அக்குள் கருமையைப் போக்க
அக்குளின் கருமையை எளிதாக நீக்க இது ஒரு வழி.
பலருக்கு அக்குளின் கருமை ஒரு பெரிய பிரச்சனை. இதனால் தங்களுக்கு பிடித்த ஆடைகளை உடுத்த தயக்கம் ஏற்படுகிறது. பொதுவாக அக்குளின் கருமை என்பது, முடிகளை அகற்றுவதற்கு நாம் பயன்படுத்தும் ரேசர் மற்றும் வேதியல் பொருட்கள் நிறைந்த கிரீம் தடவுவதால் வருவது.
தற்போது அந்தக் கருமையை 10 நிமிடங்களில் நீக்க இது ஒரு வழி...
முதலில்: ஸ்க்ரப்பிங் (Scrubbing)
தேவையான பொருட்கள்:
1. சர்க்கரை - 1 டீஸ்பூன்
2. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
3. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
சர்க்கரை, தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழ சாறு ஆகியவற்றை நன்கு கலக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த கலவையை கைகளில் எடுத்து ஒரு 5-6 நிமிடங்கள் அக்குளில் நன்றாக மசாஜ் செய்யவும். எலுமிச்சை சாறு வியர்வை நாற்றம், மட்டும் பாக்ட்டீரியவைக் கொல்லும். சர்க்கரை தோலில் படிந்திருக்கும் இறந்த செல்களைக் கொன்றுவிடும்.
தேங்காய் எண்ணெய் துளைகள் உள்ளே ஆழமாக சென்று தோலை நாம் அடுத்ததாக பயன்படுத்தப்போகும் வெண்மை பேக்கிற்கான அடிப்படைத் தயார் நிலையை ஏற்படுத்தும் .
இரண்டாவதாக: வெண்மை பேக்:
தேவையான பொருட்கள்:
1. கரி(charcoal) பொடி - 2 டீஸ்பூன்
2. தேன் - 2 டீஸ்பூன்
தேன் மற்றும் கரிப்பொடியைக் கலந்தால் கருப்பு நிற பசை கிடைக்கும். அந்த பசையை அக்குளில் தடவி 5 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவவும். கரி உடனடியாக தோலின் கருமை நிறத்தை மாற்றும் தன்மை கொண்டது மற்றும் தோலை மிருதுவாகவும் அழகாகவும் மாற்றுகிறது. தேன் இயற்கை மாய்ஸ்சரைசராக இருக்கிறது, அது மிருதுவான மற்றும் மென்மையான தோலாக மாற்றும் திறன் கொண்டது.