இழைமணி ஆரோக்கியத்தை அதிகரிக்க 6 வழிகள்
பெரும்பாலும் மக்கள் நாள் முழுவதும் மந்தமாகவும் சோர்வாகவும் உணர்கிறார்கள். இதற்கு காரணம் உங்கள் மைட்டோகாண்ட்ரியா என்னும் இழைமணி ஆரோக்கியமாக இல்லாததால் ஏற்படுகிறது.
மைட்டோகாண்ட்ரியா என்னும் இழைமணி என்பது உடலின் ஆற்றல் மட்டங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சிறிய தடி வடிவ உறுப்புகள் ஆகும். இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், மைட்டோகாண்ட்ரியா என்பது உயிரணுக்களின் “சக்தி உருவாக்கி” என்று கூறலாம். மேலும் அவை சர்க்கரை, கொழுப்பு மற்றும் புரதத்தை உயிரணுக்களாக மாற்றுவதற்கு அவசியமான நொதிகள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்குவதற்கு பொறுப்பாகும்.
வயது அதிகரிக்கும்போது மைட்டோகாண்ட்ரியா அளவு மற்றும் எண்ணிக்கை குறைகிறது. எனவே மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிக அவசியம் ஆகும்.
மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான வழிகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
1. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்:
இளைஞர்களுடன் ஒப்பிடும்போது வயதானவர்களுக்கு மைட்டோகாண்ட்ரியா குறைவாகவே உள்ளது. எனவே ஒரு நபர் வயதாகும்போது, தினமும் உடற்பயிற்சி செய்வது உயிரணுக்களில் மைட்டோகாண்ட்ரியாவின் எண்ணிக்கையையும் வலிமையையும் மேம்படுத்தும் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவின் வீழ்ச்சியைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
2. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள்:
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு அமிலங்களைப் பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி செய்யத் தேவையான அடினோசின் ட்ரைபாஸ்பேட்டை மைட்டோகாண்ட்ரியா தயாரிக்கிறது. உங்கள் மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். காய்கறிகள், அவகேடோ, கொட்டைகள் மற்றும் விதைகள், மீன், இறைச்சி மற்றும் பழங்கள் போன்ற உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கூடுதலாக எல்-கார்டினின், ஆல்பா-லிபோயிக் அமிலம் மற்றும் சல்பர் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
3. போதுமான அளவு உறங்குங்கள்:
போதுமான அளவு ஆழ்ந்து தூங்குவதால் மைட்டோகாண்ட்ரியா சேதமடைந்த செல்களை சரிசெய்யவும், உயிரணுக்களில் இருந்து கழிவுகளை அகற்றவும் அனுமதிக்கிறது. உங்களுக்கு ஒழுங்கற்ற தூக்க பழக்கம் இருந்தால், மைட்டோகாண்ட்ரியாவால் உயிரணு செயல்பாட்டை சரியாக பராமரிக்க முடியாமல்போகும், இது உங்கள் உடலை பல்வேறு நோய்களால் பாதிக்கும் மற்றும் உங்கள் ஆயுட்காலம் குறையலாம்.
4. தியானம் செய்யுங்கள்:
தியானம் மற்றும் யோகா, தாய் சி போன்ற உடல் தளர்வு அடிப்படையிலான நுட்பங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும், இதனால் மைட்டோகாண்ட்ரியாவுக்கு குறைந்த சேதம் ஏற்படும் என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது புற்றுநோய், அல்சைமர் நோய், பார்கின்சன் நோய் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.
5. சூரிய ஒளி:
உடலை போதுமான அளவு சூரிய ஒளிக்கு வெளிப்படுத்துவது மைட்டோகாண்ட்ரியா உற்பத்தியை அதிகரிக்கும். சூரிய ஒளியில் இருந்து தேவையான அளவு வைட்டமின் டி பெறுவது தசைகளில் மைட்டோகாண்ட்ரியல் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.
6. அழற்சியை குறைக்கிறது:
உடல் உறுப்புகளில் அழற்சியின் அதிகரிப்பு மைட்டோகாண்ட்ரியா செயல்பாட்டில் தலையிடக்கூடும் மற்றும் குறைவான ஆற்றல் உற்பத்திக்கு வழிவகுக்கும். இந்த குறுக்கீடு மைட்டோகாண்ட்ரியாவின் சரியான செயல்பாட்டை சீர்குலைத்து , சேதமடைந்த செல்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் இது உடலில் வீக்கத்தை அதிகரிக்கும்.
முடிவுரை:
உங்கள் தினசரி வாழ்க்கைமுறையில் மேலே கூறிய மாற்றங்களைக் கொண்டுவந்து மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தொடங்குங்கள். அவசரம் வேண்டாம். நிதானமாக இந்த செயல்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் மனஅழுத்தம் மற்றும் பதற்றம் தவிர்க்கப்படும். மைட்டோகாண்ட்ரியல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உங்கள் வாழ்க்கை முறை பழக்கத்தை மேம்படுத்துவதற்கான நீண்டகால இலக்காக மாற்றுவதில் கவனம் செலுத்துங்கள்.