சரும ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து உணவுகள் !

என்னதான் க்ளென்சர் , மாய்சசரைசேர் , டோனர் என்று மாற்றி மாற்றி போட்டாலும், சரும ஆரோக்கியத்திற்கு உணவுகள் முக்கிய காரணம்.

சரும ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து உணவுகள் !

நமது தினசரி உணவில், சருமத்தை  சுத்தப்படுத்தி, சரும பிரச்சனைகள் பலவற்றை போக்க ஊட்டச்சத்துகள் அவசியம் தேவைப்படுகிறது. சருமம் புத்துணர்ச்சி அடைகிறது. சருமத்தை சரியான படி புத்துணர்ச்சி அடைய செய்வதால் , வெளிப்புற காரணிகளால் ஏற்படும் சரும சேதம் தவிர்க்க படுகிறது. சரியான pH அளவு பராமரிக்கப்படுகிறது. சரும நிறமாற்றம் தவிர்க்கப்படுகிறது.

புத்துணர்ச்சி:
புத்துணர்ச்சி அல்லது ஊட்டச்சத்து  என்பது சருமத்திற்கு க்ரீம்களை போடுவதால் ஏற்படுவது அல்ல. இளமையான , பொலிவான, பிரகாசமான சருமம் பெற , சரியான அளவு ஊட்டச்சத்து தேவை . இதனால் சருமம், ஆரோக்கியம் மற்றும் நீர்ச்சத்தோடு இருக்க முடியும். இது நம்முடைய உணவில் இருந்து தொடங்கப்பட வேண்டும். ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதால் நமது மூளை, உள்ளுறுப்பு , சருமம் எல்லாமே நல்ல விளைவுகளை கொண்டிருக்கும். வெளிப்புற அச்சமூட்டும் காரணிகளை எதிர்த்து போராடும் வலிமை கிடைக்கும்.

தண்ணீர்:
ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் அதிகம் பருகுவதால் சருமம் நீர்ச்சத்தோடு இருந்து கழிவுகளை வெளியேற்றி சுத்தமாக இருக்கும்.

ஆரோக்கிய உணவுகள்:
ஆரோக்கிய கொழுப்புகள் கொண்ட தேங்காய் எண்ணெய், அவகேடோ, நட்ஸ் போன்றவை உடலுக்கு புத்துணர்ச்சி கொடுத்து இழந்த பொலிவை மீட்டு தரும். ப்ரோக்கோலி , முட்டைகோஸ் போன்றவை கல்லீரலை சுத்தப்படுத்தும். வெங்காயம் , பூண்டு போன்றவை உடலை சுத்தப்படுத்தும். 

ஒமேகா கொழுப்பு:
சரும பொலிவு மற்றும் ஆற்றலை மேம்படுத்திட ஒமேகா கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. சால்மன் மீன், ஆளி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அதிகமாக உள்ளது. ஒமேகா 6 கொழுப்புகள், தானியங்கள் மற்றும் தவற எண்ணெய்யில் அதிகம் உள்ளது. இவற்றை எடுத்துக் கொள்வதால் தோற்ற பொலிவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

எண்ணெய்:
குருதிநெல்லி, மாதுளை , ராசபெர்ரி விதை எண்ணெய்கள் எளிதில் சருமத்தால் உறிஞ்சப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதால் சரும துளைகள் அடைக்க படாது. ஒமேகா, வைட்டமின் ஏ , ஈ போன்ற சத்துகள் இவற்றில் இருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது.

சூரிய ஒளி:
சூரிய ஒளி சருமத்திற்கு பொலிவை கூட்டும். ஒரு நாளில் காலை மற்றும் மாலை 15 நிமிடங்கள் சூரிய ஒளி நம் மீது படும்படி பார்த்துகொல்வதால் சருமம் நல்ல ஆரோக்கியத்தை அடைகிறது.ஆழ்ந்த இரவு உறக்கம் இதனால் வாசிக்கப்படுகிறது.

உடலுக்கு உள்ளே செல்லும் உணவுகளால் உடலுக்கு வெளியே ஏற்படக்கூடிய மாற்றங்கள் அதிக அளவில் இருக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டிருப்போம். ஆகவே ஆரோக்கிய உணவை எடுத்துக் கொண்டு சரும அழகை அதிகரிக்கலாம்.