சூரியன் என்பது என்ன ?
சூரியன் என்பது ஒரு நெருப்பு பந்து அல்ல.
சூரியனைப் பற்றி சித்தரிக்கும்போது ஒரு பெரிய நெருப்பு பந்து போல் காட்சிப்படுத்துவது நம்முடைய வழக்கம். ஆனால் உண்மையில் சூரியன் என்பது நெருப்பு பந்து அல்ல. அது ஒரு வாயு பந்தாகும். ஒவ்வொரு நொடியும் 700 மில்லியன் டன் அளவு ஹைட்ரஜன் வாயு 695 மில்லியன் டன் அளவு ஹீலியம் வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த நிகழ்வின்போது காமா கதிர்களாக ஆற்றல் வெளியிடப்படுகிறது. இது ஒளியாக மாற்றம் பெறுகிறது. அதனால் ஒளி மற்றும் வெப்பத்தை சூரியன் உமிழ்கிறது. அதில் பிராணவாயு இல்லை என்ற காரணத்தினால் அது நெருப்பு அல்ல.