் கொள்ளவும்.
. சில முழு ப்ளுபெர்ரியை மேலே அலங்கரித்து உடனே பரிமாறவும்.
2. சர்க்கரை இல்லாத எள்ளு குக்கி :
11/2 கப் முழு கோதுமை மாவு
1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
1/2 ஸ்பூன் உப்பு
1/2 கப் ஆலிவ் எண்ணெய்
1/2 கப் தாஹினி
2/3 கப் பேரிச்சை விழுது
1/3 கப் எள்ளு
செய்முறை:
. ஓவனை 350 டிகிரி வெப்பத்திற்கு சூடாக்கிக் கொள்ளவும்.
. கோதுமை மாவு, பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
. வேறு ஒரு கிண்ணத்தில் பேரிச்சை விழுது , தாஹினி மற்றும் ஆலிவ் எண்ணி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
. இரண்டு வெவ்வேறு கிண்ணத்தில் உள்ள காய்ந்த மற்றும் ஈரமான பொருட்களை ஒன்றாகச் சேர்க்கவும்.
. எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து பிரிட்ஜில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வைக்கவும்.
. பிறகு அந்த மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டவும்.
. இந்த உருண்டையை எள்ளில் உருட்டி எடுக்கவும்.
. இந்த உருண்டைகளை பேக்கிங் ஷீட்டில் வைக்கவும்.
. ஓவனின் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
MIND டயட் பின்பற்ற சில குறிப்புகள்:
இதுவரை நாம் MIND டயட்டுக்குரிய பல்வேறு விஷயங்களை அறிந்து கொண்டோம். எந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்வது, எந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது , MIND டயட்டின் நன்மைகள் என்ன என்பது பற்றி நாம் தெரிந்து கொண்ட அதே நேரத்தில், இந்த MIND டயட்டைப் பின்பற்ற சில குறிப்புகளை இப்போது தெரிந்துக் கொள்வோம்.
. முழு தானியத்தால் ஆன பிரட், சீரியல் மற்றும் பாஸ்தா போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.
. இறைச்சி அல்லாத பயறு சூப் போன்றவற்றை ஒரு வாரத்தில் ஒரு முறை எடுத்துக் கொள்ளவும்.
. மீன், தோல் இல்லாத கோழி இறைச்சி, அல்லது பீன்ஸ் போன்றவற்றை புரதத்தின் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளவும்.
. குளிர்ரூட்டபட்ட பெர்ரி பழங்களை எப்போதும் கையில் வைத்துக் கொள்ளவும்.
. உப்பு சேர்க்கப்படாத நட்ஸ் போன்றவற்றை கையில் வைத்துக் கொள்வதால், சிற்றுண்டியாக அவ்வப்போது எடுத்துக் கொள்ள முடியும்.
. காய்கறி சாலட் சாப்பிடுவதை தினமும் வழக்கமாக்கிக் கொள்ளவும்.
MIND டயட்டின் பக்க விளைவுகள்:
அதிகமான அளவு பழுப்பு அரிசி மற்றும் நட்ஸ் சாப்பிடுவதால் வெற்றிகரமான எடை இழப்பு தடுக்கப்படுகிறது. அதிக அளவு மீன் எடுதுக் கொள்வதால் மெர்குரி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுள்ள நச்சுகள் உடலில் படியும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
MIND டயட் மற்றும் இதர டயட்
1. MIND டயட் - மெடிடரேனியன் டயட் :
MIND டயட் என்பது மெடிடரேனியன் டயட்டில் இருந்து உருவாக்கப்பட்டது. MIND டயட்டில் உள்ள M என்ற எழுத்து மெடிடரேனியன் என்ற சொல்லைக் குறிக்கும். மெடிடரேனியன் டயட்டை விட அதிக விளக்கங்கள் நிறைந்த ஒரு டயட்டாக MIND டயட் உள்ளது. மற்றும் சில குறிப்பிட்ட வகை பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்ட ஒரு டயட்டாக விளங்குகிறது.
தூய்மையான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றிய போதிய கவனம் இல்லாத ஒரு டயட்டாக மெடிடரேனியன் டயட் உள்ளது. மெடிடரேனியன் டயட் ,உட்கொள்ளும் உணவு வகைகளில் மட்டுமல்ல, சாப்பிடும் வழி, உடல் செயல்பாடுகள், உணவுக்கான உடலின் வினை ஆகியவற்றில் கூட போதிய கவனம் செலுத்துவதில்லை.
2. MIND டயட் - டாஷ் டயட்:
மெடிடரேனியன் டயட் போலவே, டாஷ் டயட்டும், MIND டயட் உருவாகக் காரணமாக இருக்கிறது. டாஷ் டயட்டின் அதே கொள்கைகளுடன் சில கூடுதல் இணைப்புகளைக் கொண்டு கிட்டத்தட்ட அதே முறையை பின்பற்றுகிறது MIND டயட். டாஷ் டயட்டுடன் ஒப்பிடும்போது, MIND டயட் மிகவும் எளிமையாக, பல தரப்பட்ட தேர்வுகளை அடக்கிய ஒரு வடிவமாகப் பார்க்கப்படுகிறது.
டாஷ் டயட் உணவில் அளவுகளில் கவனமாக உள்ளது. பல வகையான உணவுகளை உண்பது,, சரியான அளவு ஊட்டச்சத்துகளை பெறுவதும் இதன் நோக்கமாகும். குறிப்பாக இரத்த அழுத்தத்தை குறைப்பதை மையப்படுத்தி செயல்புரிவதாக இந்த டயட் உள்ளது. ஆனால் MIND டயட், அறிவாற்றல் குறைப்பாடு மற்றும் அதனை சரி செய்வது போன்றவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது.
3. MIND டயட் - பேலியோ டயட் :
MIND டயட்டுடன் ஒப்பிடும்போது, பேலியோ டயட் சற்று குறைவான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. MIND டயட், தனது அதிகரித்த ஊட்டச்சத்து உள்ளிருப்பால் வாழ்நாள் முழுவதுக்குமான ஆரோக்கியத்தை கொடுக்கும் குறிக்கோளைக் கொண்டது. ஆனால் பேலியோ டயட் என்பது புரதம் தொடர்பான மாற்றங்களை மட்டும் தருவதால் சற்று பின்னடைவுடன் காணப்படுகிறது.
4. MIND டயட் - கேட்டோ டயட்:
கேட்டோஜனிக் டயட் என்பது மிகக் குறைவான கார்போ சத்து கொண்ட ஒரு டயட் என்பது இதன் முக்கிய பின்னடைவாகும். கேட்டோ டயட் ஒரு நாளில் 20% கார்போஹைட்ரெட் உட்கொள்ளல் அளவை மட்டுமே பரிந்துரைக்கிறது. இது ஒரு ஆப்பிளின் அளவை விடக் குறைவானதாகும். இருப்பினும் பல்வேறு நன்மைகளை கேட்டோ டயட் கொண்டிருந்தாலும், இதனுடன் ஒப்பிடும்போது MIND டயட் அதிக சிறப்பைப் பெறுகிறது.