வீட்டின் ஓவர்ஹெட் டேங்க் என்னும் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான வாஸ்து குறிப்புகள் :
ஓவர்ஹெட் டேங்க் எனப்படும் தண்ணீர் தொட்டி, ஒரு கட்டிடம் அல்லது வீட்டின் ஒரு முக்கிய அம்சமாகும். போர்வெல் அல்லது கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீர், அந்த தொட்டியில் சேமிக்கப்பட்டு, வீட்டில் எல்லா இடங்களுக்கும் குழாய் மூலமாக அனுப்பப்படும்
ஒரு கட்டிடத்தில் தண்ணீர் சேமித்து வைக்கப்படும் சம்ப் அல்லது தொட்டி கட்டுமானத்தில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது வாஸ்து சாஸ்திரத்தின் கூற்று. பண்டைய காலத்தில் முனிவர்கள் மற்றும் சாதுக்கள் இந்த விதிமுறைகளை கண்டுபிடித்துள்ளனர். இவை அறிவியல் மற்றும் கட்டிடக்கலையின் விரிவாக்கமாக கருதப்படுகிறது.
தண்ணீர் தொட்டி, சரியான இடத்தில் நிறுவப்படுவதால் அந்த வீட்டில் உள்ளவர்களின் செல்வம், வளம் மற்றும் ஞானம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான வாஸ்து பற்றி அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.
தண்ணீர் தொட்டிக்கான வாஸ்து குறிப்புகள் :
மேல்நிலை தொட்டியின் இருப்பிடம் அல்லது இடம் என்பது முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். உண்மையில் , மேல்நிலை தொட்டி மேற்கு அல்லது தெற்கு மேற்கு திசையில் இருக்க வேண்டும்.
தென்மேற்கு திசையில் வைக்கப்படும் மேல்நிலை தொட்டி, கட்டிடத்தின் மேல் அடுக்கில் இருந்து குறைந்தது இரண்டு அடி மேலே இருக்க வேண்டும். தண்ணீர் இருப்பதன் காரணமாக, அதன் ஒரு பக்கம் கனமாக இருப்பதால் அதிக நன்மையைத் தருகிறது. இருப்பினும், எந்தவித ஈரப்பதமும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் தொட்டியின் கான்க்ரீட் அடுக்கு, கட்டிடத்தின் அடுக்கை விட உயரமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
கட்டிடத்தின் வடகிழக்கு மூலை தண்ணீருக்கான இடமாக இருந்தாலும், அந்த இடத்தில் பெரிய தண்ணீர் தொட்டி வைப்பது நல்லதல்ல. கட்டிடத்தின் இந்த பக்கம் கனமாக இருப்பது கட்டிடத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். இருந்தாலும், சிறிய அளவு டேங்க் வைப்பதில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
தென்கிழக்கு மூலையில் வைக்கப்படும் தண்ணீர் தொட்டி, விபத்து மற்றும் வளங்களின் அழிவுக்கு வழி வகுக்கும். தென் திசையில் வைக்கப்படும் தண்ணீர் தொட்டியால் இந்த பலன்கள் மிதமான அளவில் இருக்கும். கட்டிடக் கூரைக்கு இரண்டு அடி மேலே , தண்ணீர் தொட்டியின் அடுக்கு அமையும்படி பார்த்துக் கொள்ளவும். நீர் கசிவு ஏற்படாமல் இருக்கும்படி தொட்டியை அமைக்கவும்.
வருண பகவானுக்கு உரிய திசை மேற்கு. இந்த திசையில் தண்ணீர் தொட்டியை கட்டுவது மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கக் கூடியது. வருண பகவான் மழைக் கடவுள் ஆவார். இந்த கட்டத்தில், கான்க்ரீட் அடுக்கு தேவைப்படுவதில்லை. கட்டிடத்தின் மேலேயே இந்த தொட்டியை நீங்கள் நிறுவலாம்.
வடமேற்கு திசையில் தண்ணீர் தொட்டி கட்டுவதை தவிர்க்கவும். இருப்பினும், வடமேற்கு மூலையில் இருந்து இடண்டு அடி தள்ளி, குறைந்த அளவில், கம்மி உயரத்தில் தண்ணீர் தொட்டி இருந்தால் , அதனை அந்த இடத்தில் வைக்கலாம். அப்படி வைத்தாலும், அதில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர், சரியான முறையில் பயன்படாமல், எதிர்பார்த்த நேரத்தை விட விரைவாக காலியாகும் சூழ்நிலை உருவாகலாம்.
கட்டிடத்தின் மத்தியில் தண்ணீர் தொட்டியை வைக்க வேண்டாம். இந்த இடம் பிரமஸ்தானம் என்று அறியப்படுகிறது. பிரம்மாவின் மீது சுமை இருந்தால், வீட்டில் வாழும் தனி நபர்களின் வாழ்க்கை சரியாகாது. நீண்ட காலம் அந்த வீட்டில் தங்க விரும்பமாட்டார்கள்.
பிளாஸ்டிக்கில் செய்த தண்ணீர் தொட்டியை பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை வாங்குபவர்கள், நீலம் , கருப்பு அல்லது அடர்ந்த நிறத்தில் உள்ள தொட்டியை வாங்கலாம். சூரிய கதிர்களை உறிஞ்சும் நிறத்தில் வாங்குவது நல்லது.
குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டு நீர் ஆகியவற்றுக்கு வெவ்வேறு தொட்டிகளை பயன்படுத்தவும். குடிநீர் மற்றும் சமைப்பதற்கு தேவையான நீர் ஒரு தொட்டியிலும், கழிப்பறை மற்றும் குளியலறை பயன்பட்டு நீர் மற்றொரு தொட்டியிலும் சேமிக்கப்படுவதால் இரண்டும் கலக்காமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.