தமிழ்நாடு என்று பெயர் மாறக் காரணமாக இருந்தவர்

ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் போது அதற்காக உயிர் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனாரை அனைவரும் போற்றுவோம்.

தமிழ்நாடு என்று பெயர் மாறக் காரணமாக இருந்தவர்

தமிழ்நாடு என்று பெயர் மாறக் காரணமாக இருந்தவர்

தியாகி சங்கரலிங்கனார் 

மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்பதற்காக தன் உயிரையே தந்தவர். சங்கரலிங்கனாரின் வேண்டுகோளுக்காக அண்ணா துரை 1968 ஜூலை 18 ஆம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றினார்.

இளமைப்பருவம்:

க.பெ. சங்கரலிங்கநாதர் ஜனவரி 26 ஆம் தேதி 1895 ஆம் ஆண்டு விருதுநகரில் பெரிய கருப்பசாமி வள்ளியம்மைக்கு மகனாக பிறந்தார். விருதுநகரில் உள்ள ஞானதி நாத நாராயனார் பள்ளியில் இவர் எட்டாம் வகுப்பு வரை படித்தார். அப்போது  காமராஜரும் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தார்.

விடுதலைப் போராட்டம்:

சங்கரலிங்கனார் சிறுவயதில் இருந்தே தாய்மொழி பற்றும் தாயை நாட்டுப் பற்றும் மிக்கவராக இருக்க காரணமாக இருந்தவர்கள் வ. உ. சி மற்றும் காந்தியடிகள். அதனால் பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டார். காந்தியடிகளின் மீது கொண்ட பற்றினால் கதர் ஆடைகளை உடுத்தினார். கதர் இயக்கத்தின் மீதான ஈடுபாட்டால் விருதுநகரில் கதர் வஸ்தராலய கடையை திறந்தார். காந்தி தண்டி யாத்திரை தொடங்கிய போது அவருடன் இவரும் மூன்று நாட்கள் பயணம் செய்தார். 

பெண்கள் முன்னேற்றத்துக்காக எவ்வாறு உதவினார்:

விருதுநகரில் பங்கஜ விலாச வித்யாபிவர்த்திச் சங்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி கல்வியில் பெண்கள் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டார் சுவாமி திருவாலவாயர் அச்சங்கத்தின் செயலாளராக இருந்தார் சங்கரலிங்கனார்.

மாதர் கடமை என்னும் நூலை எழுதி வெளியிட்டதன் மூலம் இவருக்கு ராஜாஜியுடன் தொடர்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் கலந்து கொண்ட தோடு ராஜாஜியையும் சந்தித்து பேசினார். தனக்குச் சொந்தமான இரு வீடுகள் மற்றும் ரூபாய் நான்கு ஆயிரத்தை விருதுநகர் சத்ரிய மகளிர் பள்ளிக்கு நன்கொடையாக தந்தார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக கஞ்சு ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். இதுவே காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததற்கு முன்னோடியானதாகும். 

உண்ணாவிரதப் போராட்டம்:

பொட்டி ஸ்ரீ ராமலுவின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய பாதிப்பிலும் மா.பொ.சியின் தமிழரசு கழகம் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்காக போராட்டம் நடத்தியதன் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிட்டார். அதில் 12 கோரிக்கைகளை முன் வைத்தார். இதில் முதன்மையானது சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதாகும். இவரது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் தனது வீட்டின் முன்பு ஜூலை 27ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார் உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று ம. பொ.சி சிவஞானம், காமராஜர், அண்ணா, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா சொன்னதையும் கேட்கவில்லை. அண்ணாவிடம் நீங்களாவது தமிழ்நாடு என்று பெயர் மாற்றுங்கள் என்றார். அக்டோபர் 10ஆம் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் அக்டோபர் 13, 1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது. கடைசிவரை அவர் முடிவில் இருந்து அவர் மாறவில்லை.

சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதத்தின் வெற்றி:   

1967ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா துரை சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையை தமிழக அரசு என்று மாற்றினார். அதன் பிறகு  சங்கரலிங்கனாரின் வேண்டுகோளுக்காக அண்ணா துரை 1968 ஜூலை 18 ஆம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றினார். அதே ஆண்டு நவம்பர் மாதம் சட்டபூர்வமாக பெயர் தமிழ்நாடு மாற்றப்பட்டது.

நினைவகம்:

தமிழக அரசு 2014 ஆம் ஆண்டு  விருநகரில் உள்ள   கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகில் ரூ.1.6 கோடியில் தியாகி சங்கரலிங்கானின் நினைவை போற்றும் வகையில் மணி மண்டபம் ஒன்றை  கட்டியது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தை திறந்துவைத்தார். 

ஜூலை 18 ஆம்  தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் போது  அதற்காக உயிர் தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனாரை அனைவரும் போற்றுவோம்.