செலியாக் என்னும் உடற்குழி நோய் என்றால் என்ன?

கடந்த காலங்களில் இந்த நோய் பாதிப்பு இந்தியாவில் மிகக் குறைந்த  அளவு இருந்தபோதிலும், தற்போதைய ஆய்வுப்படி, ஒவ்வொரு இருபது ஆண்டுகளிலும் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

செலியாக் என்னும்  உடற்குழி நோய் என்றால் என்ன?

செலியாக் என்னும் உடற்குழி நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை முறைகள் உடற்குழி நோய் என்பது தன்னுணர்வு நோய் வகையைச் சார்ந்த செரிமான கோளாறாகும். இதனைக் கோதுமை புரத ஒவ்வாமை நோய் என்றும் அழைக்கலாம். உடற்குழி நோய் உள்ளவர்களுக்கு க்ளுடன் சேர்க்கப்பட்ட உணவுகளில் ஒவ்வாமை இருக்கும். அதனால் இந்நோயை க்ளுடன் உணர்திறன் குடல் நோய் என்றும் அழைப்பார்கள். க்ளுடன் என்பது தானியங்களில் காணப்படும் ஒரு வகைப் புரதம் ஆகும். இருப்பினும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பார்லி, கம்பு, கோதுமை போன்றவற்றில் உள்ள க்ளுடன் கூறுகளுக்கு பெரும்பாலும் எதிர்வினை புரிவார்கள்.

க்ளுடன் உட்கொள்ளலுக்கு ஒரு மனிதனின் எதிர்வினைக்கான காரணம் குறிப்பாக அறியப்படவில்லை என்றாலும், ஒரு நபரின் உணவில் உள்ள க்ளுடன் அளவிற்கு நோயெதிர்ப்பு மண்டலம் எதிர்வினை புரியும்  நிலை ஒரு காரணமாக இருக்கலாம் . இந்த எதிர்வினை காரணமாக குடல் சவ்வின் மேல் உள்ள மயிர் போன்ற உறுப்புகள் சேதம் அடைகின்றன.

ரவை, பாஸ்தா, ஓட்ஸ், பிரட், நூடுல்ஸ் , பிஸ்சா, பிஸ்கட், பாஸ்த்ரி போன்ற உணவுகள் க்ளுடன் அதிகம் உள்ள உணவுகளாக அறியப்படுகின்றன.

இந்த நோய் தென்னிந்தியாவைக் காட்டிலும் வடஇந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் இவர்களின் நிரந்தர உணவு கோதுமை ஆகும். 

இந்த தன்னுணர்வு நோய்க்கான காரணம், இதன் அறிகுறிகள் மற்றும் ஆயுர்வேதத்தில் இதன் சிகிச்சை முறை போன்றவற்றை அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

உடற்குழி நோய் என்றால் என்ன?

சிறு குடல் சவ்வுகளில் ஏற்பட்ட சேதம் காரணமாக செரிமானம் தொடர்பான கோளாறுகள் ஏற்படக் காரணமாக இருப்பது இந்த நாட்பட்ட செரிமான கோளாறான உடற்குழி நோய் ஆகும். உடற்குழி நோயால் பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு அவருடைய நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, நோய்களுடன் போராடும் வெள்ளை அணுக்கள் தனது சொந்த திசுக்களை தாக்குவதற்கு காரணமாக மாறுகின்றன. க்ளுடன் உட்கொள்ளல் அதிகரிக்கும்போது, வெள்ளை அணுக்கள் சிறு குடல் சவ்வுகளை சேதம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த கோளாறின் காரணமாக ஊட்டச்சத்துகள் மற்றும் கனிமங்கள் குறைவாக உறிஞ்சப்படுகின்றன.

க்ளுடன் உட்கொள்வதால் தடுப்பாற்றலில் எதிர்வினை அதிகரிக்கும் காரணமாக, சிறு குடல் உட்புற சவ்வுகளில் சேதம் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு வளர்ச்சி குன்றிய நிலை இந்த பாதிப்பால் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு உடல் குறுகிய நிலை உண்டாகிறது. 

உடற்குழி நோயின் அறிகுறிகள் :

1. எடை இழப்பு
2. வயிற்றுப்போக்கு 
3. சோர்வு
4. சருமத்தில் தடிப்பு
5. அடிவயிற்றில் வலி
6. வயிறு வீக்கம்
7. பலவீனமான எலும்புகள் மற்றும் இரத்த சோகை காரணமாக உறிஞ்சுவதில் குறைபாடு
8. கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு

உடற்குழி நோய் பற்றி ஆயுர்வேதத்தின் பார்வை:
ஆயுர்வேத அடிப்படையில், செலியாக் நோய் சில உடல் சக்திகளின் ஏற்றத்தாழ்வுகளை குறிக்கிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான அமைப்பு மிகவும் பலவீனமடைகிறது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ஆயுர்வேதம் மூலிகைகளை பெருமளவில் நம்புகிறது. காரணம் , மூலிகைகள் நோயெதிர்ப்பு திறன் மாற்றிகளாக (immunomodulators) அறியப்படுகின்றன. இதன் குறிக்கோள் , நோயெதிர்ப்பு மண்டலத்தை சமநிலை செய்வது, குடல் சவ்வு மயிர்களை புதுப்பிப்பதும் இதன் நோக்கமாகும். இந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள், சிகிச்சையின் தொடக்க காலத்தில் க்ளுடன் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தொடர்ந்து சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதால், படிப்படியாக அவர்கள் உணவில் க்ளுடனை இணைத்துக் கொள்ளலாம்.

அசாதாரணமான நிலையில் இயங்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வழக்கமான முறையில் இயங்க வைப்பதே ஆயுர்வேத சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். உடலில் இருந்து சரியான முறையில் நச்சுகள் வெளியேறுவதும் ஒரு வகையில் பல வித நோய்களைப் போக்கும் சிறந்த வழியாகும். ஆயுர்வேதம் உடற்குழி நோயை கிராணியின் கீழ் வகைப்படுத்துகிறது. மனித உடலின் அக்னி (செரிமான சக்தி) யில் ஏற்படும் அசாதாரண நிலை காரணமாக இந்த நிலை ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இதில், கிராணி என்பது ஒரு பாத்திரமாகவும், அக்னி என்பது அதன் உள்ளடக்கமாகவும் குறிக்கப்படுகிறது. இவற்றில் ஒன்றில் எதாவது தொந்தரவு ஏற்பட்டாலும் மற்றொன்றும் பாதிக்கப்படும்.

செரிமான சக்தி என்னும் அக்னி வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதால், செரிமான சவ்வின் மயிர்கள் ஆரோக்கியமாக இருக்கும். அவைகள் முழுமையான ஒருங்கிணைப்புகளை பராமரித்து, செரிமானம், உறிஞ்சுதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகிய செயல்களைச் சிறப்பாகச் செய்ய முடியும். அக்னியில் சமநிலை குறையும்போது, குடல் சவ்வு மயிர்கள் பாதிக்கப்பட்டு, உடற்குழி நோய் உண்டாகிறது. பொதுவாக க்ளுடன் என்பது அடர்த்தியாக, ஒட்டும்தன்மையுடன், எண்ணெயத்தன்மையுடன் , மந்தமாக இருப்பதால் செரிமான சக்தி என்னும் அக்னி குறைவாக உண்டாகிறது. இதனால் அமா என்று ஆயுர்வேதத்தில் அழைக்கப்படும் நச்சுகள் உற்பத்தியாகிறது.

செலியாக் என்னும் உடற்குழி நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஆயுர்வேதம் சிலவற்றை பரிந்துரை செய்கிறது.

 . கனமான , எண்ணெய்த் தன்மை அதிகமாக உள்ள , க்ளுடன் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கலாம்.
 . புதிதாக தயாரிக்கபட்ட மோரில் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தொடர்ந்து பருகலாம். இதனால் அக்னி அதிகரித்து, ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அதிகரிக்கிறது.
 . லேசான மற்றும் எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளான பச்சை பயிறு சூப், அரிசி கஞ்சி போன்றவற்றைப் பருகலாம். உங்கள் செரிமான சக்தி அதிகரிப்பதை உங்களால் உணர முடிந்தால், மெதுவாக திட உணவுகளை எடுத்துக் கொள்ளத் துவங்கலாம்.
 . கொத்துமல்லி விதை எனப்படும் தனியா, சீரகம், இஞ்சி தூள் சேர்த்து கொதிக்க வைத்த நீரை அவ்வப்போது பருகி வரலாம்.
 . மாதுளை மற்றும் வில்வப் பழம் அடிக்கடி சாப்பிடலாம்.

செலியாக் நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை :
க்ளுடன் சகிப்புத்தன்மை இன்மையை சிறப்பான முறையில் அகற்றும் சில ஆயுர்வேத மூலிகைகள் கீழே உள்ள பட்டியலில் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது காணலாம்.

1. குட்கி என்னும் கடுகுரோகினி :
பல்வேறு மருத்துவ நிலைகளுக்கு நல்ல பலனளிக்கும் ஒரு ஆயுர்வேத மூலிகை கடுகுரோகினி. இந்த மூலிகை கல்லீரல்சார் பாதுகாப்புத் தன்மையைக் கொண்டிருப்பதால் கல்லீரலின் நிலையை மேம்படுத்த பெரிதும் பயன்படுகிறது. சிகிச்சை அளிக்கப்படாத செலியாக் நோய் காரணமாக, கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கொழுப்பான கல்லீரல், கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம். எனவே செலியாக் நோய் பாதிப்பு உள்ளவர்கள், கல்லீரலை கவனமாக பாதுகாப்பதுடன், அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்வது நல்லது.
இந்த வகையில் கடுகுரோகினி நல்ல பலன் தருகிறது. இந்த செடியின் வேர் தண்டு மிகப்பெரிய அன்டிபயோடிக் தன்மை கொண்டதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. கல்லீரல் நோய்க்கான சிறந்த ஆயுர்வேத தயாரிப்பு மருந்தான ஆரோக்கியவர்தினி என்னும் மருந்தின் முக்கிய மூலப்பொருளாக கடுகுரோகினி உள்ளது.


2. கிலோய் என்னும் அமிழ்தவள்ளி :
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவும் ஒரு சிறந்த மூலிகை அமிழ்தவள்ளி. இதனால் தொற்று பாதிப்பை எதிர்த்து உடல் போராடுகிறது. பல்வேறு தொற்று பாதிப்புகளை எதிர்த்து போராடும் பண்பை உடலுக்குத் தருகிறது இந்த மூலிகை. செலியாக் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நோயெதிர்ப்பு சக்தி இந்த மூலிகை எடுத்துக் கொள்வதால் அதிகரிப்பது குறிப்பிடத் தக்கது. பல்வேறு அளவுகளில் இந்த மூலிகை நோயாளிகளுக்குக் கொடுப்பதால் நோய்த்தொற்றுகள் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக பல ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

3. வைவிடங் என்னும் வாயு விளங்கம் :
வெளிப்புறத்தில் இருந்து உடலைத் தாக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடும் திறனை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழங்கும் தன்மை இந்த ஆயுர்வேத மூலிகைக்கு உள்ளது. செரிமானத்தின் ஒட்டுமொத்த திறனையும் அதிகரிக்கும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு. செலியாக் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் ஒட்டுமொத்த செரிமான மண்டலம், பலவீனமாகி, உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் தன்மை குறைகிறது. எனவே வாயு விளங்கம் என்னும் மூலிகை பயன்படுத்துவதால், எளிதில் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுகின்றன.

4. சுக்கு :
பல்வேறு மருத்துவ நிலைகளுக்கு சுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சிறந்த உணவு செரிமானத்திற்கு சுக்கு ஒரு அருமையான பொருள். கூடுதலாக, பல்வேறு ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சவும் சுக்கு உதவுகிறது. க்ளுடன் செரிமானத்தில் கடினத்தன்மை உள்ளவர்கள், சுக்கு என்னும் மூலிகையை நம்பி பயன்படுத்தலாம்.


செலியாக் நோய்க்கான தீர்வுகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் :
செலியாக் நோயால் உங்கள் வாழ்க்கை கெடாமல் இருக்க, சில வாழ்வியல் மாற்றம் மற்றும் தீர்வுகளைப் பின்பற்றலாம். அதனைப் பற்றி இப்போது காணலாம்.

1. க்ளுடன் அற்ற உணவு :
க்ளுடன் இல்லாத உணவுகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு சிறந்த முறையாகும். உதாரணத்திற்கு கோதுமைப் பொருட்கள். மேலும் க்ளுடன் உள்ள எல்லா உணவுகளையும் தவிர்ப்பது மிகவும் கடினம் என்பதால், நீங்கள் உண்ணும் உணவின் உள்ளடக்கம் என்ன என்பது குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். ஏனென்றால், எல்லா வித தானியங்கள் மற்றும் பிரட் போன்றவற்றில் க்ளுடன் உள்ளிருப்பு இருக்கும். ஐஸ்க்ரீம், கெட்ச் அப், இனிப்பு, சோயா சாஸ், அடுமனை உணவுகள், போன்றவற்றில் க்ளுடன் இருக்கும். க்ளுடன் உள்ள பொருட்களைத் தவிர்ப்பதற்கு சிறந்த வழி, உணவுகளை வாங்கும்போது, க்ளுடன் சேர்க்கபடாத என்று அச்சிடப்பட்டிருக்கும் பொருட்களை வாங்கி உண்ணுவது நல்லது. ஹோட்டலில் சாப்பிடும்போது க்ளுடன் சேர்க்கப்படாத உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிடவும். பழங்கள், இறைச்சி, கோழி, காய்கறி போன்ற உணவுகளை அதிகம் உட்கொண்டு, பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கை உணவுகளைத் தவிர்ப்பது என்பது சிறந்த முறையில் இந்த பாதிப்பைத் தடுக்கும் ஒரு வழியாகும்.

2. பபைன் மாத்திரைகள்:
க்ளுடன் உள்ளிருப்பைத் தீர்மானிக்கும் என்சைம்களை ஊக்குவிக்கும் தன்மை பபைன் மாத்திரைகளுக்கு உண்டு. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் சீராக இயங்க முடியும். உணவு வழியாக க்ளுடன் அளவை ஓரேயடியாக குறைக்க முடியாதவர்கள், இந்த முறையைப் பின்பற்றலாம். ஆனால், இந்த மாத்திரைகள் செலியாக் நோயை முற்றிலும் போக்கும் என்பது உறுதி இல்லை.

3. யோகர்ட்:
நல்ல பக்டீரியா உற்பத்தியை யோகர்ட் ஊக்குவிக்கிறது. இதனால் செரிமான பாதை எளிதில் குணமடைகிறது. பொதுவாக செலியாக் நோயால் பாதிக்கபட்ட நோயாளிகளை அதிக அளவு யோகர்ட் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீண்ட நாட்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டதை அறியாமல் இருப்பவர்கள் கூட யோகர்ட் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். 

4. மீன் எண்ணெய் :
உங்கள் குடல் பகுதி அழற்சி ஏற்படாமல் இருக்க மீன் எண்ணெய்யை உட்கொள்ளலாம். குடல் மேல் பகுதிக்கு ஒரு மேற்பூச்சாக விளங்குவது இந்த மீன் எண்ணெய். தெரியாமல் கவனக் குறைவால் க்ளுடன் உட்கொள்பவர்களுக்கு செலியாக் அறிகுறிகள் உண்டாகாமல் தடுக்க, மீன் எண்ணெய் நல்ல பலன் தருகிறது.

5. வைட்டமின் மற்றும் கனிமங்கள்:
இரும்பு சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் டி, கே, பி 12, ஜின்க் போன்றவற்றிற்கான  சத்து மாத்திரைகள் பயன்படுத்தும்போது, அவை, க்ளுடன் அற்றவையாக உள்ளதா என்பதை உறுதி செய்து பின்பு அவற்றைப் பயன்படுத்தவும்.

6. ஹார்ஸ் டெயில் டீ:
செரிமான பாதை மற்றும் குடலின் அழற்சியைக் குறைக்கும் பண்பு ஹார்ஸ் டெயில் தேநீரில் இருப்பதாக அறியப்படுகிறது. செரிமான மண்டலத்தின் வலிமையை அதிகரிப்பதாகவும் தெரிகிறது. இந்த முறையில் உடலின் க்ளுடன் உணர்திறன் குறைகிறது.

7. மூலிகை சிகிச்சை:
ஆலிவ் இலை மற்றும் கோல்டன் சீல் சாறு நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்து நிர்வகிக்கிறது. அதனால் செலியாக் நோய் பாதிப்பில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குடல் சார்ந்த தன்னுணர்வு நோய்களைத் தடுக்கும் தீர்வுகள் மூலிகைகளில் உள்ளது. செவ்வந்திப் பூ மற்றுமொரு சிறந்த மூலிகையாக செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு உதவுகிறது.