முக பொலிவிற்கு அக்ரூட் பருப்புகள்
அக்ரூட் பருப்புகள் எல்லா பருப்புகளையும் விட அளவிலும் ஊட்டச்சத்திலும் பெரியது. பல நன்மைகள் இந்த அக்ரூட் பருப்பில் இருக்கின்றன. புரதம், நல்ல கொழுப்பு, ஆன்டிஆக்ஸிடென்ட் , நார்ச்சத்து, மினெரல் என்று எல்லாவற்றையும் ஒரே உணவில் பெறுவதற்கு அக்ருட் தவிர வேறு எந்த பொருளையும் உண்ணுவது தீர்வாகாது.
அழகான சருமம் பெற ஏன் அக்ரூட்டை பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்விக்கான பதில்கள் இதோ;
உடல் ஆரோக்கியத்தில் மட்டும் அல்ல, சரும பொலிவிற்கும் இதன் பங்கு இன்றியமையாதது.
ஊட்டச்சத்துள்ள சருமம் :
அக்ரூட் பருப்பில் உள்ள நார்ச்சத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.
ஆரோக்கியமான பொலிவு:
அக்ருட்டில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமத்தை ஆரோக்கியத்துடன் மற்றும் இளமையுடன் வைக்க உதவுகிறது. ஈரப்பதத்தை தக்க வைத்து , நச்சுக்கள் சருமத்திற்குள் வராமல் தடுக்கிறது.
வடுக்கள் குறைய உதவுகிறது :
புரதம் என்பது சருமத்தின் கட்டுமான தொகுதியாகும். அக்ரூட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் புரதம் அதிக அளவில் சேர்ந்து, காயங்களை சரிசெய்து அதன் வடுக்களை விரைவாக மறைய செய்கிறது.
சரும சேதத்தை தடுக்கிறது :
சருமத்தின் எதிரியான தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து போராடும் தன்மை அக்ரூட் பருப்பிற்கு இருக்கிறது. சருமம் வலிமையாக இருக்கும்போது, வெளியில் இருக்கும் தூசு, மாசு, மற்றும் புற ஊதா கதிர்கள் சருமத்தை பாதிக்காது.
சருமத்தை திடமாக்குகிறது:
உங்கள் இளமையான தோற்றத்தை நிரந்தரமாக்க அக்ரூட் பருப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த பருப்பில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள அதிக நீரை வெளியேற்றுகிறது. சருமம் தளர்ச்சி இல்லாமல் திடமாக இருக்க அக்ரூட்டை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
அக்ரூட்டை உண்பதால் மட்டும் அல்ல ஸ்கரப்பாகவும் இதனை பயன்படுத்தி முக பொலிவை உண்டாக்கலாம். இங்கே அக்ரூட் பருப்பை பயன்படுத்தி முகத்திற்கு பொலிவை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இப்போது காணலாம்.
* சர்க்கரை மற்றும் அக்ரூட் ஸ்க்ரப் :
அக்ரூட்டை தூளாக்கி அதனுடன் சிறிதளவு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தேய்க்கவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
* தயிர் மற்றும் அக்ரூட் பேக் :
அக்ரூட் துகளுடன் சிறிது தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை முகத்தில் நன்றாக தடவவும்.15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி முகம் பளிச்சிடும்.
* தேன் , எண்ணெய் மற்றும் அக்ரூட் ஸ்க்ரப்:
இதற்கு தேங்காய் எண்ணெய், ஆலிவ் என்னை அல்லது பாதாம் எண்ணெய் - எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எண்ணெய், சிறிது அக்ரூட் துகள்கள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு அந்த கலவையை முகத்தில் மசாஜ் செய்யவும்.. இதனால் மென்மையான மற்றும் பிரகாசமான சருமம் வெளிப்படும்
முக பொலிவிற்கு பயன்படுத்தும் எந்த ஒரு மூல பொருளோடும் அக்ரூட்டை சேர்த்து பயன்படுத்தி முக அழகை மீட்டெடுக்கலாம்.