நடிகவேல் எம். ஆர். ராதா

பட்டுகோட்டை அழகிாிசாமி அவா்கள் எம். ஆர். இராதா அவா்கள் தனது நடிப்பால் (நடிப்பு) கூா்மையான (வேல்) கருத்துகளை கூறுவதால் நடிகவேல் என்ற பட்டத்தை கொடுத்தாா்.

நடிகவேல் எம். ஆர். ராதா
M. R. Rasha

திரு. எம்.ஆர்.ராதா ஏப்ரல் 14, 1907 ஆம் ஆண்டு திரு. ராஜகோபாலன் நாயுடு - திருமதி. ராஜம்மாள் தம்பதியருக்கு 2வது மகனாக பிறந்தார். மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா எனும் பெயர் பெற காரணம் ஆகும். இவரது தந்தை ரஷ்யா நாட்டில் ராணுவவீரராகப் பணிபுரிந்து வந்தபோது உருசிய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் வீர மரணமடைந்தார். ராதாவிற்கு ஜே.ஆர்.நாயுடு என்னும் ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா என்னும் தம்பியும் இருந்தனர்.

சிறுவயதில் தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பாரம் சுமக்கும் பணியாளர் ஆக வேலை செய்து வந்தார். அப்போது ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன் அவர்கள் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ராதா மூன்று கனமான சூட்கேஸை ஒரே நேரத்தில் தூக்கி கொண்டு செல்லும் அழகை கண்டு தனது நாடக கம்பெனியில் இணையும்படி ராதாவிடம் கூறினார் அதன்படி பின்பு அந்த நாடக கம்பெனியில் இணைந்தார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார். பின் திரைப்படங்களில் நடித்து "நடிகவேல்" என பெயர் பெற்று வான் புகழ்  கண்டார். 

மனைவிகள்:

  • சரஸ்வதி ராதா
  • தனலெட்சுமி ராதா
  • பிரேமாவதி ராதா
  • ஜெயமால் ராதா
  • கீதா ராதா

மக்கள்:

  • தமிழரசன்
  • எம். ஆர். ஆர். வாசு
  • ராணி
  • ராதாரவி
  • ரதி கலா
  • ராதிகா சரத்குமார்
  • மோகன்
  • நிரோஷா

நடித்த சில திரைப்படங்கள்:

  • ராசசேகரன்
  • சந்தனத்தேவன்
  • பம்பாய் மெயில்
  • சத்தியவாணி
  • சோகாமேளர்
  • ரத்தக்கண்ணீர்
  • ஆயிரம் ரூபாய்
  • கை கொடுத்த தெய்வம்
  • பாவ மன்னிப்பு
  • சித்தி
  • புதிய பறவை
  • பலே பாண்டியா
  • பெற்றால்தான் பிள்ளையா
  • தாய்க்குப்பின் தாரம்
  • குமுதம்
  • கற்பகம்
  • தாயை காத்த தனயன்
  • பாகப்பிரிவினை
  • பணம் பந்தியிலே
  • நல்லவன் வாழ்வான்

நாடகங்கள்:

  • ரத்தக்கண்ணீர்
  • கீமாயணம்
  • லட்சுமிகாந்தன்
  • தூக்குமேடை
  • பேப்பர் நியூஸ்