கர்ப்பகாலத்தில் அந்தரங்க முடிகளை ஷேவ் செய்வது சரியா?
பிரசவ காலத்திற்கு முன் ஏன் அந்தரங்க முடிகள் நீக்கப்படுகிறது , எப்படி அதனை செய்ய வேண்டும் மற்றும் இதற்கான முறைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கர்ப்பகாலத்தில் அந்தரங்க முடிகளை ஷேவ் செய்வது சரியா?
இந்த கேள்விக்கு இதுவரை சரியான பதில் தெரியாது. சிலர் ஷேவ் செய்யலாம் என்று கூறுவர். சிலர் ஷேவ் செய்ய வேண்டாம் என்று கூறுவார். இதனால் ஒரு குழப்பமான மனநிலை உண்டாகும். பிரசவ காலத்திற்கு முன் அந்தரங்க முடிகளை ஷேவ் செய்ய வேண்டுமா? மருத்துவமனையில் பிரசவ அறைக்கு செல்வதற்கு முன் பொதுவாக அந்தரங்க முடிகளை அகற்றுவார்கள். இந்த சூழ்நிலை ஒரு எரிச்சலூட்டும் தர்ம சங்கடத்தை உருவாக்கும்.
பிரசவத்திற்கு முன் எதற்காக அந்தரங்க முடிகள் ஷேவ் செய்யப்படுகிறது
பல மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு முன், அந்தரங்க முடிகள் ஷேவ் செய்யப்பட்டு நீக்கப்படுகின்றன. இதற்கான காரணங்கள் இதோ,
சுகாதாரமான குழந்தை பிறப்பிற்கு
எபிசியோடோமி அல்லது அல்குல் அறுவை சிகிச்சையின்போது தொற்றுகள் ஏற்படாமல் இருக்க.(கடினமான பிரசவத்தின்போது, பெண்ணுறுப்பை சிறிய அளவில் திறக்க நேரும்போது தொற்றுகள் ஏற்படாமல் இருக்க மற்றும் திசுக்கள் உராய்வதைத் தடுக்க )
எளிதாக இணைப்புத் தையல் போடுவதற்கு
அறுவை சிகிச்சை வழி பிரசவத்திற்கு உதவுவதற்கு
அந்தரங்க முடிகளை ஷேவ் செய்யலாமா வேண்டாமா என்பது எப்போதுமே விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாக உள்ளது. மருத்துவர்கள் இதில் எந்த தவறும் இல்லை என்று வாதிடுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் இதற்கு எதிராக உள்ளனர். அந்தரங்க முடிகளை அகற்றுவதால் ஏற்படும் நன்மை தீமைகளை கணக்கில் கொண்டு நீங்களே எந்த முடிவையும் எடுத்திடுங்கள்.
சில நேரங்களில், மருத்துவமனையின் நர்ஸ் அல்லது உதவியாளர்கள் இந்த ஷேவ் செய்யும் வேலையை செய்யலாம். இப்படி முன் பின் தெரியாத ஒருவர் நமக்காக இந்த வேலையை செய்வதால் நமக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். நீங்க விரும்பினால், பிரசவத்திற்கு முன்பு, நீங்களே இதனை முன்கூட்டியே செய்து கொள்ளலாம்.
எப்போது நீங்கள் ஷேவ் செய்யலாம்?
நார்மல் டெலிவரியாக இருந்தாலும் அறுவை சிகிச்சையாக இருந்தாலும், பிரசவ தேதிக்கு 7 நாட்கள் முன்பாக ஷேவ் செய்யக் கூடாது. சருமத்தில் ஏற்படும் சின்னச் சின்ன வெட்டுகளால் கிருமி தொற்றுகள் ஏற்படுவதே இதற்கு காரணம்.
கர்ப்ப காலத்தில் அந்தரங்க முடிகளை ஷேவ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் இதோ,
நன்மைகள் :
நுண்கிருமிகள் பெருக்கத்திற்கு ஒரு சிறந்த இடமாக அந்தரங்க முடிகள் உள்ளன. ஆகவே இந்த இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதால் தொற்று பாதிப்பிலிருந்து பாதுக்காத்துக் கொள்ளலாம்.
கிருமிகள் முடிகள் வாயிலாக வயிற்றில் உள்ள குழந்தைக்கு தொற்றை உண்டாக்கலாம். அந்தரங்க முடிகளை ஷேவ் செய்வதால், இந்த பாதிப்புகள் தவிர்க்கப்படலாம்.
சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட அந்தரங்க பகுதி, மகப்பேறு மருத்துவருக்கு பிரசவத்தின் போது போர்செப்ஸ் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தும்போது தேவையற்ற இடையீடு செய்யாத ஒரு தெளிவான பார்வையைக் கொடுக்கின்றன.
ட்ரிம் அல்லது ஷேவ் செய்யப்பட்ட அந்தரங்க பகுதி சுத்தமாக இருப்பதால் வியர்வை போன்ற பாதிப்புகள் அங்கு குறைக்கப்படுகிறது.
அந்தரங்க முடிகளை நீக்குவதால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அதிக அளவு இரத்தப் போக்கை கழுவவதற்கு எந்த ஒரு சிரமும் இருப்பதில்லை.
தீமைகள் :
ஷேவ் செய்யும்போது சுகாதாரமான முறையை கடைபிடிக்காதபோது, இவை தொற்றுக்கு வழி வகுக்கின்றன. இதற்கு ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட அதாவது நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட அல்லது டிஸ்போசபில் கருவிகளை அதாவது எளிதில் களையக்கூடிய கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.
முடி மறுபடி வளரும் தருவாயில் அரிப்பு உணர்வு காரணமாக அசௌகரியம் ஏற்படும்.
சரியான முறையில் ஷேவ் செய்யாவிடில், முடிகள் உட்புறமாக வளர்ந்து, சருமத்தில் கட்டிகள் தோன்றலாம்.
மிக முக்கியமான பிரச்சனை என்னவென்றால், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, உங்களால் உங்கள் அந்தரங்க உறுப்பை சரியாக பார்க்க முடியாமல் உங்கள் வயிறு மேலே எழும்பி நிற்பதால், முடிகளை அகற்ற உங்களுக்கு மற்றவரின் உதவி தேவைப்படும்.
மேலே கூறிய நன்மை தீமைகளை வைத்து உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லையா? ஆம் என்றால் இதனைப் பற்றி அறிந்த ஒருவரின் உதவியை நாடுங்கள்.
பிரசவத்திற்கு முன் அந்தரங்க முடிகளை அகற்றுவது பற்றி கவலைப்படுகிறீர்களா? இதனை மேற்கொள்ளுங்கள்.
உங்கள் மருத்துவரிடம் இந்த பிரச்சனையைப் பற்றி கலந்து பேசுங்கள். இதனால் ஒரு முடிவிற்கு உங்களால் வர முடியும்.
உங்கள் தோழிகள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் இது பற்றி பேசுங்கள். இதனால் முடியை அகற்றியவர், அகற்றாதவர் என்று பலரின் முடிவுகளை அறிந்து உங்களால் இதற்கான முறையை பற்றி முடிவு எடுக்க இயலும்.
அந்தரங்க முடிகளை அகற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் மறுக்காமல் உங்கள் கணவரின் உதவியை நாடுங்கள்.
பாதுகாப்பான முறையை தேர்ந்தெடுத்து முடிகளை அகற்றுங்கள்.
கர்ப்ப காலத்தில் எப்படி அந்தரங்க முடிகளைக் களைய வேண்டும் ?
கீழே சொல்லப்படும் வழிகள் மூலம் உங்கள் அந்தரங்க முடிகளைக் களைய முடியும்.
வேக்சிங் அல்லது சர்க்கரை சிரப் பயன்படுத்தி முடிகளை எடுக்கலாம். சூடாக்கப்பட்ட சர்க்கரை சிரப்பை தோல் பகுதியில் பரவலாக தடவி, அதனை மேல் நோக்கி இழுப்பதன் மூலம் முடிகள் அகன்று விடும்.
வயிறு பெரிதாக இருப்பதால் குனிந்து ஷேவ் செய்வது கடினமாக இருக்கும். ஆகவே அழகு நிலையம் அல்லது பெண்களுக்கான சலூன் சென்று பாதுகாப்பான முறையில் இவற்றை அகற்றலாம்.
உங்கள் சருமம் சென்சிடிவாக இல்லாத பட்சத்தில், இதற்கு முன்னர் பயன்படுத்திய அனுபவம் இருந்தால் ,முடிகளை அகற்றும் க்ரீமை பயன்படுத்தலாம். க்ரீமில் உள்ள இரசாயனங்கள், முடிகளின் வேர்க்கால்களை உடைத்து கரையச் செய்து, எளிதில் முடிகளை நீக்க உதவுகின்றன.
எலெக்ட்ரிக் ஷேவர் பயன்படுத்தி விரைவாக ஷேவ் செய்யலாம். இதனை உங்கள் கர்ப்ப காலம் முழுதும் நீங்கள் பயன்படுத்தலாம்.
கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:
நீங்களே உங்கள் அந்தரங்க முடிகளை அகற்றும் போது கவனிக்க வேண்டியவை:
எந்த இடத்தில் முடிகளை அகற்ற வேண்டுமோ அந்த இடத்தில் உங்கள் விரல்களை பயன்படுத்தி சரியான இடத்தை பற்றிக் கொண்டு ஷேவ் செய்யுங்கள்.
பாத் டப்பில் படுத்துக் கொண்டு ஷேவ் செய்வதால் உங்களால் ஓரளவிற்கு பார்த்துக் கொண்டு ஷேவ் செய்ய முடியும்.
ஒரு கண்ணாடியை உங்கள் முன்னால் இருக்கும் சுவர் அல்லது தரையில் மாட்டிக் கொள்வதால் சரியான கோணத்தில் உங்களால் ஷேவ் செய்வதைப் பார்க்க முடியும்.
பிரசவத்திற்கு முன்பு, நர்ஸ் உங்களுக்கு ஷேவ் செய்தால், இவற்றை பின்பற்றி உங்கள் பதட்டத்தை தவிர்க்கலாம்:
எல்லா மருத்துவமனையிலும் பின்பற்றுகின்ற ஒரு முறையாக இது இருப்பதால் இதற்காக பதட்டப் பட வேண்டிய அவசியம் இல்லை. நர்ஸ் அல்லது ஒரு உதவியாளர் வந்து அவர் வேலையை செய்து விட்டு செல்வார்.
உதவியாளர், முடிகளை அகற்றும்போது வெட்டு அல்லது காயம் ஏற்பட்டால் உடனடியாக அவரிடம் தெரிவிக்கவும். வெட்டுகள் அல்லது காயங்கள் தொற்று பாதிப்பை உண்டாக்கலாம்.
சுகப் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகிய இரண்டிலும் இது பொதுவாகப் பின்பற்றப்பட்டு வரும் விதியாகும். அதனால் இதற்காக கவலைப் பட வேண்டாம்.
உங்களுக்கு ஷேவ் செய்வதில் உடன்பாடு இல்லையென்றால் அதனை மருத்துவமனையில் தெரிவிக்கலாம். மருத்துவரிடம் எதற்காக ஷேவ் செய்ய வேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் காரணத்தை சொல்வதால் அவர் இதற்கான பதிலை உங்களுக்கு அளிக்கலாம். ஷேவ் செய்வது அல்லது செய்யாமல் இருப்பது உங்கள் விருப்பம் மற்றும் சுகாதார பழக்கத்தைப் பொறுத்தது. வேண்டும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. ஆனால் உங்களுக்கு இது அவசியமா இல்லையா என்பதை உங்கள் மருத்துவர் முடிவு செய்வார்.
இதனை பற்றிய உங்கள் அனுபவம் மற்றும் கருத்துகளை கமென்ட் பகுதியில் பகிரலாம்.