காப்பீடு திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கு முன் கேட்கவேண்டிய 3 கேள்விகள்
எந்த பொருளையும் வாங்குபவர்கள், அந்த பொருளைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு வாங்குவதை அவர்களின் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய நாட்களில், வாடிக்கையாளர் சேவை செய்யும் எந்த ஒரு நிறுவனத்திலும் எளிமையான மற்றும் நிலையான வடிவமைப்புகள் இருப்பதில்லை. இத்தகைய ஒழுங்கற்ற போக்கு எல்லா துறைகளிலும் இன்று காணப்படுகிறது.
ஆகவே, உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதற்கு ஒரு நிதி தயாரிப்பு வாங்கலாமா? இதனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றுவதற்கு முன், இந்த தயாரிப்பை பற்றி கூர்ந்து கவனியுங்கள்.
பணம் நிச்சயம் இரட்டிப்பாகிவிடும், ஆனால் கேட்க வேண்டிய கேள்வி: எத்தனை ஆண்டுகள் கழித்து? 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பணம் உங்களிடம் வந்தால், அது சுமார் 5% நிகர வருவாய் ஆகும். .
ஒழுங்கு முறையற்ற சந்தை போக்கில், குறிப்பாக சிக்கலான காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் முதலீடு செய்பவர்கள் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களின் (Ulip) நிதி செயல்திறன் போன்ற சில தகவல்கள் கிடைக்கின்றன, ஆனால் அது போதாது. ஒரு காப்பீட்டு திட்டத்தை வாங்குவதற்கு முன் சில கேள்விகளுக்கான பதில்கள் தேவை. இதோ அவற்றுள் சில.
முதலீட்டு வருவாய் என்ன ?
ஒரு முதலீடு செய்தால், அதன் வருவாய் என்ன என்பதை பார்க்க வேண்டும். காப்பீட்டுத் திட்டங்கள் உண்மையான விகிதத்தை குறிக்காத எண்களுடன் அல்லது விகிதங்களுடன் முதிர்ச்சியின் உத்தரவாதத்தை அளிக்கின்றன, உதாரணமாக, ஒரு திட்டம் , உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதாக உறுதியளிக்கலாம், ஆனால் வருவாய் விகிதத்தை அது குறிப்பிடுவதில்லை. காப்பீட்டாளர்கள் இதனை எளிய வழியில் கண்டுபிடிக்கலாம் என்று கூறினாலும், அதனை கண்டறிய முயற்சிக்கும் போது சிக்கலாகிவிடும். வருவாய் விகிதம் தெரியாமல் உங்களால் எப்படி மற்ற நிதி முதலீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும்? உங்கள் குறிக்கோள்கள் மற்றும் நேரத் தோற்றத்துடன் நன்றாகப் பொருந்துகிறதா என்பதைப் புரிந்து கொள்ள வருவாய் விகிதம் தேவை "என்று சான்றிதழ் பெற்ற நிதி ஆலோசகர் மற்றும் பணியாளர் நிதி ஆலோசகர் நிஸ்ரீன் மமஜி கூறுகிறார்.
மேலே உள்ள எடுத்துக்காட்டில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், பணத்தின் நேர மதிப்பாகும், இது வருவாய் கணக்கிடும் போது முக்கியமானது
ஒரு வருடத்தில் நீங்கள் செலுத்தும் பணம் இரடிப்பானால், அதன் வருவாய் விகிதம் 100%, அதுவே 15 வருடம் கழித்து இரட்டிப்பானால், அதன் வருவாய் விகிதம் வெறும் 5% மட்டுமே.
ஒரு முதலீட்டின் நிகர வருவாய் பற்றி தெரிந்து கொள்ள நிதி ஆலோசகர் அல்லது ஆன்லைன் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயன் விளக்கம் எங்கே?
ஒழுங்குமுறை கட்டளை காப்பீட்டுக் கொள்கைகள் ஒரு பயன் விளக்கம் மூலம் விளக்கப்பட வேண்டும். பயன் விளக்கம் என்பது ஒவ்வொரு ஆண்டின் செலவு மற்றும் நன்மைகளின் சுருக்க விளக்கம் ஆகும். சந்தை ஆதாரங்களுடன் இணைக்கப்பட்ட அல்லது வருவாய் உத்தரவாதம் இல்லாத திட்டங்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள இவை மிகவும் முக்கியம்.
காப்பீட்டாளர்கள் இரண்டு விதமான வருவாய் விகிதங்களை அதாவது 4% மற்றும் 8% காண்பிக்கும்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. காப்பீட்டிற்கான செலவு, மரணத்திற்கு பின் கிடைக்கப்படும் தொகை, பாதியில் காப்பீட்டை நிறுத்துவதால் ஏற்படும் விளைவு போன்றவற்றைப் பற்றிய ஒரு விளக்கம் இங்கு தரப்படுகிறது. யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களின் நிகர வருவாய் கூட அறியப்படுகிறது. ஆனால் வெளியிடப்படும் நிகர வருவாயில் எல்லா செலவுகளும் சேர்க்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, நிகர வருமானத்தை வெளியிடும் போது காப்பீட்டாளர்கள் பொதுவாக இறப்பு செலவினங்களை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள், ஆனால் நீங்கள் வயதானவர்களாகவும் , அதிகமான தொகையை காப்பீடு செய்திருந்தாலும், அது, உங்கள் வருவாயில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
வெளியிடப்பட்ட நிகர வருவாயை நீங்கள் ஒருபோதும் நம்ப வேண்டாம். ஒரு நிதி ஆலோசகரிடம் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகை மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வருவாய் போன்றவற்றை ஆன்லைன் கருவிகள் மூலமாக கணக்கிட்டு நிகர வருவாயைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பாதியில் நிறுத்தினால் உண்டாகும் பலன்கள் :
காப்பீடு திட்டம் என்பது ஒரு நீண்ட நாள் திட்டம் . இதில் தொடக்கம் முதல் நாம் பணத்தை முதலீடு செய்வதால், பாதியில் நிறுத்தும்போது, அதன் இழப்பு மிகவும் பெரியதாக இருக்கும்.
யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களின் , காப்பீட்டை முன்கூட்டியே ஒப்படைக்கும் போது ஏற்படும் செலவுகளின் தாக்கம் குறைவாகவே காணப்படுகின்றன. மேலும் முதல் நான்கு ஆண்டுகளுக்குள் காப்பீட்டை சமர்பிக்கும் போது மட்டும் தான் , சமர்பிப்பு தொகை கோரப்படுகிறது. ஆனால் பாரம்பரிய திட்டங்களில் இதன் செலவு மிகவும் அதிகம். பாதியில் காப்பீட்டை ஒப்படைப்பதால் உண்டாகும் விளைவை மக்கள் புரிந்து கொள்வதில்லை. காப்பீட்டில் வரிச் சலுகை இருப்பதால், பெரும்பாலான மக்கள் தங்களது குறைந்த கால முதலீட்டையும் காப்பீட்டிலேயே திட்டமிடுகிறார்கள். கால கட்டம் மற்றும் செலவினங்களை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது வேறு ஒரு பெரிய இழப்பு ஏற்படலாம் என்று "ஜெயின் முதலீட்டு திட்டத்தின் பிரதான ஆலோசகர் வினோத் ஜெயின் கூறினார்.
காப்பீடு மற்றும் முதலீட்டு தேவைகளை நீங்கள் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும், ஆனால் ஒரு தொகுக்கப்பட்ட திட்டத்தின் வசதிக்காக நீங்கள் விரும்பினால், தொடர்ந்து இதனை நீங்கள் முயற்சிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.