முடி வளர்ச்சிக்கு வெங்காயம் 

முடி உதிர்தல் என்பது உலகளாவிய ஒரு பிரச்சனை. பல வித ஷாம்புகள் , தலை முடி பராமரிப்பு பொருட்களை  மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுவது மிகவும் குறைவு தான். ஆண் மற்றும் பெண் , இருவருக்கும் இந்த பிரச்சனை  உண்டு.

முடி வளர்ச்சிக்கு வெங்காயம் 

பெண்களுக்கு முடி உதிர்ந்தால் வழுக்கை விழும் அளவிற்கு போகாது. ஆண்களுக்கு முடி உதிர்தல் வழுக்கைக்கு வழி வகுக்கும். 

முடி உதிர்தலை குறைக்க பல்வேறு பொருட்கள் இன்று கடைகளில் விற்கப்படுகின்றது. ஆனால் அவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனக் கலவையால் முடியின் வேர்கால்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதனால் நிரந்தரமாக முடி வளர்ச்சி கூட நின்று விடலாம். ஆகவே இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்தும்போது நல்ல பலன் பெறலாம். அதையும் வீட்டிலேயே தயாரிக்க முடிந்தால் இன்னும் நலம்.

வீட்டிலேயே தலை முடி வளர்ச்சிக்கான சிகிச்சை செய்வதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். எல்லோர் வீட்டிலும் சமயலறையில் இருக்கும் ஒரு பொருள் வெங்காயம் .  வெங்காயம் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. வெங்காயத்தை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் மற்றும் தேன்:

வெங்காயம்:
வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளது. இதனால் முடி மெலிதல் மற்றும் உடைதல் கட்டுப்படுகிறது.
வெங்காய விழுதை தலையில் தடவுவதால் தலை முடியின் வேர்கால்கள் போஷாக்கு பெற்று வளர்ச்சி அடைகிறது.
வறண்ட தலை முடிக்கு ஏற்ற ஒரு தீர்வு.
தலையில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை தடுக்கப்படுகின்றது.
இள நரைக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கிறது.

தேன்:
தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்ச்சரைசேர் . இது சருமத்திற்கு நீர்ச்சத்தை கொடுக்கின்றது. 
தேனில் இருக்கும் ஆன்டிபாக்டீரியால் தன்மையால், சரும துளைகள் தூய்மை படுத்தப்படுகின்றது.
உச்சந்தலையில் இருக்கும் துளைகளில் உள்ள அடைப்பை நீக்கி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

தாவர எண்ணெய்:
இவற்றில் இருக்கும் மருத்துவ தன்மை முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
தலை முடிக்கு பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது.
பொடுகு, பேன்  போன்றவற்றில் இருந்து தலை முடியை பாதுகாக்கிறது. 

தேவையான பொருட்கள் :
 . 5 வெங்காயம் (மிதமான அளவு)
 . ½ கப் தேன்(சிறிய கப்)
 . 10 துளி தாவர எண்ணெய் 

செய்முறை:
 . வெங்காயத்தை தோல் உரித்து, அறிந்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். 
 . பின்பு வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
 . வெங்காய சாறுடன் தேன் சேர்த்து கலக்கவும். இவை இரண்டும் வெவ்வேறு தன்மைகள் கொடுள்ளதால் சேர நேரம் எடுக்கும். ஆகவே நன்றாக கலக்கவும். 
 . இறுதியில் எண்ணெய்யை சேர்க்கவும். 
 . எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
 . இப்போது இந்த கலவை தயார்.

பயன்படுத்தும் முறை:
 . தலை முடியை சிறு சிறு பகுதியாக பிரித்து கொள்ளவும்.
 . இந்த சாறை எடுத்து தலையின் உச்சி முதல் நுனி வரை மென்மையாக தடவவும்.
 . தலையின் எல்லா இடங்களிலும் படும்படி தடவவும்.
 . தடவிய பின்பு மென்மையாக மசாஜ் செய்யவும்.
 . எண்ணெய் தலைக்குள் நன்றாக ஊடுருவும்.
 . 45 நிமிடங்கள் நன்றாக ஊறட்டும்.
 . மென்மையான ஷாம்பு  கொண்டு தலையை அலசவும்.
 . வாரத்திற்கு 2 முறை இதனை செய்து வரவும்,
 . விரைவில் நல்ல மாற்றத்தை உணரலாம்.
 . இரவு நேரத்தில் பயன்படுத்தும்போது, மசாஜ் செய்து விட்டு உறங்குங்கள். மறுநாள் காலையில் தலைக்கு குளியுங்கள்.

வெங்காயம் மற்றும் முட்டை:
முட்டையில் உள்ள அதிக புரத சத்து முடிக்கு போஷாக்கை கொடுத்து வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
 
தேவையான பொருட்கள்:
 . 2 வெங்காயம் 
 . 1 முட்டை 
 . 2-3 துளி ரோஸ்மேரி எண்ணெய் 

செய்முறை:
 . வெங்காயத்தை அறிந்து அரைத்து சாறை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 
 . வெங்காய சாறுடன் முட்டையை  சேர்த்து நன்றாக கலக்கவும் .
 . இந்த கலவையுடன் ரோஸ்மேரி எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். 
 . இந்த கலவை இப்போது பயன்படுத்த தயார்.

பயன்படுத்தும் முறை:
 . முடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.
 . உச்சி முதல் நுனி வரை இந்த சாறை தடவவும்.
 . நன்றாக மசாஜ் செய்யவும்.
 . 30 நிமிடம் கழித்து மிதமான ஷாம்பூவால் தலையை அலசவும்.
 . குளிர்ந்த நீரை பயன்படுத்தும்போது முட்டையின் வாசனை மறையும்.
 . வாரத்திற்கு 2 முறை இதனை பயன்படுத்தலாம்.

வெங்காயம் மற்றும் பூண்டு:
பூண்டில் கால்சியம், சல்பர், ஜின்க் போன்றவை அதிகமாகவுள்ளது. 
இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 
வெங்காய சாறுடன் இதனை சேர்க்கும்போது முடியின் அடர்த்தி அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்:
 . 8-10 பூண்டு பற்கள் 
 . 1 வெங்காயம் 
 . 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 

 செய்முறை:
 . பூண்டை மசித்து 1 ஸ்பூன் அளவு சாறு எடுத்துக் கொள்ளவும். 
 . வெங்காயத்தை அறிந்து அரைத்து 1 ஸ்பூன் அளவு சாறு எடுத்துக் கொள்ளவும்.
 . வெங்காய சாறுடன் , பூண்டு சாறு , மற்றும் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும்.
 . இப்போது இந்த கலவை தயார்.

பயன்படுத்தும் முறை:
 . தலை முடியை நன்றாக விரித்துக் கொள்ளவும்.
 . தலையில் எல்லா பகுதியிலும் இந்த கலவையை நன்றாக தடவவும்.
 . தடவிய பின் நன்றாக மசாஜ் செய்யவும்.
 . 1 மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பூவால் தலையை அலசவும்.
 . வாரத்தில் 3 நாட்கள் இதனை பயன்படுத்தலாம்.

 மேலே கூறிய முறைகளில் வெங்காயத்தை பயன்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.