வாஸ்துப்படி பணத்தை எங்கு வைக்க வேண்டும்
கட்டிடக்கலையில் இந்துக்களால் பின்பற்றப்படும் ஒரு அறிவியல் சார்ந்த ஒரு பழம் பெரும் முறை வாஸ்து . வளிமண்டலத்தின் பல்வேறு ஆற்றலில் இருந்து உருவானது இந்த வாஸ்து என்று நம்பப்படுகிறது. வாஸ்துவின் மூலம் அமைதி, நேர்மறை அதிர்வுகள் மற்றும் செல்வச் செழிப்பு ஏற்படுவதாக உணரப்படுகிறது. இன்றைய நாட்களில் பலரும் இந்த வாஸ்துவை நம்பத் தொடங்கி விட்டனர்.
வீடு அல்லது மனை வாங்கும்போது அல்லது வீடு கட்டும்போது வாஸ்து நிபுணர்களிடம் ஆலோசித்து அவர்களின் திட்டப்படி இன்று பலரும் தங்கள் வீட்டை கட்டுகின்றனர். அல்லது ஏற்கனவே கட்டிய வீடுகள புதுப்பிக்கின்றனர்.
வாஸ்துவின் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? வாஸ்து பரிந்துரைகள் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்று நம்பிக்கை உள்ளவரா நீங்கள்? ஆம் என்றால் இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள். உங்கள் செல்வச் செழிப்பு அதிகரிக்க சில முக்கியமான குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றி உங்கள் செல்வச் செழிப்பை அதிகரிக்கலாம். வாருங்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நம் அனைவருக்கும் நம்முடைய வீட்டில் பணம் மற்றும் நகைகளை சேமித்து பாதுகாப்பாக வைக்கும் பழக்கம் உண்டு. ஒரு சிலர் வாஸ்துவைப் பின்பற்றாமல் தனக்கு ஏற்ற இடங்களில் இவற்றை பாதுகாப்பாக வைப்பார்கள். ஒரு சிலர் வாஸ்துபடி பணம் மற்றும் நகைகளை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பார்கள். வளங்கள் அதிகரிக்க, நல்ல பலன்கள் அதிகம் கிடைக்க, வெற்றிகள் அதிகரிக்க, செல்வம் இரட்டிப்பாக என்று இதற்குப் பல காரணங்கள் உண்டு. பணம், நகை மற்றும் விலைமதிப்பற்ற சொத்துகள் என்று எதுவாக இருந்தாலும் இதனை வாஸ்து படி எங்கு வைத்தால் அதிகமாக பெருகும் என்பதற்கு சில குறிப்புகள் உண்டு. அதனை இப்போது பார்க்கலாம்.
வடக்கு திசை நோக்கி வைக்கலாம்:
வடக்கு திசை என்பது குபேரரின் திசையாகும். குபேரர் செல்வம் மற்றும் வளங்களின் கடவுள் ஆவார். வாஸ்துபடி, விலைமதிப்பான பொருட்களை வைக்கும் பணப் பெட்டியை வடக்கு திசை நோக்கி வைக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் இரட்டிப்பாகும் என்று நம்பப்படுகிறது.
தெற்கு திசையில் வைக்க வேண்டாம் :
பணப் பெட்டியை வடக்கு திசையில் வைத்தாலும், அதன் கதவை தெற்கு திசை நோக்கி வைக்கக் கூடாது. வளங்களின் கடவுளான லக்ஷ்மி, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்வதாக நம்பப்படுகிறது. ஆகவே அதிர்ஷ்டம் மற்றும் செல்வச் செழிப்பை அதிகரிக்க இந்த வாஸ்துவை பின்பற்றவும்.
பணப் பெட்டியை கிழக்கு நோக்கி வைக்கலாம் :
உங்கள் வீட்டின் லாக்கர் அல்லது பணப் பெட்டியை வடக்கு திசை நோக்கி வைக்க முடியாவிட்டால், கிழக்கு திசை நோக்கி வைக்கலாம். சொந்தமாக கடை வைத்து தொழில் செய்பவர்கள் அவர்கள் கடையில் பணப் பெட்டியை கிழக்கு திசை நோக்கி வைக்கலாம். பணம் பெரும் கேஷியர் தென்-மேற்கு திசை நோக்கி அமர்ந்தால் அவருடைய இடது பக்கம் பணப்பெட்டி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கிழக்கு திசை நோக்கி அமர்ந்தால், அவருடைய வலது பக்கம் பணப்பெட்டி இருக்க வேண்டும்.
அறையின் நான்கு மூலைகளில் ஒன்றில் பணப்பெட்டியை வைக்க வேண்டாம்:
ஒரு அறையின் நான்கு மூலைகளில் எதாவது ஒன்றில் பணப்பெட்டியை வைக்க வேண்டாம். குறிப்பாக வட கிழக்கு, தென் கிழக்கு அல்லது தென் மேற்கு மூலையில் வைக்க வேண்டாம். உங்கள் பணப்பெட்டி வடக்கு திசை நோக்கி திறப்பதை போல் வைக்க வேண்டும். தெற்கு திசை நோக்கி வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் துரதிர்ஷ்டம் ஏற்படுகிறது மற்றும் பணத் தட்டுப்பாடு ஏற்படுவதாகும் நம்பப்படுகிறது.
பூஜை அறையில் பணப்பெட்டியை வைக்க வேண்டாம் :
வாஸ்து படி, பூஜை அறையில் பணப்பெட்டி அல்லது லாக்கரை வைக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கான சரியான விளக்கம் கிடக்கவில்லை. ஒரு வேளை, உங்கள் படுக்கை அறையுடன் அல்லது உடை மாற்றும் அறையுடன் பூஜை அறையும் இணைக்கப்பட்டிருந்தால் அங்குள்ள வார்டுரோபில் அலல்து அலமாரியில் பணப்பெட்டியை வைத்துக் கொள்ளலாம்.
வாசல் கதவு அல்லது வெளி வாசல் கதவில் இருந்து பார்த்தால் பணப்பெட்டி தெரியக் கூடாது :
உங்கள் வீட்டின் கேட் அல்லது வாசல் கதவில் இருக்கும் பார்க்கும் போது உங்கள் பணப்பெட்டி தெரிந்தால், உங்கள் செல்வம் கரைந்து விடும். வாசல் கதவின் முன், லாக்கரை திறந்து பணத்தை எடுப்பதால், செல்வம் வாசல் தாண்டி வெளியில் போகும் என்று வாஸ்துவில் நம்பப்படுகிறது. அது நல்ல அறிகுறி இல்லை. மேலும், வாஸ்துபடி, பணப்பெட்டியை கழிவறை, குளியலறை, சமையலறை, பேஸ்மென்ட், மாடிப்படி, ஸ்டோர் ரூம் போன்றவற்றை நோக்கி வைக்கக் கூடாது.
உங்கள் பணப்பெட்டிய பராமரிப்பதற்கான மற்ற குறிப்புகள்:
தூய்மையான மற்றும் நன்றாக பராமரிக்கப்படும் இடத்தில் தான் செல்வம் சேரும். ஆகவே உங்கள் பணப்பெட்டியை எப்போது சுத்தமாக மற்றும் நல்ல முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் உள்ள பணப்பெட்டியின் உள்ளே வடக்கு திசையில் திருமகள் லக்ஷ்மி அமர்ந்த நிலையில் உள்ள உருவம் கொண்ட ஒரு வெள்ளி நாணயத்தை வைக்க வேண்டும்.
பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் போது எந்த ஒரு கோப்பு மற்றும் ஆவணத்துடன் இணைத்தும் வைக்க வேண்டாம்.
எப்போதும் உங்கள் பணப்பெட்டியை காலியாக வைக்க வேண்டாம்.
குறைந்த பட்சம் ஒரு ரூபாயாவது பணப்பெட்டியில் இருக்க வேண்டும்.
உங்கள் வீட்டின் முதல் மற்றும் கடைசி அறையில் பணப்பெட்டி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெண்டிலேடர் அல்லது ஜன்னல் அருகில் பணப்பெட்டியை வைக்க வேண்டாம். இப்படி இருப்பது , செல்வம் உங்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று விடும் என்பதைக் குறிக்கிறது.
நல்ல வெளிச்சமான மற்றும் நேர்மறை அதிர்வுகள் அதிகம் உள்ள அறையில் பணத்தை வைப்பதால் அது இரட்டிப்பாவதுடன் அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்கும் என்று வாஸ்துவின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.