டெர்ம் காப்பீட்டு திட்டம் - இதனை பயன்படுத்துவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்குகிறது.டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம், சுத்தமான பாதுகாப்பு திட்டம் என்றும் அறியப்படுகிறது.
காப்பீட்டின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணம் நமக்கு பிறகு நமது குடும்பத்திற்கு இது ஒரு நிதியுதவியை பெற்றுத் தருவது தான். ஆனால் காப்பீடு திட்டத்தை தொடங்குவதற்கு முன் சில விஷயங்களை ஞாபகத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.
இன்றைக்கு பிரபலமாக இருக்கும் இன்சுரன்ஸ் திட்டத்தில் ஒன்று டெர்ம் இன்சூரன்ஸ். இந்த டெர்ம் இன்சூரன்ஸ் நமது வாழ்நாளுக்கு பிறகும் நமது குடும்பத்திற்கு ஒரு நல்ல நிதி பாதுகாப்பை தருகிறது. துரதிஷ்டவசமாக ஒருவர் இறக்க நேரிட்டால், காப்பிடு நிறுவனம் அவரின் குடும்பத்திற்கு பாதுகாவலனாக இருந்து செலுத்தப்படாத கடன்கள் இருந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறது. அவர்களுக்கு ஒரு வருமானத்தை கொடுக்கிறது. ஆனால் உயிரோடு இருக்கும்போது எந்த ஒரு பண லாபமும் இல்லை என்பதால் இந்த திட்டத்தை ஏற்க பலரும் எண்ணுவதில்லை. ஆனால் ஒவ்வொரு குடும்ப தலைவனின் நோக்கமும், அவருக்கு பிறகு அவர்களின் குடும்பம் வருமானம் இன்றி இருக்க கூடாது என்பதாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தை பாதுகாக்க , இது ஒரு மிகப்பெரிய மூலதனம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தற்காலிக லாபத்தை இதில் யோசிக்க வேண்டாம்.
ஒருவரின் இழப்பிற்கு பிறகும் அந்த குடும்பம் சந்தோஷமாக , பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் இருக்க , அதுவும் குறைந்த முதலீட்டில் செய்யும் ஒரு சேமிப்பாக இது பார்க்கப்படுகிறது. பிரதி மாதம் ரூபாய். 490 கட்டுவதன் மூலம், ரூபாய். 50,00,000 வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த புத்திசாலித்தனமான முடிவை எடுக்க இன்னும் தாமதம் வேண்டாம். ஆனால் அந்த முடிவை எடுப்பதற்கு முன், கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொள்வதால் உங்கள் முடிவை இன்னும் எளிதாக்கலாம்.
உங்கள் வருமானத்தில் 20 மடங்கு பணத்தை காப்பீடு தொகையாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்:
உங்கள் வருமானத்தில் 20 மடங்கு வரை உங்கள் காப்பீட்டு தொகை அளவை நிர்ணயித்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.. ஒரு குடும்பத்திற்கான சரியான காப்பீட்டை தெரிவு செய்யும் முன்னர் சில விஷயங்களை முடிவு செய்தல் அவசியம். அவை,
தற்போதைய வருமானம்.
குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் உண்டாகும் சம்பள உயர்வு
தினசரி குடும்ப செலவு
குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற வருங்கால தேவைகள்
இளம் வயதிலேயே இன்சூர் செய்யுங்கள்:
காப்பீட்டை வாங்குவதில் கால தாமதம் ஏற்படும்போது, உங்கள் மொத்த பிரிமியம் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. வயது அதிகரித்து இருப்பதால் இன்சூரன்ஸ் கவர் குறையலாம். டெர்ம் திட்டத்தில் உள்ள எல்லா அத்தியாவசிய பலன்களையும் அனுபவிக்க வேண்டும் என்றால் உங்கள் இளம் வயதிலேயே இந்த திட்டத்தை கையில் எடுக்க வேண்டும். இதனால் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் சேமிப்பை நோக்கி செல்லும் வாய்ப்பு உண்டு.
புத்திசாலித்தனமாக ஒப்பிடுங்கள் :
பிரிமியத்தை கணக்கில் கொண்டு பலர் டெர்ம் இன்சுரன்சில் பணத்தை முதலீடு செய்கின்றனர், இது முற்றிலும் தவறு. காப்பீட்டின் அம்சங்களை கருத்தில் கொண்டு இதனை முடிவு செய்ய வேண்டும். குறைந்த பிரிமியம் கொண்ட விருப்பத்தை தேர்வு செய்வது தவறு. இந்த குறுகிய கால காப்பீடு எந்த பலனையும் கொடுக்காது. நீண்ட நாள், டெர்ம் இன்சுரன்சில் முதலீடு செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
நேர்மைக்கான மதிப்பு :
டாக்டர் மற்றும் வக்கீலிடம் பொய் சொல்ல கூடாது என்ற உண்மையை அனைவரும் அறிவர். காப்பீடு செய்பவரிடமும் எந்த பொய்யும் சொல்லக் கூடாது. உதாரணத்திற்கு, நீங்கள் 20 வயதில், உங்கள் மருத்துவ அறிக்கைகளை மறைத்து, ஒரு காப்பீடில் உங்கள் பணத்தை முதலீடு செய்கிறீர்கள். காப்பீடு காலத்திற்குள் எதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு, நீங்கள் இறந்தால், அதன்பிறகு, காப்பீடு நிறுவனம் மறைக்கப்பட்ட உங்கள் ஆரோக்கிய குறைபாடால் தான் நீங்கள் இறந்தீர்கள் என்பதை கண்டுபிடித்தால் உங்கள் காப்பீடு பணம் முழுவதும் பறி போய்விடும். உங்கள் காப்பீடை முழுவதுமாக தள்ளுபடி செய்து விடுவார்கள். ஆகவே, உங்கள் வயது, ஆரோக்கிய குறைபாடு, புகை பழக்கம், மற்ற காப்பீடு தகவல்கள் , உங்கள் மருத்துவ பின்புலம், போன்றவற்றை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம் காப்பீடு நிறுவனம் உங்கள் மனுவை நிராகரிக்கும் வாய்ப்பைத் தடுக்கலாம்.
ஒப்பீடு மிகவும் முக்கியம் :
நிதி பாதுகாப்பு, எளிதில் செலுத்த முடிகிற பிரிமியம், மற்றும் மனதிற்கு நிம்மதி போன்றவை இதன் மூலம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இதில் சிறந்தவற்றை எப்படி தேர்ந்தெடுப்பது? சிறந்த மற்றும் நமது பொருளாதாரத்திற்கு ஏற்ற காப்பீட்டை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கடினமான செயல். ஆனால் இதற்கான சரியான வழி தெரியாதபோதுதான் இது கடினம். ஆன்லைன் மூலம் எல்லா இன்சூரன்ஸ் திட்டங்களையும் அதன் அம்சங்கள், உள்ளடக்கங்கள், விலக்குகள் போன்றவற்றை கொண்டு ஒப்பிட்டு பார்க்கலாம். பிறகு அதன் நற்பெயர், பிரிமியம் தொகை, தீர்வு தொகை விகிதம் போன்றவற்றை ஒப்பீடு செய்யுங்கள். இதன் மூலம், உங்கள் பட்ஜெட்டிற்கு மற்றும் உங்கள் தேவைக்கு ஏற்ற காப்பீட்டை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்.
கூட்டு காப்பீடு முறை :
ஸ்மார்ட் முதலீட்டாளர்களின் நிறைந்த உலகில், அவர்களின் காப்பீடு திட்டங்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிகளை மக்கள் அறிந்திருக்கிறார்கள். ரைடர்ஸ் அல்லது கூட்டு காப்பீடு மூலம் அதிக பலனை பெறலாம். உங்கள் தேவைகளை கருத்தில் கொண்டு சரியான கூட்டு காப்பீடு முறையை தேர்ந்தெடுக்கலாம்.
முடிவுரை:
டெர்ம் காப்பீட்டில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான ஒரு செயல் ஆகும். ஒருவரின் இறப்பிற்கு பிறகு இந்த காப்பீடு நிச்சயம் அவர்கள் குடும்பத்தினரை காப்பாற்றும். இப்போது நீங்கள் அறிந்து கொண்ட தகவல்கள் மூலமாக எளிதில் ஒரு நல்ல டெர்ம் இன்சூரன்சில் இணையலாம். நல் வாழ்த்துகள்!