தடுப்பூசிகள் குறித்த உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகள்
அவ்வப்போது பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலையில் நம்மையும் நம் வருங்கால சந்ததியினரையும் பாதுகாக்க தடுப்பூசிகள் பயன்படுகின்றன. இந்த தடுப்பூசிகள் நோய் பரவுவதை நிறுத்துகின்றன
தடுப்பூசிகள் பாதுகாப்பானது மற்றும் சிறப்பான செயல்திறன் கொண்டது என்று பல்வேறு சுகாதார நிறுவனங்கள் ஒப்புக் கொள்கின்றன . வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து உடல் போராடக் கூடிய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் உதவுகின்றன. உலகில் தடுப்பூசிகள் குறித்த பிரச்சாரங்கள் ஒட்டுமொத்த ஜனத்தொகையில் நோய்கள் பரவும் விகிதத்தை குறைத்து சுகாதார நிலையை மேம்படுத்தியுள்ளன . மனித நாகரீகம் தொற்று நோயை எதிர்த்து போராட உதவுகின்றன. போலியோ என்னும் ஒரு பலரை பாதித்த கொடிய நோய் சமீபத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது தடுப்பூசியினால் மட்டுமே என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பெரியம்மை என்னும் பாதிப்பு தடுப்பூசி வாயிலாக முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. சின்னம்மை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது . தடுப்பூசிக்கு முன்பு வரை இந்த இரண்டு நோய்களும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது என்று அஸ்டெர் CMI மருத்துவமனையின் மருத்துவர் பிருந்தா, எம் .எஸ் கூறுகிறார். தடுப்பூசிகள் குறித்த உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை பற்றி மேலும் கூறினார் .
கட்டுக்கதை 1 :
குழந்தைக்கு தடுப்பூசி போடுவதால் காய்ச்சல் உண்டாகும்.
உண்மை :
இது உண்மை இல்லை . குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசிகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். தொற்றை எதிர்த்து போராட உதவும். ஒரு தடுப்பூசி என்பது வைரஸ் உண்டாகக் காரணமான நோயின் நீர்த்த மற்றும் செயலாற்ற தன்மையைக் கொண்டிருக்கும். குழந்தைக்கு தடுப்பூசி போடும் நோக்கம் என்னவென்றால் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்து கிருமிகளை எதிர்த்து போராடுவது ஆகும் என்று மருத்துவர் பிருந்தா கூறுகிறார். இதற்கான எதிர்வினை மிகமிக குறைவான அளவில் இருக்கலாம், ஆனால் தீவிர நிலையை ஒரு போதும் அடைவதில்லை. மேலும் மருத்துவர் கூறுகையில், சில நேரம் குழந்தையின் உடல் சற்று எதிர்வினை புரியும் காரணத்தால் மிதமான காய்ச்சல் உண்டாகலாம். இது நிரந்தரமல்ல, மற்றும் இது ஒரு வழக்கமான எதிர்வினை. மனித உடலின் எந்த நோயையும் தடுக்கும் தன்மை கொண்டது இந்த மருந்து. உதாரணத்திற்கு பெரியம்மை தடுப்பூசி, சருமத்தில் சில திட்டுக்களை உண்டாக்கும். இது உடலுக்கு தீங்கு அல்ல மேலும் இந்த மருந்து வேலை செய்கிறது என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும் .
கட்டுக்கதை 2 :
குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வளர்ச்சி அடைய வைக்க இயற்கை வழிகள் மட்டுமே உகந்தது:
உண்மை:
எப்போதும் இயற்கை வழிமுறைகள் மீது சார்ந்திருக்கக் கூடாது. சிலவகை வைரஸ் மற்றும் பாக்டீரியா செடிகள் மற்றும் பழங்களில் இருந்து வருகின்றன . நீங்கள் உங்கள் உடலுக்கு தடுப்பூசிகள் கொடுக்கும் அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவு முறை , சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை நல்ல சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது உலகில் பரவி வரும் சில பொதுவான மற்றும் அபாயகரமான தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவும் ஒரு வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை உங்கள் குழந்தைக்கு வழங்குவதே தடுப்பூசிகள் நோக்கமாகும். ஆகவே இது ஒரு முக்கியமான விஷயம் என்று மருத்துவர் பிருந்தா கூறுகிறார் .
கட்டுக்கதை 3:
எந்த நோய் வந்தாலும் குழந்தை அதை எதிர்த்து போராடும்.
உண்மை:
தடுப்பூசிகள் என்பது கிருமிகள் தாக்கத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், கிருமிகளை எதிர்த்து போராடவும் உதவும் ஒரு கேடயம் மட்டுமே. சின்னம்மை தடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தைக்கு சின்னம்மை வருவதற்கான குறைவான அபாயம் உள்ளது. ஆனால் தடுப்பூசி போடாத குழந்தைக்கு அந்த பாதிப்பு ஏற்படுவதற்கான அதிகரித்த அபாயம் உள்ளது.
கட்டுக்கதை 4 :
வியாதி முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதால் தடுப்பூசி தேவை இல்லை
உண்மை:
இது ஒரு பொதுவான கருத்து. தொற்று நோய் திடீரென உதிப்பது ஆபத்தானது. தடுப்பூசிகள் நோய்களை முழுவதுமாக அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன, மேலும் அவை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, ”தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், இளைஞர்களுக்கு தடுப்பூசி போடவும் உதவுவது வரவிருக்கும் சமுதாயத்தின் பொறுப்பாகும், இதனால் அது அடுத்த தலைமுறைக்கு இது கொண்டு செல்லப்படாது. தடுப்பூசிகள் இந்த விஷயத்தில் நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும். ” என்று டாக்டர் பிருந்தா கூறுகிறார்.
கட்டுக்கதை 5 :
பெரியவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை.
உண்மை:
வளர்ந்து பெரியவர்களாக ஆனவுடன் தடுப்பூசி போட்டுக் கொள்வதை பலரும் தவிர்த்து விடுகிறோம். ஆனால் வழக்கமான பின் தொடர்தல் அடிப்படையில் டெட்டனஸ், ஹெபடிடிஸ் , டிப்தீரியா, மூளைக்காய்ச்சல் போன்றவற்றிற்கு பூஸ்டர் ஊசி போட்டுக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. "இந்த தடுப்பூசிகள் சூழ்நிலைகள், வயது, சுகாதார நிலை போன்றவற்றைப் பொறுத்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆப்பிரிக்கா போன்ற ஒரு இடத்திற்குச் செல்லும் ஒருவர் மஞ்சள் காய்ச்சலுக்கு ஒரு டோஸ் எடுக்க வேண்டும் அல்லது ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு முன் காசநோய், டைபாய்டு ஊசிகளை எடுக்க வேண்டும். இது நன்மை பயக்கும் ”என்று டாக்டர் பிருந்தா விளக்குகிறார்.
எல்லா காலகட்டத்திலும் தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வும் அவற்றால் ஏற்படும் நன்மைகளும் குறித்து மக்களுக்கு புரிவதில்லை . தடுப்பூசிகள் சிறந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு, மருத்துவ துறையினர் பலமுறை அவற்றின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை பரிசோதித்து சந்தைக்கு அறிமுகப்படுத்துகின்றனர் என்பதால் தடுப்பூசி குறித்து எந்த ஒரு பயமும் தேவையில்லை என்று பிருந்தா கூறினார்.