சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இருமலை விரட்ட வேண்டுமா?
சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு நம்மால் இருமலை விரட்ட முடியும்.
இருமல் நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாயில் ஏற்படும் அலர்ஜியினாலும், தொற்றுக்களினாலும் ஏற்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கு குளிர்காலத்தில் சளி பிடித்து மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் தொற்றுக்களை ஏற்படுத்தி இருமலை உண்டாக்குகிறது. நாம் சுவாசிக்கின்ற மாசு நிறைந்த காற்றிலுள்ள புகையும், தூசியும் வறட்டு இருமலை உண்டாக்குகிறது.
இருமலை விரட்ட சில எளிய வழிகள்:
- சுக்கு, மிளகு, திப்பிலியை சம அளவு பொடி செய்து கொள்ளவும் அதில் இரண்டு கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட இருமல், தொண்டைவலி குணமாகும்.
- காய்ச்சிய பாலில் சிறிதளவு மிளகுத் தூளை போட்டு கலந்து குடித்தால் இருமல் நிற்கும்.
- முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
- அதிமதுரத்தை இடித்து சலித்து வைத்துக் கொண்டு இருமல் வரும்போது கால் ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட இடைவிடாத இருமல் குணமாகும்.
- தேநீர் செய்யும் போது சிறிதளவு இஞ்சி, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இருமல் குணமாகும்.
- வெற்றிலைச் சாறுடன், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் மிளகுத்தூளை கலக்கி குடித்தால், ஒரு மணி நேரத்தில் இருமலால் ஏற்படும் இறைப்பு குணமாகும்.
- பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை கலக்கி குடித்தால் இருமல் குணமாகும்.
- எலுமிச்சம் பழ சாறுடன் தேன் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.
- ஒரு கப் சுண்ணாம்பை எடுத்து அரை தேக்கரண்டி தேனுடன் கலந்து கொண்டு ஒரு தேக்கரண்டி முருங்கை இலை சாற்றை பிழிந்து கொள்ளவும் இதை தொண்டையின் வெளிப்புறமாக தடவினால் இருமல் குணமாகும்.
- ஒரு சுண்டைக்காயை எடுத்து பசையாக்கி கொஞ்சம் பாலுடன் கலந்து எடுத்துக் கொண்டால் இருமல் குணமாகும்.
- முள்ளங்கி சாறு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி உடன் சிறிதளவு தேனை கலந்து குடித்தால் இருமல் குணமாகும்.
- ஒரு கப் தண்ணீரில் இரண்டு மேசைக் கரண்டி சோம்பு போட்டு அது பாதியாக குறையும் வரை கொதிக்க விடவும், இந்த நீரை காலையிலும், மாலையிலும் ஒரு மேஜைக்கரண்டி அளவு குடித்தால் இருமல் குணமாகும்.
- 3 பூண்டு பற்களை ஒரு கப் பாலில் போட்டு கொதிக்கவைத்து இரவில் குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
- பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், தேன் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து தினமும் இரு முறை சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
- இரண்டு அல்லது மூன்று கிராம்பை, உப்புடன் கலந்து வாயில் போட்டு மெல்லுவதால் இடைவிடாத இருமல் குணமாகும்.
நம் சமையலறை பொருட்களின் மகத்துவத்தை தெரிந்து உபயோகித்தோம் என்றாலே போதும், நமக்கு நோய் வந்தபிறகு மட்டுமல்ல வருவதற்கு முன்னரும் நோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து நோயை வரவிடாமல் நம்மை காக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.