குடையை பற்றிய சுவாரசிய குறிப்புகள் 

மழை மற்றும் வெயில் நாட்களுக்கான ஒரு சிறந்த பாதுகாவலன் தான் இந்த குடை. இதன் தேவை இருக்கும் போது திறந்து வைத்து கொள்வதும், தேவை தீர்ந்ததும் மடித்து வைத்து கொள்ளவும் முடிவதால் இது ஒரு சௌகரியமான பொருளாகும்.

குடையை பற்றிய சுவாரசிய குறிப்புகள் 

குடையின் ஆங்கில மொழி பெயர்ப்பான அம்பிரல்லா (Umbrella) எனும் சொல் லத்தின் மொழியின் "அம்ப்ரோஸ்" (Umbros) எனும் வார்த்தையில் இருந்து எடுக்கப் பட்டது. லத்தின் மொழியில் "அம்ப்ரோஸ்" எனும் சொல் "நிழல்" எனும் பொருள் தரும் வகையில் உள்ளது. 

நாம் தற்போது உபயோகிக்கும் நவீன கால குடைகள் முதன் முதலில் 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பா முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த காலம் வரை குடை பெண்களுக்கான ஒரு அலங்கார பொருளாக மட்டும் பார்க்கப் பட்டது. நவீன குடையை உபயோகித்த முதல் ஆண் "ஜோனஸ் ஹான்வே" (Jonas Hanway) என்பவர் என வரலாற்றில் பதிவிடப்பட்டுள்ளது. இவர் ஒரு ஆங்கிலேயர் ஆவார். இவர் தான் முதன் முதலில் பொது இடங்களுக்கு நவீன குடையை எடுத்து சென்ற முதல் ஆண் ஆவார். அவரை பார்த்து தான் இங்கிலாந்தில் வாழ்ந்த பல ஆண்கள் நவீன குடையை  பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இது வெகு விரைவில் உலகம் முழுதும் பரவ ஆரம்பித்து, உலகில் உள்ள பல ஆண்களும் உபயோகிக்கும் ஒரு பொருளாக நவீன கால குடைகள் மாறின. 
நவீன கால குடைகள் பண்டைய கிரேக்க மற்றும் ரோமில் பயன்படுத்தப்பட்ட குடை மாதிரிகளை போல் வடிவமைப்பில் ஒத்திருக்கின்றன.
20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப முன்னேற்றம், நவீன குடைகளில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக உருவெடுத்து இருக்கின்றன. குடைகள் தற்போது பல வகைகளாக தயாரிக்க படுகின்றன. அவை பாரம்பரிய குடைகள், தானியங்கி குடைகள், சிறிய குடைகள் மற்றும் சதுப்புக் குடைகள் (நடைபயிற்சிக்கு பெரிதும் உதவுவது) என் வெவ்வேறு வகைகளில் உற்பத்தி செய்ய படுகின்றன.

நவீன கால குடை வெளிப்புறங்களில் டெஃப்ளான் (Teflon) பூசப்பட்டிருக்கும், அவை அவற்றின் மேல்பகுதியில் நீர்ப் புகாத வகையில் தடுக்கிறது. நவீன குடைகள் பெரும்பான்மையானவை  சீனாவில் தயாரிக்கப் படுகின்றன. சீனாவின் ஒரு நகரமான  ஷாங்யுவில் (Shangyu) ஆயிரம் குடை தொழிற்சாலைகள் உள்ளன என்பது ஒரு கூடுதல் தகவல்.
குடைகளை, தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதமாக கூட பயன்படுத்தப்படலாம். முதன் முதலில் பிரஞ்சு ஜனாதிபதியாய் இருந்த நிக்கோலா சார்க்கோசி (Nicolas Sarkozy) தனது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கெவ்லார் (Kelvar) பூசப்பட்ட குடையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
குடைகளின் நன்மைகள் :
* மழைக்காலங்களில் நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் இந்த குடை. நாம் மழையில் நனையாமல் இது பாதுகாக்கிறது.
* சூரிய ஒளியால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் எரிச்சல்கள் குடையின் பயன்பாட்டால் குறைக்கப்படுகிறது.
* எடை குறைவானதாவும், எடுத்து செல்வதற்கு வசதியாகவும் இருப்பதால் இதன் பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது.
* விலை மலிவானது. எளிதில் கிடைக்கும் ஒரு பொருள்.
* சாலையோரங்களில் சிறிய கடைகள் நடத்துபவர்கள், ஒரு பெரிய  குடையை நட்டு வைத்துவிட்டு, அதன் கீழ் அவர்கள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்வர். 
* சினிமாக்காரர்கள், வெட்ட வெளியில் ஷூட்டிங் நடத்தும்போது  டைரக்டர், நடிகர்,நடிகைகள் வெயிலில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்காக ஒரு பெரிய குடையின் கீழ் அமர்ந்திருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.
* குடைகளை ஒரு ஆயுதமாக தாக்குதல்களில்    பயன்படுத்தலாம்,  குடையின்   தண்டில்  ஒரு இரகசிய கத்தி மறைக்க முடியும்.


இவ்வளவு நன்மைகள் உள்ள குடையில் சில தொந்தரவுகளும் இருக்கின்றன.
தொந்தரவுகள்:
* காற்று மட்டும் இதற்கு எதிரியாகும். எந்த குடையும், காற்றடிக்கும் போது பயன் படுத்த முடியாததாகிவிடும். காற்றில் அதன் கம்பிகள் உடைந்து மடங்கி விடும்.
* டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை மைதானங்களில் பார்க்க போகும்போது, அங்கு ஒரு பெரிய குடையின் கீழ் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருப்பர். அது அவர்களுக்கு சுகமாக இருக்கலாம். வெயில் படாமல்  நிழலில் அமர்ந்து விளையாட்டை பார்த்து கொண்டிருப்பர். ஆனால் பின்னா ல் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு பெரிய தொந்தரவாக இருக்கும். 

இன்றைய காலங்களில் விநாயகர் சதுர்த்தியன்று,  விநாயகருக்கு கூட குடை வைத்து வழிபாடு செய்வதன்  மூலம் மக்களின் குடை பற்றிய சிந்தனையை நாம் அறிந்து கொள்ளலாம்.