வேலைப்பளு அதிகம் உள்ள நாட்களில் இந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
வேலைப்பளு அதிகமாக இருக்கும் நாட்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான உணவு வகைகள்
நமது உடலை சக்தியோடு இயங்க வைக்க உணவு ஒரு முக்கிய பொருளாகும். வேலை அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் நாம் உணவின் மீது மிகக் குறைந்த கவனம் செலுத்துகிறோம். வேலைக்கு செல்வதில் தாமதம் இருக்கக்கூடாது என்பதற்காகவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் நாம் உணவு உட்கொள்வதைத் தவிர்த்துவிடுவோம். நாம் உணவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் உடலின் செயல்பாட்டுக்கு உணவு மிகவும் அவசியம். வழக்கமான நாட்களில் வழக்கமான உணவு உட்கொள்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. ஆனால் வேலைப்பளு அதிகம் உள்ள நாட்களில் நிச்சயம் உணவு உட்கொள்வதை முதல் வேலையாக வைத்துக் கொள்ள வேண்டும். வேலைப்பளு அதிகமாக உள்ள நாட்களில் ஆரோக்கியமான உணவு உட்கொள்வது கடினமாக தெரியலாம். கடைகளில் அல்லது உணவகங்களில் வாங்கும் உணவுகள் பேக்கிங் செய்யப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவாக இருக்கும்போது நிச்சயம் அவை உடலுக்கு ஆரோக்கியம் தராது. ஆனால் நீங்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும், ஓடிக்கொன்டே இருந்தாலும் பசி எடுக்காமல் இருக்காது. உங்கள் நேரத்திற்கு ஏற்ற உணவை உங்களால் எடுத்துக் கொள்ள முடியாமல் போகும்போது கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்குத் தேவைப்படலாம். இந்த நுட்பங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை எந்த நேரத்திலும் பின்பற்றலாம்.
உங்கள் காலை உணவை தவற விட வேண்டாம் :
காலையில் உடலுக்கு ஆற்றல் தரும் உணவு காலை உணவு. ஆகவே இதனை தவற விட வேண்டாம். அந்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்க காலை உணவு உதவும். சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் கலோரிகள் கிடைக்க ஒரு சமநிலையான காலை உணவை பின்பற்றுவது அவசியம். குறைந்த கொழுப்பு மற்றும் உயர் புரதம் கொண்ட காலை உணவை எடுத்துக் கொள்வதால் உங்கள் வயிறு நிரம்பி இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வகை காலை உணவு வேகவைத்த முட்டை , குறைந்த கொழுப்பு கிரீக் யோகர்ட், குறைந்த கொழுப்பு காட்டேஜ் சீஸ் , ஓட்ஸ், தானியங்கள் இணைந்த பிரட் மற்றும் பழங்கள் ஆகியவற்றில் கிடைக்கிறது. உங்களுக்கு அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் இரவு நேரத்திலேயே உங்கள் காலை உணவை தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இரவு முழுவதும் ஊறவைத்த ஓட்ஸ் உடலுக்கு மிகவும் நல்லது.
உங்கள் பையில் எப்போதும் ஸ்னாக்ஸ் பாக்ஸ் இருக்கட்டும் :
உங்கள் கையில் எப்போதும் ஆரோக்கியம் தரும் சிற்றுண்டிகளை வைத்துக் கொள்வதால் பசி நேரத்தில் ஜங்க் உணவுகளின் பின்னால் போக வேண்டாம். உங்கள் விருப்பத்திற்கேற்ப பல சிற்றுண்டி தேர்வுகளை எங்கள் எடுத்துக் கொள்ளலாம். பழங்கள், கிரீக் யோகர்ட், கலவையான உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் , முழு கோதுமை குக்கி , ப்ரோடீன் பார், கிரானோலா போன்றவை சிறந்த சிற்றுண்டி வகைகளாகும்.
சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வதை மட்டும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் :
வீட்டில் இருக்கும்போது ஒரு வித உணவுப் பழக்கம் மற்றும் வெளியில் செல்லும்போது ஒருவித உணவுப் பழக்கம் என்று பின்பற்றினால் அது சமச்சீரற்ற உணவு முறையாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது மோசமான விளைவைத் தரும். ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் அதற்கேற்ற டயட்டை நிர்வகிப்பது என்பது ஒரு கடினமான செயலாகும். ஆனால் அதனை ஏற்படுத்த ஒரு வழி உள்ளது. உங்கள் சாப்பாடு தட்டை இரண்டாகப் பிரியுங்கள். ஒரு பாதி பழங்கள் மற்றும் மறுபாதி காய்கறிகள்.
மெனு கார்டில் ஆரோக்கியமான உணவை மட்டும் தேர்ந்தெடுங்கள் :
உணவகத்திற்கு செல்வது என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி. வீட்டில் தயாரித்து சாப்பிட முடியாத உணவு வகைகள் மெனு கார்டில் உள்ளதா என்பதை பார்த்து தேர்ந்தெடுப்பது, நீண்ட நாட்கள் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்ட உணவை தேர்ந்தெடுப்பது போன்றவை ஒரு தவறான பழக்கமாகும். ஆனால் நீங்கள் நினைத்தால் இந்த தவறை கட்டுப்படுத்த முடியும். ஒரு முழு உணவை ஆர்டர் செய்வதற்கு முன் முதலில் ஒரு சாலட் அல்லது சூப் வாங்கலாம். இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தும். இதன் பிறகு வேகவைத்த அல்லது க்ரில் செய்யப்பட்ட உணவு வகைகளை தேர்வு செய்யலாம். இதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.
உங்கள் உணவை முன்கூட்டியே திட்டமிடுங்கள்:
இந்த திட்டத்தை நீங்கள் பழக்கத்திற்கு கொண்டு வரும்போது பாதி பிரச்சனை தீர்ந்துவிடும். ஒவ்வொரு வாரத்திற்கான உணவு அட்டவணையை திட்டமிட்டு அதனை கட்டாயம் பின்பற்றுங்கள். ஒரு வாரத்திற்கான உணவு அட்டவணை திட்டமிடுவதில் சிக்கல் இருந்தால் ஒரு நாள் முன்பு நாளைய உணவை திட்டமிடுங்கள். உங்கள்அட்டவணையில் ஆரோக்கியமான உணவுகள் நிறைந்து இருக்கட்டும்.