நம் உடலில் உள்ள நயனத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் பல சத்துக்கள் உள்ளன.அதனால் நாம் கண்ணை காக்க உணவையே மருந்தாக உட்கொண்டால் அது(கண்)நம்மை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும்.
நயனம் என்றால் கண் என்று பொருள்படும். நாம் கண்களால் தான் உலகில் உள்ள அனைத்தையும் காண்கிறோம். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் பல சத்துக்கள் உள்ளன. அதில் கண்ணுக்கு ஏற்ற சத்துக்களை கொண்ட உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால். நமக்கு ஏற்பட்டு இருக்கும் கண் பிரச்சினைகளை குணப்படுத்தி, கண்களின் பார்வை திறனை அதிகரிக்கும்.
கண் பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுக்கும் உணவுகள்:
- வைட்டமின் ஏ : இது விழி படலத்தை தெளிவாக வைக்கிறது. அதனால் பார்வை நன்றாக தெரியும். வைட்டமின் உள்ள உணவுப் பொருட்கள்- சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பச்சைக் கீரை வகைகள் மற்றும் மஞ்சள் நிற காய்கறிகளும் பழங்களும் பூசணிக்காய் மீன் முட்டை கேரட்
- வைட்டமின் இ: இதில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது கண்ணில் உள்ள செல்களை பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ உள்ள உணவு வகைகள்- உலர் பருப்புகள், சமையல் எண்ணெய், கொட்டை, அவக்கோடா, சால்மன் மீன், பச்சை கீரை மற்றும் காய்கறிகள்
- விட்டமின் சி: இதில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. கண்ணில் ஏற்படக்கூடிய வறட்சியை போக்குகிறது. பார்வைத் திறனை அதிகரிக்கிறது புரை வளர்தலை தடுக்கிறது. வைட்டமின் சி உள்ள உணவு வகைகள்- நெல்லிக்காய் கொய்யாப்பழம் ஆரஞ்ச் எலுமிச்சம்பழம் அன்னாசி பழம் முட்டைக்கோஸ் குடமிளகாய் மற்றும் தக்காளி புரோகோலி.
- வைட்டமின் பி6, பி9, பி12: இதில் புரதம், நியாசின், ஒமேகா, ரிபோஃப்ளேவின், தயாமின், போன்ற சத்துக்கள் உள்ளது. இது கண்களில் உள்ள நரம்புகளை பலப்படுத்தி பார்வைக் குறைபாடுகளை போக்கும். வைட்டமின் பி உள்ள உணவுகள்- தானியங்கள் உருளைக் கிழங்கு பருப்பு அவரை வாழை கருந்திராட்சை சர்க்கரைவள்ளிக்கிழங்கு பால், முட்டை, மீன், நண்டு
- ரிபோபிளேவின்: இதில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. மன அழுத்தத்தை குறைத்து கண்களைப் பாதுகாக்கிறது. ரிபோபிளேவின் உள்ள உணவு பொருட்கள் ஓட்ஸ் பால் தயிர் தானியங்கள்.
- நியாசின்: இதில் உடலுக்கு சக்தியைக் கொடுக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. கண் குளுக்கோமா வராமல் தடுக்கிறது. கண் நரம்புகளைப் பாதுகாக்கிறது, கண் மங்கலாக தெரிவதை குணப்படுத்துகிறது மற்றும் கண்ணில் பழுதாகியிருக்கும் தசைகளை சரி செய்கிறது. நியாசின் உள்ள உணவு பொருட்கள்- இறைச்சி, காளான், மீன், வேர்க்கடலை.
- ஒமேகா-3 ஃபோலிக் அமிலம் : இது கண்ணில் உள்ள செல்களை உருவாக்க உதவுகிறது, அலர்ஜியை போக்குகிறது. கண் செயல்பாடுகளில் அதிகரிக்க கண்ணின் வறண்ட தன்மையை போக்குகிறது.ஒமகா-3 ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகள்- மீன், பிளாக் சீட், சோயா, உலர் பருப்பு, ஆலிவ் ஆயில்.
- தயாமின்: இது கண்களில் உள்ள செல்களுக சக்தியை கொடுக்கிறது மற்றும் கண்ணில் புரை வளர்தலை தடுக்கிறது. தயாமின் உள்ள உணவுப் பொருட்கள்- தானியங்கள், மீன் மற்றும் மாமிசம்.
நாம் உணவில் மேல் குறிப்பிட்டுள்ள சத்துகளை கொண்ட உணவுகளோடு, அதிக அளவு தண்ணீரையும் அடிக்கடி சேர்த்து கொண்டால் கண் பிரச்சினைகளை சரிசெய்வதோடு அதை வரவிடாமலும் தடுக்கும்.நம் உணவிலேயே கண் பிரச்சினைகளை குணமாக்கும் மருந்து இருக்கிறது. அதனால் நாம் கண்ணை காக்க உணவையே மருந்தாக உட்கொண்டால் அது(கண்)நம்மை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கும்.