நொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து குறிப்புகள்:

தொழில் நிறுவனங்களை வெற்றிகரமான முறையில் இயங்க வைப்பது எப்படி? ஒரு முக்கியமான வழி, வாஸ்து அறிவியலை இதில் புகுத்துவது. மிகவும் வலிமையான கம்யுனிச கொள்கைகளை பின்பற்றும் சீனாவில் கூட பெங்க்ஷுய் என்னும் இதே போன்ற அறிவியலை பின்பற்றுகின்றனர்.

நொடிந்து போன தொழிற்சாலைகளை மீட்டெடுக்க வாஸ்து குறிப்புகள்:

நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த, இந்திய அரசு, தற்போது பல வழிமுறைகளை கையாண்டு வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பணி பற்றிய ஒரு உண்மையான பார்வையை வெளிக்கொணர்வது என்பது ஒரு முக்கியமான முடிவாகும். 

மாநில மற்றும் மத்திய துறைகளில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு மற்றும் ஆதாரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி முழுத் திறனுடன் வேலை செய்ய முடிவதில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் வாஸ்து பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியதில் நான் அறிந்த செய்தி, தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் இயக்கத்தில் வாஸ்துவின் பண்டைய அறிவியல் பல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. 

நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, அதனை நடத்த தேர்ந்தெடுக்கும் மனை மிகவும் முக்கியம். தண்ணீர் மற்றும் மின்சார வசதி இருக்கிறதா என்பதை பார்ப்பதுடன் , அந்த மனையின் வாஸ்துவைப் பார்ப்பதும் மிகவும் அவசியம். மனையின் வடிவம், மனையை நோக்கும் சாலைகள், மனையின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் நிலத்தின் அளவு போன்றவற்றை நன்கு ஆராய்ந்து பின்பு மனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு நிறுவனம் அல்லது தொழிற்சாலையை நிறுவுவதற்கு முன்னர் பார்க்கவேண்டிய வாஸ்து குறிப்புகள் பின்வருமாறு..


1. கிழக்கு, வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில்  பிரதான சாலைகள் அமைந்திருக்க வேண்டும். இரண்டு பக்கத்திலும் பரந்த வாயில்கள் இருக்க வேண்டும்.

2. வடகிழக்கு அல்லது கிழக்கு அல்லது வடக்கு அல்லது வடமேற்கு திசைகளில் வாயில் அமைவது நல்லது.

3. வடக்கு வாயிலின் வடமேற்கு திசை அல்லது கிழக்கு வாயிலின் தென்கிழக்கு திசையில் பாதுகாவலர் அறை இருக்க வேண்டும்.

4. தெற்கு மற்றும் மேற்கு திசையில் குறைந்த அளவு இடம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த இடத்தில் முடிந்தால் மரம் வளர்க்கலாம். வடக்கிலும் கிழக்கிலும் மிகவும் திறந்தவெளி இருக்க வேண்டும். அங்கு புல்வெளிகள் மற்றும் பிற பசுமையான செடிகளை வளர்க்க முடியும்.

5. தென்மேற்கின் தரை அளவு மற்ற பக்கங்களை விட உயர்வாக இருக்க வேண்டும். கட்டிடத்தின் உயரமும் மற்ற மூலைகளை விட அதிகமாக இருக்க வேண்டும். 

6. தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸ்டோர்-அறைகள் முழுவதுமான கையிருப்பு சரக்குகள் நிறைந்து இருக்கும்படி அதற்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும். சரக்கு குறைய குறைய, மறுபடி உடனடியாக நிரப்பப் படவேண்டும்.

7. வடமேற்கு திசையில் கார் பார்க்கிங் இடம் பெற வேண்டும். வடகிழக்கு திசையில் திறந்த வெளி இடம் இருந்தால் கனம் குறைந்த வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

8. எல்லை சுவரில் இருந்து சற்று தள்ளி, தொழிற்சாலையின் முக்கிய வாசல் உயரத்தை விட சற்று குறைவான உயரத்தில், வடக்கு அல்லது கிழக்கில் நிர்வாக அதிகாரி இருக்கை இடம்பெற வேண்டும். வடகிழக்கு மூலை காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது இங்கு மிகவும் அவசியம்.

9. தென் கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் தொழிலாளர் குடியிருப்பு நிறுவலாம். அந்த குடியிருப்புகள் பல மாடிகள் கொண்டதாக இருக்கும்பட்சத்தில் , அதன் உயரம், பிரதான வாயிலை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில், தொழிற்சாலை வளாகத்தைத் தொடாமல் தென்மேற்கு திசையில் கட்டப்பட வேண்டும். 

10. வடமேற்கு அல்லது தென் கிழக்கு பகுதிகளில் கழிவறை அமைக்கப்பட வேண்டும், வடகிழக்கு அல்லது தென் மேற்கு திசையில் அமைக்கக் கூடாது. 

11. கிணறு, போர்வெல், தண்ணீர் சம்ப், மற்றும் தண்ணீர் குட்டைகள் வட கிழக்கு பகுதியில் அமைக்கப்பட வேண்டும்.

12. மேற்கு அல்லது சற்று அருகில் மேல்நிலை டாங்கிகள் என்னும் தண்ணீர் தொட்டிகள் உருவாக்கப்பட வேண்டும், அவற்றின் உயரங்களை பராமரிக்க வேண்டும். தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு வடகிழக்கு , வடக்கு மற்றும் கிழக்கு திசைகளைத் தவிர்க்க வேண்டும். இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகும், எனவே நிலத்தடி மட்டத்திற்கு மேலே உள்ள தொட்டிகளையும் தண்ணீர் தொட்டிகளையும் நிர்மாணிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

13. கனரக இயந்திரங்களை தெற்கு, மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் அமைக்க வேண்டும். 

14. மூலப்பொருட்கள் சேமிப்பு, தொழிற்சாலைக்கு உள்ளே அல்லது வெளியே, தெற்கு அல்லது மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் அமைக்கப்பட வேண்டும்.

15. தயாரிப்பின் கீழ் உள்ள பொருட்கள் மற்றும் முற்று பெறாத பொருட்கள் மேற்கு திசையில் வைக்கப்பட வேண்டும்.

16. தயாரிப்பு முற்று பெற்ற பொருட்கள் வட மேற்கு மூலையில் வைக்கப்பட வேண்டும். இதனால் சரக்கு விரைவாக வெளியேற்றப்படும்.

17. வாயிலின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் எடை சரிபார்க்கும் இயந்திரம் அமைக்கப்பட வேண்டும். ஏனென்றால் அந்த பகுதி நிரந்தர எடைக்கு உட்பட்டதாக இருக்காது.

18. ட்ரான்ஸ்பார்மர், ஜெனரேட்டர் , மோட்டார், பாய்லர், உலை, எண்ணெய் எஞ்சின் போன்றவற்றை தென்கிழக்கு அல்லது தென் கிழக்கிற்கு சற்று நெருக்கமாக வைக்கலாம்.