நம்ம சென்னை!!!

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பற்றிய சில ஆச்சர்யமான தகவல்களை இங்கே தந்துள்ளோம்.

நம்ம சென்னை!!!

சென்னை! தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நகரங்களில் ஒன்று. சென்னை என்று சொன்னால் பல நியாபகங்கள் உங்களுக்குத் வரலாம். ஒரு சிலருக்கு சென்னை என்பது வெறும் ஒரு ஊர் தான், ஆனால் மற்றவர்களுக்கு சென்னை என்பது வீடு, பாதுகாப்பு , சுதந்திரம் என எவ்வளவோ சொல்லலாம். சந்தேகத்திற்கு இடமின்றி இது இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். அப்படிப்பட்ட சென்னையைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாத சில விஷயங்களை இங்கே தந்துள்ளோம். படித்து என்ஜாய் பண்ணுங்க!

1. சென்னை தான் இந்தியாவின் கலாச்சார தலைநகரம்

2. இந்தியாவின் முன்னணி மருத்துவ சேவைகள் நிறைந்த இடமாக சென்னை விளங்குகிறது

3. தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ சேவைகளில் சிறப்பாக செயல்படும் சென்னை இந்தியாவின் இரண்டாவது இடத்தில் உள்ளது

4.ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம் தான்.

5. 1916 இல் அமைக்கப்பட்ட எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், இந்தியாவின் பழமையான ஸ்டேடியங்களில் ஒன்றாகும்

6. SIPCOT IT பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரியது

7.

சென்னை முன்பு மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது

8. பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பணியாற்றும் நகரங்களில் இந்தியாவிலேயே சென்னைக்கு இரண்டாவது இடம்.

9. பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாக சென்னை உள்ளது

10. இந்தியாவில் வாழ்வதற்கு பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

11. தென்னிந்திய சினிமாவின் பிறப்பிடம் சென்னை தான்.

12. இந்தியாவிலேயே மும்பைக்கு அடுத்தபடியாக, சென்னையில் தான் அதிகமான திரையரங்குகள் உள்ளன.

13. 1920 ல் சென்னையில் நிறுவப்பட்ட புற்றுநோய் ஆராய்ச்சி மையம், இந்தியாவில் பழமையான ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாகும்

14. கடைசியாக சென்னை தான் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.